Search This Blog

30/06/2021

குமரி மைந்தன் சைலேந்திர பாபு ஐபிஎஸ் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக நியமனம்


தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய டிஜிபி ஏ.கே. திரிபாதி நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ளதை அடுத்து சைலேந்திரபாபு அந்த பொறுப்பை கவனிக்க உள்ளார்.

சைலேந்திரபாபு பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை. 58 வயது நிறைந்த இவர் 1987ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அரசுப்பள்ளியில் பயின்றவர். விவசாயத்தில் முதுகலை அறிவியல் பட்டம், எம்பிஏ மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை முடித்தவர். சைபர்கிரைம் ஆய்வுப்படிப்பையும் முடித்துள்ளார். 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி பிறந்த இவர், தனது 25வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக 1987ம் ஆண்டு தமிழக காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.




27/06/2021

NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION (II), 2021.

  





(c) Educational Qualifications: 

(i) For Army Wing of National Defence Academy :—12th Class 

pass of the 10+2 pattern of School Education or equivalent examination conducted by a State Education Board or a University. 

(ii) For Air Force and Naval Wings of National Defence 

Academy and for the 10+2 Cadet Entry Scheme at the Indian 

Naval Academy :—12th Class pass with Physics, Chemistry and 

Mathematics of the 10+2 pattern of School Education or equivalent 

conducted by a State Education Board or a University. 

Candidates who are appearing in the 12th Class under the 10+2 

pattern of School Education or equivalent examination can also 

apply for this examination.



For more details :   https://www.upsc.gov.in


26/06/2021

12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை.

 

12-ம் வகுப்பு மாணவர்களுQக்கு மதிப்பெண் வழங்கும் முறை கணக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

        முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''கரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காகப் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்துள்ளது.

10, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக் கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி மதிப்பெண் கணக்கீடு முறை:

1. 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) - 50%

2. 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை (Written) மதிப்பெண் மட்டும்) - 20%

3. 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு (Practical) / அக மதிப்பீடு (Internal) - 30%

· 12ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

· செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு (Extrapolated to 30 Marks) முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

· 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.

· கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ, அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு, 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும்.

· 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

· ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு, உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.

இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாற நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும்.

· தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கரோனா பெருந்தொற்றுப் பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து, தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். இத்தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

M.Phil படிப்பு ரத்து: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு...!

 

சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) அனைத்து பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகள், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18-ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 2021- 22ஆம் கல்வியாண்டில் இருந்து முழு நேர மற்றும் பகுதி நேர எம்.பில். படிப்புகள் ரத்து செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகள், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும். இந்தக் கல்வியாண்டில் இருந்து எந்தவொரு கல்லூரியும் எம்.பில். சேர்க்கையை அனுமதிக்கவோ ஊக்குவிக்கவோ கூடாது. எனினும் முந்தைய ஆண்டுகளில் எம்.பில். படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் அவர்களின் படிப்பை முடித்துக் கொள்ளலாம். எனினும் அதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ள குறிப்பிட்ட காலக்கெடுவில் படிப்பை முடிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைப்படி அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் எம்.பில். படிப்பு  ரத்து செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


                                      🙏






17/06/2021

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்..?

 






தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா என தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2003ம் ஆண்டுக்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன. எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதனை அப்போதைய அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனையடுத்து, அனைத்து அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடினர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக இதனை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவித்தது. அதன்படி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆய்வறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


13/06/2021

12ஆம் பாடம் வகுப்பு *கணித பாடம்* சம்பந்தப்பட்ட அனைத்தும் *ஒரே செயலியில்* (Mobile App : *T N 1 2 M A T H*

 




12ஆம் வகுப்பு செல்லவிருக்கும் மாணவ-மாணவிகளுக்கான *கணித பாடம்* சம்பந்தப்பட்ட அனைத்தும் *ஒரே செயலியில்* (Mobile App : *T N 1 2 M A T H* )


(+2 போதிக்கும் கணித ஆசிரியர்களின் *Quick Reference* க்கான Mobile App...)


