Search This Blog

13/07/2023

நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு.

 


எம்பி பி எஸ் (இளநிலை மருத்துவப் படிப்பு) இறுதி ஆண்டு மாணவா்களுக்கு 'முதுநிலை நீட்' தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் அதற்கு மாற்றாக

‘நே ஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெ க்ஸ்ட்)’ என்ற பெயரில் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது.

ஆண்டுக்கு இருமுறை இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டதுடன் 2019 பேட்ச்  மாணவர்களுக்கு 'நெக்ஸ்ட்' தேர்வு வருகிற ஜூலை 28 ஆம் தேதி

நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள், அரசியல் கட்சி த் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை 'நெ க்ஸ்ட்' தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.





No comments:

Post a Comment