Search This Blog

18/07/2023

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்.

 சென்னை: தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஜூலை 30க்குள் மாணவர்கள் மின்னஞ்சல் முகவரி தொடங்க தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உதவ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில், அதாவது 2023-2024 ம் ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு என்று மின்னஞ்சல் கணக்கு உருவாக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே அதற்கு முன்னேற்பாடாகவும், மாணவர்களின் பயன்பாட்டுக்காகவும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும். தங்களது வகுப்பாசிரியர்கள் உதவியோடு மாணவர்கள் இந்த மின்னஞ்சல் கணக்கை உருவாக்க வேண்டும். மேலும் மின்னஞ்சலை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி வழங்க வேண்டும். இதன் பின்னர் மாணவர்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இதையடுத்து மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய புதிய மின்னஞ்சல் முகவரியில் இருந்து cgtnss@gmail.com என்ற முகவரிக்கு "நான் மின்னஞ்சல் முகவரியை பெற்றேன்" என்றும், "உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு என்ன" என்ற விவரத்தையும் அந்த மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் வரும் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.


🙏


No comments:

Post a Comment