சென்னை: சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிக்கல்வித் துறை வெளியிடும் ஆண்டு நாட்காட்டியில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 18-ம் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.8-ம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில், பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட் டுள்ளது.
அதன்படி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்.15 முதல் மார்ச் 21-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.17 முதல் ஏப்.10-ம்தேதி வரையும் பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.
🙏
No comments:
Post a Comment