Search This Blog

Showing posts with label aims. Show all posts
Showing posts with label aims. Show all posts

29/08/2023

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை குரூப் பி, சி பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஆக.30 கடைசி நாள்

 மதுரை: தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரை அருகே தோப்பூரில் அமைகிறது.

இதறகான நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கட்டுமானப் பணிக்கான நிதியை கடனாக வழங்க வேண்டிய ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் இதுவரை அந்த தொகையை விடுவிக்கவில்லை. அதனால், கட்டுமானப்பணிகள் தாதமாகி கொண்டே செல்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால், கட்டுமானப் பணிகள் மட்டும் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரிக்கான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியது. ஆனால், வகுப்பறை கட்டிடம் இல்லாமல் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

எய்ம்ஸ்’ மருத்துவக் கல் லூரி கட்டி முடித்த பிறகே அந்த மாணவர்கள் மதுரைக்கு வருவார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. தற்போது முதற்கட்டமாக ‘எய்ம்ஸ்’க்கான நிர்வாக அலுவலகம் தோப்பூரில் அமைக்கப்படுகிறது. அடுத்தகட்டமாக நிர்வாக அலுவலகத்துக்கான அதிகாரிகள், பணியாளர்கள் நியமனம் தொடங்கி உள்ளது

தற்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு குரூப் பி, குரூப் சி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆக.30-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.