Search This Blog

Showing posts with label School reopen 2021. Show all posts
Showing posts with label School reopen 2021. Show all posts

21/08/2021

செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு முதல்வர் அறிவிப்பு.

 


தற்போது தமிழ்நாட்டில்‌ நடைமுறையில்‌ உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும்‌ நிலையில்‌, மாநிலத்தில்‌ மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப்‌ பரவலின்‌ தன்மை, அண்டை மாநிலங்களில்‌ நோய்த்தொற்றின்‌ தாக்கம்‌, ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும்‌ கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின்‌ செயலாக்கம்‌ குறித்து இன்று (21.08.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌ முதல்வர்‌ ஸ்டாலின் தலைமையில்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ உயர் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு, செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செப்.1 முதல் 9 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், மதிய உணவுத்‌ திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்

அதன்படி, ''செப்டம்பர் 1 முதல்‌ பள்ளிகளில்‌ 9, 10, 11, 12ஆம்‌ வகுப்புகள்‌ சுழற்சி முறையில்‌, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி, செயல்படும்‌. இப்பள்ளிகளில்‌ மதிய உணவுத்‌ திட்டமும்‌ உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மேற்படி உயர்‌ வகுப்புகள்‌ செயல்படுவதைக் கவனித்து அதன்‌ அடிப்படையில்‌ மழலையர்‌ வகுப்புகள்‌, 1 முதல்‌ 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 5-க்குப்‌ பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்'' என்று தமிழக முதல்வர் அவர்கள்  தெரிவித்துள்ளார்கள்.

💢💢💢💢💢💢💢