Search This Blog

09/06/2021

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு ரத்து..!

தமிழகத்தில் 2021-2022 ஆம்‌ கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசு வெளியீடு ஜூன் 3வது வாரத்தில் இருந்து 11ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


அரசு மற்றும்‌ உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல்‌ மாணவர்கள்‌ சேர்க்கை கோரும்‌ நிலையில்‌ கோவிட்‌-19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும்‌ 10 முதல்‌ 15 சதவீதம்‌ கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம்‌.

அதிகப்படியன விண்ணப்பங்கள்‌ எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அச்சூழ்நிலையில்‌ அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 வினாக்கள்‌ (கொள்குறிவகை) அந்தந்த பள்ளி ஆசிரியர்களால்‌ தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி, அவற்றில்‌ பெறும்‌ மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ மிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்‌ என்று அரசு நேற்று அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் தமிழகத்தில் 11-ம் வகுப்பில் சேர பள்ளி அளவிலான தேர்வு நடத்தப்படும் என்று கூறிய நிலையில் உத்தரவை திரும்பப்பெற்றது தமிழக அரசு. மேலும் மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11-ம் வகுப்பில் சேர்க்கை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment