வகுப்பு :9,10,11 மற்றும் 12
தமிழ் மற்றும் ஆங்கில வழி
👆
பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி சான்றை ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ப ள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி சான்றை ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், பள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அரசின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
7 ஆண்டுகள் முடிந்து டெட் சான்றிதழ் காலாவதியான நிலையில் உள்ள விண்ணப்பதாரர்களை மறுமதிப்பீடு செய்ய அல்லது புதிய டெட் சான்றிதழ்களை வழங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அப்போதைய மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசாணை எண் 128, பள்ளிக் கல்வித்துறை, 23.08.2021 மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை அரசின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார். இதற்காகத் தனியாகச் சான்றிதழ் பெற வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசாணை👉Click Here
தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று (21.08.2021) தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு, செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செப்.1 முதல் 9 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்
அதன்படி, ''செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11, 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்.
மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதைக் கவனித்து அதன் அடிப்படையில் மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 5-க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்'' என்று தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
💢💢💢💢💢💢💢
தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவு எண்ணைப் பதிவிட்டு மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய
கிளிக் பண்ணுங்க👇
தழிழ்நாடு B.E/B.Tech சேர்க்கை விண்ணப்பிக்க கடைசிநாள் 24/8/2021
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் NET தேர்வுக்கு செப்-5 வரை https://ugcnet.nta.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 டிசம்பர் ,2021 ஜூன் மாதங்களில் நடத்தப்பட இருந்த NET தேர்வுகள் ஒரே கட்டமாக அக்டோபர் 6 முதல் 11 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: முதுகலை பட்டம்
உதவித்தொகை பெறுவதற்கும், உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கும் NET தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசிநாள்-5/9/3021
விண்ணப்பிக்க 👇
🙏
10 மற்றும் 11 வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர்-2021 தனிதேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 11/8/2021
..................................................................
SEPT.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின்.
.............
தமிழக முதல்வர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாகப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாகத் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் online வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் (Standard Operating Procedure) பின்பற்றிப் பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.மேலும், கட்டுப்பாடுகளுடன் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
🙏
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (4-8-2021) தலைமைச் செயலகத்தில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, வரும் 13-8-2021 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
அதோடு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென்று ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவாறு, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வு பெற்ற மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. த. முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப்போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🙏
💢💢💢💢💢💢💢
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து முறையாக பெற்ற இளங்கலை, முதுகலை பட்டம் அரசுப்பணி மற்றும் பதவி உயர்வுக்கு செல்லுபடியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திறந்தநிலை பல்கலைக்கழகத்திலிருந்து முறையாக அதாவது பத்தாவது மற்றும் பிளஸ் டூவுக்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்தால், அது மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பை போலவே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
1.TNOU-பதிவாளரின் அறிவிப்பு
2.நியமன அங்கீகரம் ஆணை
3.பதவி உயர்வு அங்கீகரம் ஆணை
👇
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
BASIC DETAILS RELATING TO ADMISSION OF 5 YEARS. INTEGRATED LAW DEGREE COURSES, 2021-2022
(Detailed information relating to Admission Process shall be
provided in the Official Website on 04th August 2021)
மத்திய துணை ராணுவப் படைப்பிரிவுகளில் காலியாக உள்ள 25,271 கான்ஸ்டபில் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Constables(CAPFS)
காலியிடங்கள்: 25,271
சம்பளம்: மாதம் ரூ.27,700 - 69,100
பெண்கள்: 800 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல்கட்ட எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, சேலம், திருச்சி, வேலூர், திருநெல்வேலி.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2021
மேலும் விவரங்களுக்கு https://ssc.nic.in.
இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து, வருமானச் சான்றிதழ் ,சாதிச் சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்விதக் கால தாமதமுமின்றி உடனடியாகப் பரிசீலித்து, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து இ-சேவை மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளை கூட்ட நெரிசல் இன்றி பெற்றுச்செல்ல ஏதுவாக குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றி சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.
சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினைத் தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது எனவும் வருவாய்த்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Apply Certificates online
👉 https://www.tnesevai.tn.gov.in
🙏