Search This Blog

28/12/2021

10 & 12 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு அறிவிப்பு.


+2 மாணவர்களுக்கான முதலாம் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 28 வரையும் 

இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 முதல் 29 வரையும் நடைபெறும் 

10 ஆம் வகுப்புக்கு முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19முதல் 27 வரை

இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21முதல் 26 வரை நடைபெறும்.

10 and 12th Syllabus & Time table

👇

Click Here





25/12/2021

ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி 15-18 வயதினருக்கும், ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி பிரதமர் அறிவிப்பு

 


           ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி 15-18 வயதினருக்கும், ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி  பிரதமர் அறிவிப்பு



      இந்தியாவில் பலருக்கு ஒமிக்ரான்  தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒமிக்ரான் குறித்து பதற்றம் கொள்ள தேவையில்லை. இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடங்கியிருக்கிறது. ஆனால், இந்த நேரத்தில்தான் நாம் தீவிர கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

முக கவசம் அணிவது, சுத்தமாக இருப்பது கைகளை கழுவுவது போன்றவற்றை எப்பொழுதும் மறந்து விடாதீர்கள். 5,00,000 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், அதேபோல, 18 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 1.40 லட்சம் ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,
“90,000 குழந்தைகளுக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க 3,000 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டில் தற்போது படுக்கை பற்றாக்குறை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. தடுப்பூசி செலுத்தும் பணிகளில் நாம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறோம்.

மேலும், 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்; 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.

இதுவரை 141 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 90% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல, மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக இருந்து வருகிறது” என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.

🙏

24/12/2021

TNPSC தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்

 



தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்

கட்டாயத் தமிழ்மொழி தகுதித் தேர்விற்கான (விரிந்துரைக்கும் வகை) தேர்வுத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றில் திருக்குறள் தொடர்பான   '' கட்டுரை வரைதல்'' சேர்க்கப்பட்டு திருத்தம்  செய்யப்பட்டுள்ளது.


🙏 

SSC -CGL- 2022 தேர்வுக்கு ஆன்லைன் மூலம் 23 ஜனவரி வரை விண்ணப்பிக்கலாம் .

          


 பணியாளர் தேர்வாணையம் (SSC), நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான (SSC CGL 2021-22) ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. SSC CGL 2022 தேர்வு பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகள்/ நிறுவனங்களில் உள்ள பல்வேறு குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ பதவிகளை நிரப்புவதற்காக நடத்தப்படும். CGL அடுக்கு 1 தேர்வு ஏப்ரல் 2022 இல் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் SSC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ssc.nic.in ஐப் பார்வையிடுவதன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

SC CGL தேர்வு கணினி அடிப்படையிலானதாக இருக்கும். நீங்கள் விண்ணப்பிக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. SSC CGL தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 23, 2022 ஆகும். 


தேவையான ஆவணங்கள்:

- பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

- பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்.
- சாதி சான்றிதழ்.
- PWD சான்றிதழ்.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
- விண்ணப்பதாரின் கையொப்ப புகைப்படம்.
- ஆதார் அல்லது அடையாளச் சான்று, ஆகியவற்றின் நகல்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.



SSC CGL ஆட்சேர்ப்பு தேர்வுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.


SSC CGL exam 2022: Important dates

  • Dates for submission of online applications: 23-12-2021 to 23-01-2022
  • Last date and time for receipt of online applications: 23-01-2022 (23:30)
  • Last date and time for making online fee payment: 25-01-2022 (23:30)
  • Last date and time for generation of offline Challan: 26-01-2022 (23:30)
  • Last date for payment through Challan (during working hours of Bank): 27-01-2022
  • Dates of ‘Window for Application Form Correction’ including online payment: 28-01-2022 to 01-02-2022 (23:30)
  • Schedule of Computer Based Examination (Tier-I): April 2022
  • Dates of Tier-II Examination (CBE) & Descriptive Paper (Tier-III) To be notified later 


The application fee is Rs 100/-. Women candidates and candidates belonging to Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Disabilities (PwD) and Ex-servicemen (ESM) eligible for reservation are exempted from payment of the fee.


