Search This Blog

25/12/2021

ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி 15-18 வயதினருக்கும், ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி பிரதமர் அறிவிப்பு

 


           ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி 15-18 வயதினருக்கும், ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி  பிரதமர் அறிவிப்பு



      இந்தியாவில் பலருக்கு ஒமிக்ரான்  தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒமிக்ரான் குறித்து பதற்றம் கொள்ள தேவையில்லை. இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடங்கியிருக்கிறது. ஆனால், இந்த நேரத்தில்தான் நாம் தீவிர கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

முக கவசம் அணிவது, சுத்தமாக இருப்பது கைகளை கழுவுவது போன்றவற்றை எப்பொழுதும் மறந்து விடாதீர்கள். 5,00,000 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், அதேபோல, 18 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 1.40 லட்சம் ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,
“90,000 குழந்தைகளுக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க 3,000 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டில் தற்போது படுக்கை பற்றாக்குறை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. தடுப்பூசி செலுத்தும் பணிகளில் நாம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறோம்.

மேலும், 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்; 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.

இதுவரை 141 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 90% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல, மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக இருந்து வருகிறது” என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.

🙏

No comments:

Post a Comment