Search This Blog

27/02/2025

இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி’ பயிற்சி மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் : Mar. 23, 2025

 


இஸ்​ரோ​வின் இளம் விஞ்​ஞானி பயிற்சி திட்​டத்​தில் பங்கேற்க விரும்​பும் பள்ளி மாணவர்கள் பிப்​ரவரி 24-ம் தேதி முதல் விண்​ணப்​பிக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. பள்ளி மாணவர்​களிடம் விண்​வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்​தும் நோக்​கில், ‘யுவிகா’ (இளம் விஞ்​ஞானி) என்ற திட்​டத்தை இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்​தது.

இத்திட்​டத்​தின்​கீழ் அனைத்து மாநிலங்​களில் இருந்​தும் தலா 3 பேர் தேர்வு செய்​யப்​பட்டு, இஸ்ரோ மையங்​களில் விண்​வெளி அறிவியல், தொழில்​நுட்​பங்கள் தொடர்பாக பல்வேறு செய்​முறை விளக்க பயிற்சிகள் அளிக்​கப்​படும். விஞ்​ஞானிகளுடன் கலந்​துரை​யாடும் வாய்ப்பும் கிடைக்​கும்.

அதன்​படி, இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி மே மாதம் நடக்க உள்ளது. இதற்கான இணையதள விண்​ணப்பபதிவு வரும் 24-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். பள்ளி​களில் 9-ம் வகுப்பு படிக்​கும் மாணவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.

விருப்பம் உள்ளவர்கள் https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளம் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும். பயிற்சிக்கு தேர்​வாகும் மாணவர்​களின் தற்காலிக பட்டியல் மார்ச் இறுதி​யில் வெளி​யாகும். அந்த மாணவர்கள் தங்கள் சான்​றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்​டும். சான்​றிதழ்கள் சரிபார்க்​கப்​பட்ட பிறகு, ஏப்ரல் முதல் வாரத்​தில் இறுதி பட்டியல் வெளி​யிடப்​படும். தேர்வு செய்​யப்​படும் மாணவர்​களுக்கு திரு​வனந்​த​புரம், ஸ்ரீஹரி​கோட்டா உட்பட இஸ்​ரோ​வின் 7 ஆய்வு மை​யங்​களில் ப​யிற்சி வழங்​கப்​படும் என்று இஸ்ரோ தெரி​வித்​துள்ளது.


Important Dates

Serial No.ActivitiesDate
1.Announcement of ProgrammeFeb. 24, 2025
2Registration startsFeb. 24, 2025
3Registration endsMar. 23, 2025
4Release of First selection listApr. 07, 2025
5Reporting by Selected students at respective ISRO centresMay 18, 2025 or as intimated by ISRO through registered email of the student.
6YUVIKA ProgrammeMay 19-30,2025
7Send-off date for selected students from respective centreMay 31 , 2025


No comments:

Post a Comment