Essential Educational Qualifications (As on 23-01-2022):

  1. Assistant Audit Officer/Assistant Accounts Officer: Essential Qualifications: Bachelor’s Degree from a recognized University or Institute.  Desirable Qualifications: Chartered Accountant or Cost & Management Accountant or Company Secretary or Masters in Commerce or Masters in Business Studies or Masters in Business Administration (Finance) or Masters in Business Economics.  During the period of probation direct recruits shall have to qualify the “Subordinate Audit/ Accounts Service Examination” in respective branches for confirmation and regular appointment as Assistant Audit Officer/Assistant Accounts Officer.
  2. Junior Statistical Officer : Bachelor’s Degree in any subject from a recognized University or Institute with at least 60% Marks in Mathematics at 12th standard level; Or Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects at degree level.
  3. Statistical Investigator Grade-II:  Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects from a recognized University or Institute. The candidates must have 10 studied Statistics as a subject in all the three years or all the 6 semesters of the graduation course.
  4. Assistant in National Company Law Appellate Tribunal (NCLAT):  Essential Qualifications: Bachelor’s Degree from a recognized University or Institute. Desirable Qualifications: Degree in law from a recognized university.
  5. Research Assistant in National Human Rights Commission (NHRC):  Essential Qualifications: Bachelor’s Degree from a recognized University or Institute. Desirable Qualifications: 1 Minimum one-year research experience in any recognized university or recognized Research Institution; 2 Degree in Law or Human Rights from a recognized university.
  6. All other Posts: Bachelor’s Degree from a recognized University or equivalent.

APPLY ONLINE👉https://ssc.nic.in/   

                            👉Notification

                            👉Instructuion to Uploading
 








SSC-TENTATIVE ANNUAL RECRUITMENT PLANNER – 2022







 

18/12/2021

General Teachers transfer counselling 2021-2022

2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு.

English Version

Tamil Version



🙏





15/12/2021

12 Std , Maths ,Book Back One Mark Questions Answers Hand written Material By G.Karthikeyan Sir

 12 Std , Maths ,Book Back One Mark Questions Answers Handwritten Material By G.Karthikeyan Sir.




Volume 1👉Click Here

Volume 2👉Click Here


நன்றி. 

G.Karthikeyan Sir

🙏

11/12/2021

ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


🙏


07/12/2021

TNPSC-TENTATIVE ANNUAL RECRUITMENT PLANNER – 2022

TNPSC-TENTATIVE ANNUAL RECRUITMENT PLANNER – 2022
 

   
 முயற்சி மெய் வருத்தக்கூலி தரும்
Hard Work Never Fails.
🙏

💥💥💥💥💥💥💥💥









03/12/2021

தமிழக அரசு வேலைக்கு தமிழ் கட்டாயம்__அரசாணை வெளியீடு.


தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப TNPSC, TRB, MRB, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை போட்டித்தேர்வுகளை நடத்தி வருகின்றன. இதில் போட்டித்தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 100% இடங்களை உறுதி செய்யும் வகையில், தமிழ் மொழித்தாளை கட்டாயமாக்கி தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 3 & 4 தேர்வுகளில் பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் தாள்களில் ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழித்தாளுக்கான பாடத்திட்டம் 10-ம் வகுப்பு தரத்தில் அமையும் என்றும் குறைந்தபட்சம் அதில் 40% மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்றும், தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெறாவிட்டால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது TNPSC, TRB, MRB, சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஆகிய முகமைகள் நடத்தும் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழித்தாளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களாக நடைபெறாமல் உள்ள TNPSC தேர்வுகளுக்கான அறிவிப்பாணை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கான அறிவிப்பாணை ஆகியவை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

30/11/2021

12 STD கணிதம் MLM Reduced Syllabus(2021-2022)விழுப்புரம் மாவட்டம்


 கணிதம் 

 MLM 

Reduced Syllabus(2021-2022)

விழுபுரம் கல்வி மாவட்டம்

💢💢💢💢💢💢💢


Click Here ----> தமிழ் மீடியம்

Click Here---->English Medium


இன்று (30/11/2021)விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.



பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  1. தூத்துக்குடி    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. திருவள்ளூர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. மதுரை     பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. சிவகங்கை   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  1. காஞ்சிபுரம்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. செங்கல்பட்டு   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3.  திருநெல்வேலி   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. திண்டுக்கல்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  5. தேனி   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  6. கடலூர்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  7. ராமநாதபுரம்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
(உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள்)

28/11/2021

நாளை(29/11/2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

 



பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  1. சென்னை   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. திருவள்ளூர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. காஞ்சிபுரம்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. செங்கல்பட்டு   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. தஞ்சாவூர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. தூத்துக்குடி   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. திருநெல்வேலி   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. விழுப்புரம்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. கன்னியாகுமரி   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  1. கடலூர்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. திருவாரூர்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3. திருவண்ணாமலை   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. நாகபட்டினம்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  5. மயிலாடுதுறை   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  6. பெரம்பலூர்   (1-8ம் வகுப்புகளுக்கு)  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

(உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள்)

27/11/2021

இன்று (27/11/2021)விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

      


22 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று  விடுமுறை.

தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 22 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.


25/11/2021

இன்று (26/11/2021)விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

இன்று (26/11/2021)விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.


வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக பலத்த மழை பெய்யும் என்று 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில்  எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று  பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்ற  தகவல் வெளியாகி உள்ளது.

நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

அதேவேளை, சிவகங்கை, மதுரை, திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு
 மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
🙏

(உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள்)




B.E,M.B.A பட்டம் வாங்க GST வரி கட்டணும்.

 


பி.இ., எம்.பி.ஏ. உள்ளிட்ட பட்டப் படிப்புகளை முடிக்கும் மாணவா்கள் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தினால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து அனைத்து இணைப்புக் கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தின் தோவுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரி மாணவா்கள், தங்கள் கட்டணத்துடன் ஒவ்வொரு சேவைக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். இந்த வரித்தொகை அரசுக்குச் செலுத்தப்படும். ஒவ்வொரு மாணவரும், பட்டப்படிப்பு முடித்து பட்டமளிப்பு சான்றிதழ் பெறுவதற்கு18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை கட்டணத்துடன் கட்டாயம் செலுத்த வேண்டும்.

அசல் சான்றிதழ் இல்லாமல், பட்ட சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதியான 'டூப்ளிகேட்' சான்றிதழ் பெறவும், 'மைக்ரேஷன்' என்ற இடமாற்று சான்றிதழ், பருவத் தோவுக்கான விடைத்தாள் நகல் பெறுவது, சான்றிதழின் உண்மைத் தன்மை சரிபாா்ப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

கல்விக் கட்டணம், பருவத் தோவு கட்டணம், மறுமதிப்பீடு சான்றிதழ் பெறுவது, தரவரிசை, பயிற்று மொழி, சதவீத மாற்று மதிப்பெண் சான்றிதழ், புரொவிஷனல் சான்றிதழ் ஆகியவற்றுக்கு மட்டும் வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


நாட்டில என்னதான் நடக்குது.👎

24/11/2021

DGE-ஊரகதிறனாய்வு தேர்வு .| கடைசிநாள்:14/12/2021 | தேர்வு நாள் : 30/01/2022



DGE-ஊரகதிறனாய்வு தேர்வு

 கடைசிநாள்:14/12/2021  

தேர்வு நாள் : 30/01/2022

கல்வி தகுதி: 9ஆம் வகுப்பு படிக்கும் ஊரக பகுதி மாணவர்கள்.
........................

TAMIL NADU RURAL STUDENTS TALENT SEARCH EXAMINATION (TRUST)

Aim

   To identify the students of high scholastic achievement in middle school and give scholarship to them for higher studies.

Eligibility

  •    The Scholarship scheme for the Talented Rural Students shall be conducted for the students studying in the schools located in Rural Areas only. Schools in Rural Areas would mean all the Government Recognised schools other than the schools located in Municipal Corporation and Municipalities (Except Chennai and Pondicherry).
  •    The Students who are currently studying in IX std in recognized schools and Secured 50% of marks in VIII std. annual examination
  •    Parental annual Income does not exceed Rs. 1,00,000/- are eligible to apply for the above examination



  • Last date : 14/12/2021
  • Examination Date. : 30/1/2022

  • 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰




23/11/2021

வழக்கம் போல 10,12 பொதுத்தேர்வு நடைபெறும் அமைச்சர் அறிவிப்பு.


சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் வழக்கம் போல மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதிய ஆன்லைன் நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 2.65 லட்சம் ஓலைச் சுவடிகள் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதனையடுத்து பேசிய அவர், இந்த ஆண்டு 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 8.75 லட்சத்துக்கு மேல் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு உள்ளதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதய நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். அதனைதொடர்ந்து கூறிய அமைச்சர், தொற்று குறைந்தவுடன் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் கைவிடப்படும். மாணவர்கள் புகார் தெரிவிக்க 1098 மற்றும் 14417 ஆகிய உதவி எண்கள் குறித்து அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.