Search This Blog

Showing posts with label ஊரடங்கு. Show all posts
Showing posts with label ஊரடங்கு. Show all posts

12/06/2021

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

 தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன்கூடிய  முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


இந்த முழு ஊரடங்கு 14-ந்தேதி முடிகிறது. அதற்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க செய்யலாமா? அல்லது விலக்கி கொள்ளலாமா? என்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கொரோனா நிலவரம் மற்றும் அதிகாரிகள் வழங்கிய பரிந்துரைகளை ஆராயந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து அறிவித்துள்ளார்.

27 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.