# பயிற்சி & எ.கா. கணக்குகளுக்கான YouTube வீடியோ விளக்கங்கள்


# பயிற்சி கணக்குகளுக்கான தீர்வுகள் PDF File வடிவில்


# PDF fileகளை Download & Share செய்து கொள்ளும் வசதியுடன்...


# One word questions - PDF files & Google Forms  வடிவங்களில்...


# வினா வங்கி - அரசு பொதுத் தேர்வு வினாத்தாள்கள், PTA Question papers, Lesson wise questions...


#  கல்வி தொலைக்காட்சி (வீட்டுப்பள்ளி வீடியோக்கள்)


# பாடப் புத்தகங்கள், தீர்வு புத்தகம், குறைந்த பட்ச கற்றல் கையேடுகள்....


# விரைவில் மேலும் பல +2 கணித பாட தொகுப்புகளுடன்...


# *App Size : 7.5 MB* மட்டுமே...


https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_yu_ess_ess.Math_12th_Standard


+2 மாணவர்களும், போதிக்கும் ஆசிரியர்களும் Google Play Store ல் இருந்து TN12MATH app யை Install செய்து பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...


மாணவர்களின் பயன்பாட்டிற்காக Study Materials தயாரித்து அளித்த ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் 

நன்றி... 🙏🙏🙏


- உ. சண்முக சுந்தரம்,

முதுகலை கணித ஆசிரியர்,

இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி,

இலஞ்சி,

தென்காசி மாவட்டம் -



என்னுடைய பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளுங்கள்,பகிருங்கள், என்றும் அன்புடன் 

சு.சரவணன்,

முதுகலை கணித ஆசிரியர்,

அரசு மேல்நிலைப்பள்ளி,

ஆனைகுளம்.

சுரண்டை(வழி)

தென்காசி மாவட்டம்.

PINCODE : 627859


12/06/2021

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

 தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன்கூடிய  முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


இந்த முழு ஊரடங்கு 14-ந்தேதி முடிகிறது. அதற்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க செய்யலாமா? அல்லது விலக்கி கொள்ளலாமா? என்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கொரோனா நிலவரம் மற்றும் அதிகாரிகள் வழங்கிய பரிந்துரைகளை ஆராயந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து அறிவித்துள்ளார்.

27 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


11/06/2021

தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர தகுதியில்லை என்ற விதிக்கு இடைக்கால தடை



தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர தகுதியில்லை என்ற விதிக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி தேர்வுக்குழு, கொள்கை விளக்க குறிப்பேட்டை வெளியிட்டது.

அதில், தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் படித்தவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படிப்புக்கு விண்ணப்பித்து, கோவை தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி வீரலட்சுமியிடம், டாக்டர்.எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்திடம் இருந்து தகுதிச்சான்று பெற்று சமர்ப்பிக்கும்படி, கோவை தனியார் கல்லூரி தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கொள்கை விளக்க குறிப்பேட்டில், தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் படித்தவர்கள், இப்படிப்பில் சேர தகுதியில்லை எனத் தெரிவித்துள்ளதால், பல்கலைக்கழகம், தகுதிச் சான்று தராது எனக் கூறி, சம்பந்தப்பட்ட விதியை செல்லாது என அறிவிக்க கோரி வீரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், 2019-20ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் போது, இதுபோன்ற விதி கொண்டு வரப்பட்ட போது, அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததாகவும், டில்லி உயர் நீதிமன்றம், இந்த விதியை ரத்து செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, *தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் (NIOS) படித்தவர்கள், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர தகுதியில்லை என்ற கொள்கை விளக்க குறிப்பேட்டு விதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

NIOS

* தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம்

தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling) (NIOS)) முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும்.

1989 ஆம் ஆண்டு இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கவும், மேலும் கல்வியறிவை இலகுவான வழியில் சாமானியர்கள் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனத்தினை ஏற்படுத்தியது. NIOS ஒர் தேசியவாரியம் ஆகும், இது ஊரகப்பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் உயர்நிலை (10) மற்றும் மேல் நிலை(12) தேர்வுகளை நடத்துகிறது. 

👉https://www.nios.ac.in/

09/06/2021

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு ரத்து..!

