Search This Blog

12/09/2023

சட்டம் பயில டிச.3-ம் தேதி கிளாட் நுழைவு தேர்வு: மாணவர்கள் விண்ணப்பிக்க நவம்பர் 3 கடைசி நாள்.

 தேசிய கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு, வரும் டிச. 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின்கீழ் இந்தியா முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில்இயங்கிவரும் இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர ‘கிளாட்’ எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்எல்பி மற்றும் எல்எல்எம் படிப்புகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

அதேபோல தேசிய சட்டப்பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின்அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

இந்நிலையில், 2024-25-ம் கல்விஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க இருப்பதையொட்டி, கிளாட் தேர்வு வரும் டிச.3-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளத்தில் வரும் நவ.3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.4 ஆயிரமும், எஸ்சி, எஸ்டிபிரிவினர் ரூ.3,500-ம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8047162020 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

🔰🔰🔰🔰🔰

🙏


07/09/2023

தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு, அக்டோபர் 2023,பள்ளியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 20.09.2023.


தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு, 
அக்டோபர் 2023.
பள்ளியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க 
கடைசி நாள் : 20.09.2023.  



 

விண்ணப்ப படிவம் 

👇

 Click Here


🔰🔰🔰


🙏





04/09/2023

பி.எட். பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை. செப்.11 வரை விண்ணப்பிக்கலாம்.

 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு மற்றும் 14 உதவிபெறும் பி.எட் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை கல்வியியல் (பி.எட்) படிப்புக்கு 2,040 இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நடப்பாண்டு பி.எட் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள்    www.tngasa.in  என்ற இணையதளம் வழியாக செ. 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500, எஸ்.சி./எஸ்.டி.பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம். இணைய வசதி இல்லதவர்கள், ‘இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநரகம், சென்னை–15’ என்ற பெயரில் செப். 1-ம் தேதிக்குப் பின்னர் பெற்ற வரைவோலை எடுத்து நேரடியாக செலுத்தலாம்.


மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளின் பட்டியலைக் குறிப்பிட்டு, சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். கல்லூரிகள் மற்றும் அதில் உள்ள இடங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால் 9363462070, 9363462007, 9363462042, 9363462024 ஆகிய எண்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை மாணவர்கள் தொடர்புகொண்டு, உரிய வழிகாட்டுதல் பெறலாம். இவ்வாறு உயர்கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்க

👇

https://bed.tngasa.in/



👆


🔰🔰🔰🔰


🙏








29/08/2023

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை குரூப் பி, சி பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஆக.30 கடைசி நாள்

 மதுரை: தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரை அருகே தோப்பூரில் அமைகிறது.

இதறகான நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கட்டுமானப் பணிக்கான நிதியை கடனாக வழங்க வேண்டிய ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் இதுவரை அந்த தொகையை விடுவிக்கவில்லை. அதனால், கட்டுமானப்பணிகள் தாதமாகி கொண்டே செல்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால், கட்டுமானப் பணிகள் மட்டும் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரிக்கான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியது. ஆனால், வகுப்பறை கட்டிடம் இல்லாமல் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

எய்ம்ஸ்’ மருத்துவக் கல் லூரி கட்டி முடித்த பிறகே அந்த மாணவர்கள் மதுரைக்கு வருவார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. தற்போது முதற்கட்டமாக ‘எய்ம்ஸ்’க்கான நிர்வாக அலுவலகம் தோப்பூரில் அமைக்கப்படுகிறது. அடுத்தகட்டமாக நிர்வாக அலுவலகத்துக்கான அதிகாரிகள், பணியாளர்கள் நியமனம் தொடங்கி உள்ளது

தற்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு குரூப் பி, குரூப் சி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆக.30-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

3 Year சட்டப் படிப்பு விண்ணப்பிக்க ஆக.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

 சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் 25 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2,290 இடங்கள் உள்ளன.

