Search This Blog

28/10/2024

குருப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு.

 ஏறத்தாழ 16 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு முடிவுகள் இன்று (அக்.28) பிற்பகல் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 9-ம் தேதி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இத்தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) ஜூன் 18-ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதமே வெளியாகும் என பின்னர் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, காலியிடங்களின் எண்ணிக்கை முதலில் 6,244 ஆக இருந்த நிலையில் பின்னர் முதல்கட்டமாக 480-ம் அதன்பிறகு மேலும் 2,208-ம் என கூட்டப்பட்டு 8,932 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால், தேர்வர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள். காரணம், காலியிடங்கள் அதிகரிக்கும்போது கட் ஆப் மதிப்பெண் குறையும்.இந்நிலையில், குருப்-4 தேர்வு முடிவுகள் இன்று (அக்.28) பிற்பகல் வெளியிடப்பட்டன. அதோடு புதிதாக மேலும் 559 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, கட் ஆப் மதிப்பெண் மேலும் கணிசமாக குறையும்.


Result👉❓👉https://tnpscresults.tn.gov.in/


24/10/2024

பொதுசேவை மையம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம் சென்னை மண்டல அலுவலகம் அறிவிப்பு.

 பாஸ்போர்ட் பெற பொதுமக்கள் தங்கள் வீட்டருகே உள்ள பொதுசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர்,  உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் குறிப்பிட்ட அஞ்சலகங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். அதன் பின்னர், அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும். எனவே, பாஸ்போர்ட் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பொதுமக்கள் தங்கள் வீடுகள் அருகே உள்ள பொதுசேவை மையத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அங்கு அவர்களுக்கு உதவி செய்ய ஊழியர்கள் உள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் வீடுகள் அருகே உள்ள பொதுசேவை மையங்கள் குறித்த தகவல்களை https://locator.csccloud.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


19/10/2024

தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு முடிவுகளை சீக்கிரமாக வெளியிட திட்டம்

 கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் 2022-ம் ஆண்டு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு எனும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தரப்படும். இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.அதன்படி நடப்பாண்டுக்கான திறனாய்வு தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 885 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது. கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும், விடைத்தாள் திருத்துதல் பணிகளை துரிதமாக முடித்து முடிவுகளை விரைந்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


All the Best


🙏


போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அக்.21 கடைசி நாள்

 போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்புவோர் அக்.21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, 2020, 21, 22, 23, 24 ஆகிய ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இசிஇ ஆகிய பொறியியல் பிரிவில் டிப்ளமா மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்கள் 341 பேர், பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ, பிபிஎம் ஆகிய பொறியியல் அல்லாத பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் 158 பேர் என மொத்தம் 499 பேருக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.

அவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் மற்றும் டிப்ளமா படித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த பயிற்சிகளை பெற விரும்புவோர் www.boat-srp.com என்ற இணையதளத்தில் அக்.21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு தேர்வானோரின் பட்டியல் அக்.28-ம் தேதி மேற்கூறிய இணையதளத்தில் வெளியிடப்படும். நவ.13,14,15 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும் என்று

CLAT-2025 பதிவுக்கான காலக்கெடு அக்டோபர் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,


 More info👉Click Here


🙏

தீபாவளிக்கு அடுத்த நாள்(1-11-2024) அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு.

 






தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவ.1-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இவ்வாண்டு தீபாவளியை அக்.31-ம் தேதி கொண்டாடும் பொருட்டு, தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவ.1ம் தேதி அன்று ஒருநாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவ.9ம் தேதி அன்று பணி நாளாக அறிவிக்கபடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.31 வியாழக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்த நாள் நவம்பர் 1 (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் சனி, ஞாயிறையும் சேர்த்து பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் திட்டமிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🎆🎆🎆🎆

✴️✴️✴️

🙏





JEE Main 2025: NTA announces changes in exam pattern, scraps optional Questions in Section B with Official Public Notice.

 

The National Testing Agency (NTA) has announced a significant change to the format of the Joint Entrance Examination (JEE) Main 2025, discontinuing the option to select questions in Section B of the exam. The NTA released a notification on Thursday, releasing the official website for the JEE Main 2025 Examination.




In another notification, the NTA said that the option to select questions in Section B, introduced during the COVID-19 pandemic, will no longer be available. This means candidates appearing for JEE Main 2025 will need to attempt all five questions in Section B without any choice. "The optional selection of questions was introduced during the COVID-19 pandemic to ease the pressure on students amid unprecedented challenges," the NTA noted in a statement.

"With the WHO declaring the end of COVID-19 as a public health emergency on May 5, 2023, we are reverting to the original exam structure. "From JEE Main 2025 onwards, candidates will no longer have the flexibility to select questions in Section B. "All students will now be required to attempt all five questions in Section B for each subject," stated the NTA. This change ends the flexible option introduced in 2021, which allowed students to attempt any 5 out of 10 numerical questions due to the challenges of COVID-19.



Additionally, the NTA confirmed that the application process for the first phase of JEE Main 2025 will begin soon, with details to be released on its official website. Starting from JEE Main 2025, Section B will contain only five mandatory questions per subject in Paper 1 (B.E./B. Tech), Paper 2A (B. Arch), and Paper 2B (B. Planning). Candidates must attempt all five questions without any option for selection. 



🙏



15/10/2024

TN 10,11 & 12 வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை அறிவிப்பு.

 10,11 & 12

 வகுப்புகளுக்கு

 பொதுத்தேர்வு 
கால அட்டவணை

மார்ச்/ஏப்ரல்-2025

✅✅✅✅✅✅


10 Std

✴️✴️✴️✴️✴️

11 Std


🔰🔰🔰🔰🔰

12 Std


🟠🟠🟠🟠🟠🟠
❇️❇️❇️❇️❇️
🔴🔴🔴🔴
🟣🟣🟣
🟡🟡
🟢

All the Best