12/06/2026

பிளஸ்-2 முடித்தவர்கள் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி நாள்; ஜூலை 20,2026








 பிளஸ்-2 முடித்தவர்கள் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026-27-ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் (Diploma in Co-operative Management) சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். குறைந்தபட்சம் 17 வயதுபூர்த்தி அடைந்திருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.

ஆன்லைனில் மட்டும்..

தகுதியுடைய நபர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ தபால் மூலமோகூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்கு விண்ணப்பித்திருந்தால் அந்த விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

ஆக.3-ல் வகுப்பு தொடக்கம்

பயிற்சிக்காலம் ஓராண்டு. 2 செமஸ்டர்களை உள்ளடக்கியது. பயிற்சிக் கட்டணம் ரூ.20,750. புதிய பாடத்திட்டத்தின்படி பாடங்கள் தமிழ்வழியில் மட்டும் நடத்தப்படும். வகுப்புகள் ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கும். கூடுதல் விவங்களுக்கு 90427-17766 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் எழுத்தர் பதவியிலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட கூட்டுறவு வங்கிகளில் இளநிலை உதவியாளர், உதவியாளர் பதவிகளில் சேரவும் ஆவின் நிறுனத்தில் நிர்வாகி பணியிடத்தில் சேரவும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டியதுகட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.



பயிற்சி கட்டண விவரம்

விவரம்தொகை (ரூ)
கற்பிப்புக் கட்டணம்8,000
விண்ணப்பப் படிவம் (ம) பதிவுக் கட்டணம்100
நாட்குறிப்பு கட்டணம்300
எழுது பொருள் கட்டணம்600
தேர்வு கட்டணம் (ம) சான்றிதழ்2,500
புத்தக கட்டணம்2,000
நூலக காப்பீடு தொகை (திரும்ப வழங்க வேண்டியது)300
தபால் கட்டணம்207
கூட்டுறவு, கூட்டுறவு முரசு (ம) ஜெர்னல் ஆப் கோவா ப்பரேஷன் இதழ்களுக்கு500
விளையாட்டுக் கட்டணம்150
கணினி பயிற்சி கட்டணம்1,500
நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்4,543
அடையாள அட்டை150
மொத்தம்20,850

கட்டணம் செலுத்தும் முறை:

  • விண்ணப்ப கட்டணம்: ரூ. 100/- (Online Payment only)
  • பயிற்சி கட்டணம்: ரூ. 20,750/- (Online Payment only)
  • மொத்த கட்டணம் ஒரே தவணையில் செலுத்த வேண்டும்.
  • கட்டணம் திரும்ப வழங்கப்படமாட்டாது.
  • பயிற்சி நிலைய இடமாற்றம் அனுமதிக்கப்படாது.

பயிற்சிக்கான திட்டங்கள்

புதிய பாடத்திட்டத்தின்படி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி ஒரு வருட கால பயிற்சியாக இரண்டு பருவ முறைகளாக (Semester I & II) (6 மாதங்கள் + 6 மாதங்கள்) பிரிக்கப்பட்டுள்ளது. பின்வரும் பாடப்பிரிவுகளில் தமிழில் பாடம் நடத்தப்பட்டு, வகுப்பறை பயிற்சிகள் மற்றும் செய்முறை பயிற்சிகள் நடத்தப்படும்.

இறுதித் தேர்வினை தமிழில் மட்டுமே எழுத வேண்டும் (கொள்குறி வினா அடிப்படையில்). இப்பயிற்சியில் கீழ்க்கண்ட பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்.

முதல் பருவம்

  1. பாடம் 1: கூட்டுறவு கருத்தியலும் நடைமுறையும்
  2. பாடம் 2: கூட்டுறவு சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்கள்
  3. பாடம் 3: நிதி கணக்கியல்
  4. பாடம் 4: கூட்டுறவு மேலாண்மை மற்றும் நிருவாகம்
  5. பாடம் 5: கணினி மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு

இரண்டாம் பருவம்

  1. பாடம் 6: கூட்டுறவு தணிக்கை
  2. பாடம் 7: கூட்டுறவு வங்கியியல்
  3. பாடம் 8: நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்
  4. பாடம் 9: கடன் சார்பற்ற கூட்டுறவுகள்
  5. பாடம் 10: செய்முறை பயிற்சி / கள ஆய்வு / திட்ட அறிக்கை தயார் செய்தல்

No comments:

Post a Comment