இவை நடப்பு கல்வி ஆண்டு (2023-24) இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 17-ம் தேதி தொடங்கியது. இதுவரை 16,227 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் ஆகஸ்ட் 20-ம் தேதியுடன் நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது பெற்றோர், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு விதிகள், விண்ணப்ப கட்டணம் உட்படகூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம். விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் 2-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


17/08/2023

ஆக.21 முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நேரடி சேர்க்கை .

 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக.21 முதல் நேரடி சேர்க்கை - மாணவர்களுக்கு அழைப்பு


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 9,820 காலியிடங்களை நிரப்புவதற்கான நேரடி சேர்க்கை ஆக. 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 11,300 இடங்கள் உள்ளன. இதில் சேர இந்தாண்டு 2.46 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் தகுதியான மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு கடந்த மே 29-ல் தொடங்கி ஜூலை மாத இறுதி வரை நடைபெற்றது.

9,820 இடங்கள் காலி: அதன்மூலம் இளநிலை படிப்புகளில் மொத்தம் ஒரு லட்சத்து 416 இடங்கள் மட்டுமே நிரம்பின. இன்னும் 9,820 இடங்கள் நிரம் பாமல் காலியாக உள்ளன. இவற்றை நேரடி சேர்க்கை மூலம் நிரப்புவதற்கு உயர்கல்வித்துறை தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இணையதளத்தில் அறியலாம்: ‘அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான நேரடி மாணவர் சேர்க்கை ஆக.21 முதல் நடத்தப்பட உள்ளது. நிரம்பாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். எனவே, இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விவரங்களுக்கு 

👇

www.tngasa.in

🔰🔰🔰🔰


🙏






JAM-2024 Registration Closes on 13 - 10 - 2023.


 


JAM 2024 will be conducted as a Computer-Based Test in Seven test papers, namely, Biotechnology (BT), Chemistry (CY), Economics (EN), Geology (GG), Mathematics (MA), Mathematical Statistics (MS), and Physics (PH) in over 100 cities across the country. 

Candidates who have completed an undergraduate degree or currently studying in the final year of undergraduate programme are eligible to apply for JAM 2024 examination.


More info

 👇https://jam.iitm.ac.in/notification.php


🔰🔰🔰🔰


🙏





13/08/2023

CAT-2023(Common Admission Test -- Admission to Management programmes of IIMs.) Last Date: 13- 09 - 2023

 Common Admission Test (CAT) -2023

The Indian Institutes of Management will conduct a computer-based Common Admission Test 2023 (CAT 2023) on Sunday, November 26, 2023 in three sessions. CAT 2023 will be conducted by IIMs as a prerequisite for admission to various management programmes of IIMs. 


CAT 2023 ELIGIBILITY

The candidate must hold a Bachelor’s Degree, with at least 50% marks or equivalent CGPA [45% in case of candidates belonging to the Scheduled Caste (SC), Scheduled Tribe (ST) and Persons with Disability (PwD) categories], awarded by any University or educational institution as incorporated by an Act of Parliament or State legislature in India or declared to be deemed as a University under Section 3 of the UGC Act, 1956, or possess an equivalent qualification recognised by the Ministry of Education, Government of India. The percentage of marks obtained by the candidate would be calculated based on the practice as followed by the respective University/Institution. In case of grades/CGPA, the conversion to percentage of marks would be based on the procedure as certified by the respective University/Institution. If any University/Institution confirms that there is no scheme for converting CGPA into equivalent marks, the equivalence would be established by dividing the candidate’s CGPA by the maximum possible CGPA, and multiplying the result with 100.Candidates appearing for the final year of Bachelor’s degree/equivalent qualification examination and those who have completed degree requirements and are awaiting results can also apply. However, it may be noted that such candidates, if selected, will be allowed to join the programme provisionally, only if they submit a certificate from the Principal/Registrar of their University/Institution (issued on or before the date as stipulated by the respective IIM) stating that they have completed all the requirements for obtaining the Bachelor’s degree/equivalent qualification on the date of the issue of the certificate. IIMs may verify eligibility at various stages of the selection process.


CAT 2023 SCORE

Candidate's CAT 2023 scorecards will be made accessible on the CAT website. Candidates may also be intimated individually by SMS. The CAT results are likely to be declared by the second week of January, 2024. The CAT 2023 score is valid only till December 31, 2024 and will accordingly be accessible on the website. Thereafter, no queries related to the issuance of CAT 2023 scorecards will be entertained.




More info and Online application

👇

https://iimcat.ac.in/per/g01/pub/756/ASM/WebPortal/1/index.html?756@@1@@1


🙏



09/08/2023

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்:25 - 8 - 2023.

 



சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதேபோல, 28 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,820 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி (நேற்று) தொடங்கியது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தகுந்த ஆவணங்களுடன் வரும் 25-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் தெரிவித்துள்ளது.


விண்ணப்பம் 👉http://www.tnhealth.tn.gov.in/


🙏


02/08/2023

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வு.விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-8-2023

 நான் முதல்வன் திட்டத்தின்கீழ் போட்டித்தேர்வு பிரிவின்வாயிலாக யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத்  தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பிற தகவல்களுக்கு 👉https://naanmudhalvan.tn.gov.in/


✅✅✅

🙏





தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு,அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படித்து கொண்டிருப்பவர்கள்.கடைசி நாள்: 18-8-2023.

 



தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு, செப்டம்பர் 2023

கடைசி நாள்: 18-8-2023. 


அறிவிப்பு


அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 2023-2024-ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் (நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு பின்பற்றி 500 மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000/- (மாதம் ரூ.1000/- வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.


தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் இருதாள்களாக தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் நடைபெறும்.


23.09.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு 2023-2024- ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.


மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 07.08.2023 முதல் 18.08.2023 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகையாக ரூ.50/- சேர்த்து மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். 18.08.2023.


விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய👉 www.dge.tn.gov.in


🔰🔰🔰🔰🔰


🙏

01/08/2023

இந்திய விமானப் படை அக்னிவீர் வாயு பணிக்கு ஆட்சேர்க்கை ஆகஸ்ட் 17 வரை நடைபெறுகிறது.



 இந்திய விமானப் படையில் அக்னிவீர் வாயு பணிக்கு ஆட்சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியான ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் பதிவு 27-ம் தேதி தொடங்கி வரும் ஆக. 17-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது..

விண்ணப்பதாரர்கள் www.agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.


🔰🔰🔰🔰


🙏


31/07/2023

கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு.

 

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் உட்பட 31 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி.- ஏ.ஹெச்.), உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்.), பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்பு (பி.டெக்), கோழியினதொழில்நுட்ப பட்டப் படிப்பு (பி.டெக்.) ஆகிய படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது.

இந்நிலையில், மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஆன்லைனில் நேற்று வெளியானது.

அரசுப் பள்ளி மாணவர்கள்: பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் தரவரிசை பட்டியலில் அரியலூர் மாணவர் எம்.ராகுல்காந்த், தருமபுரி மாணவி வி.கனிமொழி, தென்காசி மாணவி எஸ்.முத்துலட்சுமி உள்ளிட்ட 31 பேர், 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள சேலம் மாணவர் கே.விக்னேஷ், பெரம்பலூர் மாணவர் எஸ்.அஜய் ஆகியோர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, பி.டெக். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் அரியலூர் மாணவர் விஷ்ணு பிரகாஷ் 200-க்கு 199.5 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். திருவண்ணாமலை மாணவி ஆர்.தர்ஷா (198.5), கள்ளக்குறிச்சி மாணவி வர்ண ஓவியா (198) ஆகியோர் 2, 3-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

7.5 சதவீத உள்ஒதுக்கீடு: நடப்பாண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச். படிப்பில் 45 இடங்கள், உணவுத் தொழில்நுட்பப் படிப்பில் 3 இடங்கள், பால்வளத் தொழில்நுட்பப் படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்பப் படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன


பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச் படிப்புகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் சேலம் மாணவர் கே.விக்னேஷ், பெரம்பலூர் மாணவர் எஸ்.அஜய் ஆகியோர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று முதலிடம் வகிக்கின்றனர். திருவண்ணாமலை மாணவி வி.பானுபிரியா, மதுரை மாணவி டி.நித்யா ஆகியோர் 199.5 மதிப்பெண்களும், மதுரை மாணவி பி.தாமரைசெல்வி 198.5 மதிப்பெண்ணும் பெற்று 2, 3-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

பி.டெக். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் திருவண்ணாமலை மாணவி இ.சரண்யா (197), மாணவர் ஜி.அன்பரசு (196.5), பெரம்பலூர் மாணவர் வி.சிவா (196) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

அடுத்த மாதம் கலந்தாய்வு: இந்தப் படிப்புகளுக்கு ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. சிறப்புப் பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மற்றும் பி.டெக்.படிப்புகளுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடைபெறும். மற்ற அனைத்து இடங்களும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.








இளநிலை யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க கடைசி நாள்:14_8_2023

 


இளநிலை யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.


இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பத்தை இன்றுமுதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த இரண்டு அரசு கல்லூரிகளில் 160 இடங்கள் உள்ளன. 17 தனியார் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,517 இடங்களில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இடங்கள் இருக்கிறது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 557 இடங்கள் உள்ளன.

ஐந்தரை ஆண்டுகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) 2022-23 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம்  (ஜூலை 30) தொடங்கியது. www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் ஆக. 14-ம் தேதிமாலை 5 மணி வரை விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நேரிலோ தபால் அல்லது கூரியர்மூலமாக ஆக. 14-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, சென்னை-600 106’ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடுஇடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்சேர்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.இத்தகவல்களை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை தெரிவித்துள்ளது.

28/07/2023

(PM YASASVI) Scholarship ENTRANCE TEST 2023 For 9th and 11 Students. Last Date:10-8-2023.

 PM YOUNG ACHIEVERS SCHOLARSHIP AWARD


SCHEME FOR VIBRANT INDIA FOR OBCs AND OTHERS (PM YASASVI) ENTRANCE TEST 2023

Last Date:10-8-2023







Apply online👉  Click here

More info👉 https://yet.nta.ac.in/


🔰🔰🔰🔰

24/07/2023

கால்நடை மருத்துவர்களுக்கு அதிக அளவிலான தேவை உள்ளது: பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

 



சென்னை: கால்நடை மருத்துவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் க.ந.செல்வக்குமார் தலைமை வகித்தார்.

நுண்ணறிவு துறையில் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி களைவழங்க பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் துறையின் வளர்ச்சி 1-2 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், கால்நடை துறைவளர்ச்சி 7-8 சதவீதமாக உள்ளது.

பட்டினி இல்லாத உலகம்,வறுமை ஒழிப்பு, உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு என முக்கியமான நிரந்தர வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் கால்நடை துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கால்நடை மருத்துவர்களுக்கான தேவை அதிகமாகஉள்ளது. இந்த வாய்ப்புகளைமாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.


🔰🔰🔰🔰


🙏





22/07/2023

இளநிலை பொறியியல் படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம்.

 

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள்உள்ளன.


இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஒரு லட்சத்து 87,693 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 78,959 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.


அதைத் தொடர்ந்து கலந்தாய்வு இன்று (ஜூலை 22) முதல் தொடங்குகிறது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்புப் பிரிவில் வரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கு விளையாட்டுப் பிரிவில் 38, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில் 11, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 579 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 261 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.


மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இரவு வெளியிடப்படும். அதற்கு மறுநாள் மதியம் 3 மணிக்குள் ஒப்புதல் அளித்து உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இதைத் தொடர்ந்து இதர சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் 27-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன்பின் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 28-ம் தேதி தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறும். அந்தந்த பிரிவில் வரும் மாணவர்கள் அவர்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.





21/07/2023

TN +2 Supplementary results releasing on July 24.

