Search This Blog

Showing posts with label CBSE. Show all posts
Showing posts with label CBSE. Show all posts

01/06/2021

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து...!



 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தோவை ரத்து செய்தும், மே 4-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பிளஸ் 2 தோவுகளை ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஓரிரு நாள்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன்பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில்,

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் விரைவில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும்.

மாணவர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்த பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டியுள்ளது.

இதுபோன்ற மன அழுத்தம் நிறைந்த சூழலில் மாணவர்களை தேர்வு எழுத கட்டாயப்படுத்த முடியாது என்பதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு, அதற்கான சூழல் வரும்போது தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு வந்த பிறகு தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

நன்றி

🙏