தமிழகத்தில் 2021-2022 ஆம்‌ கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசு வெளியீடு ஜூன் 3வது வாரத்தில் இருந்து 11ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


அரசு மற்றும்‌ உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல்‌ மாணவர்கள்‌ சேர்க்கை கோரும்‌ நிலையில்‌ கோவிட்‌-19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும்‌ 10 முதல்‌ 15 சதவீதம்‌ கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம்‌.

அதிகப்படியன விண்ணப்பங்கள்‌ எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அச்சூழ்நிலையில்‌ அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 வினாக்கள்‌ (கொள்குறிவகை) அந்தந்த பள்ளி ஆசிரியர்களால்‌ தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி, அவற்றில்‌ பெறும்‌ மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ மிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்‌ என்று அரசு நேற்று அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் தமிழகத்தில் 11-ம் வகுப்பில் சேர பள்ளி அளவிலான தேர்வு நடத்தப்படும் என்று கூறிய நிலையில் உத்தரவை திரும்பப்பெற்றது தமிழக அரசு. மேலும் மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11-ம் வகுப்பில் சேர்க்கை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறியுள்ளது.

05/06/2021

TN பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவிப்பு.



தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் காரணமாக பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் இப்பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே செய்து, அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களின் கல்வியிலும், பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு, பொதுத் தேர்வுகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் கலந்து ஆலோசித்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இப்பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக, ஒன்றிய அரசு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடக்கவிருந்த பொதுத்தேர்வை ஏற்கெனவே ரத்து செய்துள்ளது.

பல்வேறு மாநிலங்களும் இதே காரணத்திற்காக, தத்தமது மாநில பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன. இப்பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து, கடந்த மூன்று தினங்களாக பள்ளியளவில் தொடங்கி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொது சுகாதாரம் மற்றும் உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் கருத்துக்கள் கவனமுடன் கேட்டறியப்பட்டன. பல்வேறு தரப்பினரும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆதரவாகவும், மறுத்தும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும், அனைத்துத் தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளனர்.

கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் தீவிரமாக இருந்து வருகிறது, இதைத் தொடர்ந்து மூன்றாவது அலையும் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தற்போதுள்ள விதிகளின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்ற நடைமுறை இருப்பதால் அவ்வயதுக்குக் குறைவான, தடுப்பூசி போடப்படாத மாணவர்களை தேர்வு எழுத ஒரே நேரத்தில் வரச்செய்வது, தொற்றினை அதிகரிக்கச் செய்யலாம் என்றும் வல்லுநர்கள் அறிவுரைகளை வழங்கியுள்ளனர். மாநில கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டுமே உயர்கல்வி வாய்ப்புகளுக்கான தகுதியாக கருதப்பட வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இந்த அரசு உறுதியாக இருப்பினும், தேர்வினை மேலும் தள்ளிவைப்பது, மாணவர்களை மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்று மருத்துவர்கள் கருதுவதால், அவர்களது அறிவுரை 2 மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும். பெருந்தொற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அகில இந்திய அளவில் நடத்தப்படும் "நீட்'' போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது. இது குறித்த அறிவிப்புகள் இதுவரை எதுவும் வெளிவராத நிலையில், உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மாணவர்களின் உடல் நலன் மற்றும் மனநலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், மாநில கல்வித் திட்ட அடிப்படையில், உயர்கல்வி சேர்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்யும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

01/06/2021

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து...!



 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தோவை ரத்து செய்தும், மே 4-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பிளஸ் 2 தோவுகளை ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஓரிரு நாள்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன்பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில்,

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் விரைவில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும்.

மாணவர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்த பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டியுள்ளது.

இதுபோன்ற மன அழுத்தம் நிறைந்த சூழலில் மாணவர்களை தேர்வு எழுத கட்டாயப்படுத்த முடியாது என்பதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு, அதற்கான சூழல் வரும்போது தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு வந்த பிறகு தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

நன்றி

🙏

14/05/2021

12 STD , MATHS, VOLUME I, T/M ,BY P. ANURADHA MADAM

                               


    12:STD

MATHS

 VOLUME I 

T/M 

NOTES

BY P. ANURADHA  MADAM


  பாடம் -1      Click Here

  பாடம் -2      Click Here

  பாடம் -3      Click Here

  பாடம் -4      Click Here

  பாடம் -5      Click Here

  பாடம் -6      Click Here



THANK YOU 
P.ANURADHA MADAM
🙏

08/05/2021

தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கரோனா நோயாளிகளுக்கான மருந்து DRDO கண்டுபிடிப்பு பயன்படுத்த மத்திய அரசு ஒப்பதல்.



தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கரோனா நோயாளிகளுக்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளது மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation).

இந்த மருந்துக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும் அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. இது கரோனா சிகிச்சையில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா 2வது அலை இந்தியாவைத் திணறடித்துக் கொண்டிருக்கிறது. அன்றாட பாதிப்பு 4 லட்சத்தை சர்வ சாதாரணமாகக் கடந்து செல்கிறது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சூழலில் கரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. ஸ்புட்னிக் தடுப்பூசியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்கான மருந்து என்றால் இப்போதைக்கு ரெம்டெசிவிர் மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அதனால், அந்த மருந்துக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கரோனாவுக்கு எதிராக புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இது பவுடர் வடிவில் உள்ளது. இந்த மருந்தைத் தண்ணீரில் கலக்கிக் குடிக்கலாம். இந்த மருந்தை டிஆர்டிஓ அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. இந்த மருந்துக்கு டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்த மருந்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது 110 கரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது. மருந்தை உட்கொண்ட நோயாளிகள் தொற்றிலிருந்து வேகமாகக் குணமடைவதும் தெரியவந்தது.

பின்னர் அவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நாடு முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடந்துவருகிறது. மேலும் இந்த மருந்து மருத்துவ ஆக்சிஜனை சார்ந்திருக்கும் நிலையை வெகுவாகக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மருந்து சந்தைக்கு வந்தால் ரெம்டெசிவிரை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் மாறலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.


நன்றி: இந்துதமிழ்.

ஆசிரியர் இல்லையேல் நான் இல்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பேச்சு. வீடியோ பதிவு


 

     2020 ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு சிகரம் சதீஷ் அவர்கள் ஒருங்கிணைப்பில் நடந்த கல்வியாளர் சங்கமம் நிகழ்வில் தற்போதைய கல்வி அமைச்சரின் உரை. 




இணையம் வழியாக நடந்த மேற்கண்ட நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன்
🙏


ஆசிரியர்களோடு அன்றே கைகோர்த்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீடியோ ! பதிவு !!



ஆசிரியர்களோடு அன்றே கைகோர்த்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீடியோ ! பதிவு !!


நன்றி: பன்முக. சிகரம் சதிஷ்


 


முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள்.


  
              


தமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றவுடன், இன்று (07.05.2021) காலை தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.


முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள். அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன.

அவற்றின் விவரம் பின்வருமாறு:

1. கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கையொப்பமிட்டுள்ளார்கள்.

2. தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.

3. தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.

4. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.

5. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

இதன்படி மாண்புமிகு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும்.' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு செய்தி குறிப்பு👉Click Here


28/04/2021

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவை இல்லை பள்ளி கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

 மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவை இல்லை பள்ளி கல்வித்துறை  இயக்குநர் உத்தரவு





🙏




SBI, 5237 ஜூனியர் அஸோசியட்ஸ் பணியிடங்கள் அறிவிப்பு..

 

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஜூனியர் அஸோசியட்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 5,237 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 473 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், வட்டார மொழியில் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

இந்த பதவிகளுக்கான ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ. 19,900 ஆக உள்ளது.


இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://bank.sbi/careers OR https://www.sbi.co.in/careers என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதிகள்:

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர் 01.04.2021 அன்று 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் 16.08.2021க்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி 27.04.2021 எனவும் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 17.05.2021 எனவும் எஸ்பிஐ ஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு முறை:

இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வட்டார மொழி தகுதித் தேர்வு மூன்று படிநிலைகள் உண்டு. இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு:

முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 190 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம் 40 நிமிடங்கள். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே வேலை கிடைக்கும். இந்த முதன்மைத் தேர்வுகள் 31.07.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் வட்டார மொழி தகுதித் தேர்வு நடைபெறும். பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.


நன்றி: Indian Express