 





Directorate of Government Examinations, Tamil Nadu has released TN +2 Supplementary Result 2023 Date. The DGETN Class 12 supply results will be released on July 24, 2023. Candidates who have appeared for the supplementary examination can check the results through the official site of DGETN at dge.tn.gov.in.









For Results-->Click Here--


>www.dge.tn.gov.in



🔰🔰🔰🔰🔰🔰


19/07/2023

ISRO's 4 New Free Certification Courses | Join Online

 





If you are waiting for the ISRO course then we have an update for you as IIRS & ISRO Launched 4 New Free Certification Courses. In a significant stride towards promoting accessible education, the Indian Space Research Organization (ISRO) has unveiled an exciting initiative by launching four new free certification courses. These courses provide a remarkable opportunity for individuals from all walks of life to expand their knowledge and skills in various scientific and technical domains. With the convenience of online learning, anyone can now enroll in these courses and embark on a journey of self-improvement, regardless of their geographical location or educational background.

The Indian Space Research Organization has long been at the forefront of technological advancements and space exploration. With its rich experience and expertise, ISRO recognizes the value of imparting knowledge and empowering individuals with the necessary tools to contribute to the scientific community. By introducing these free certification courses, ISRO is breaking down barriers and making quality education accessible to a wider audience.

Course 1: Course-ID-120 : Course name : Satellite meteorology applications in weather and climate studies. Registration will start from 17 July 2023

The course is designed with a view to provide participants an understanding of the scientific concepts and an overview of approaches & pathways of understanding weather and climate using satellite data. The participants will also gain knowledge and ability to access, analyze, and apply satellite based data products for weather and climate studies. They will also understand the advantages and usages of satellite based meteorological observations for monitoring a variety of weather phenomenon and for operational weather services including numerical weather prediction.

Course Fee: There is no course fee for attending this programme.

Award of Certificate: Working Professionals and Students: Based on 70% attendance

To Apply for this FREE ISRO COURSE, Click Here

Course 2: Course-ID-117 : Course name : Geospatial Technology for Archeological studies. Registration will start from 17 July 2023

Geospatial technologies undeniably play a significant role in understanding and preserving archaeological histories. It has been widely used
for archaeological studies since past few decades. Archaeology refers to the study of spatial dimension of human behaviour over time. This suggests that archaeology always has a geospatial component to it. Geospatial technologies can be used for many purposes, such as historical
documentation, digital preservation and conservation, cross-comparisons, monitoring of shape and colors, simulation of aging and deterioration, virtual reality/computer graphics applications of archaeology sites. We invite you to attend this training program on Geospatial Technology for Archaeological Studies. The course is scheduled from August 07-11, 2023.

Course Fee: There is no course fee for attending this programme.
Award of Certificate: Working Professionals and Students: Based on 70% attendance

To Apply for this FREE ISRO COURSE, CLICK HERE

Course 3: One day workshop On Integration of ground-based in situ observations/measurements with EO data for enhanced Geological Applications: Advantages and Challenges

We invite you to attend this one-day online workshop on “Integration of ground-based in situ observations/measurements with EO data for enhanced Geological Applications: Advantages and Challenges”. The workshop is scheduled on July 27, 2023. The course will contain lectures covering extensive research conducted on various aspects of geological applications using integrated EO and ground-based measurements

approach. This information will help in gaining a broad perspective on geological applications in various regions of India.

Course Fee: There is no course fee for attending this programme.

Award of Certificate: Working Professionals and Students: Based on 70% attendance

To Apply for this FREE ISRO COURSE, Click Here


Course 4: Course-ID-3001 : Course name : Overview of Space Science.Date : 20th July, 2023 to 20th August, 2023

The Science Programme Office, ISRO HQ in association with Indian Institute of Remote Sensing (IIRS), ISRO, Dehradun conducts the Space science and Technology Awareness Training (START) programme. START is an introductory level online training in space science and

technology for the post-graduate and final year under-graduate students of science and technology.


Course Fee: There is no course fee for attending this programme.

Award of Certificate: Working Professionals and Students: Based on 70% attendance

To Apply for this FREE ISRO COURSE, Click Here

I