Search This Blog

07/02/2025

CUET-2025 மத்திய பல்கலைகழகத்தில் படிக்கலாமே..!

 



 CUET-2025

மத்திய பல்கலைகழகத்தில்

படிக்கலாமே..

தனியார் கல்லூரிகளில் படிப்பதை விட, அரசு பல்கலைக்கழகங்களில் படிக்க மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் மத்திய பல்கலைக்கழகங்கள் என்றால் மாணவர்களுக்கு 'டபுள் ஓகே'. குறைவான கட்டணம், ஆராய்ச்சிகளுக்கான சிறந்த வசதி...என ஏகப்பட்ட ஸ்பெஷல்கள் இதில் கொட்டியிருப்பதே முக்கிய காரணம்.

அப்படிப்பட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்...வாங்க...

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர பொதுவான தேர்வாக 'காமன் யூனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட் (Common University Entrance Test)' நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு தேசிய தேர்வு முகமையினால் (NTA) நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு எழுதுவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 56 தேசிய பல்கலைக்கழகங்களில் சேரலாம். குறிப்பாக திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம்.


பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம்


காந்திகிரம பல்கலைக்கழகம். 


யார் எழுதலாம்?

12-ம் வகுப்பு முடித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். இந்த தேர்வு எழுத வயது வரம்பு இல்லை.


தேர்வு பற்றி...

ஹைபிரிட் முறையில் தேர்வு நடக்கும். NCERT பாடப் புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.


இந்தத் தேர்வு நான்கு பிரிவுகளை கொண்டதாகும். இதில் துறை சார்ந்த கேள்வி, மொழியறிவு திறன், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், ஆப்டிட்யூட் உள்ளிட்ட கேள்விகள் கேட்கபப்டும்.


தேர்வுக்கு பின், கலந்தாய்வு மூலம் கல்லூரிகளில் சேர முடியும்.


தேர்வு எப்போது?

விண்ணப்பங்கள் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு மே மாதம் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், விவரங்களை www.exams.nta.ac.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்

No comments:

Post a Comment