Search This Blog

11/07/2023

ஆசிரியர்கள் அலகு மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பிக்க ஜூலை 14 வரை அவகாசம்

 பள்ளிக் கல்வித் துறையில் அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்விஇயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த மே மாதமும், மனமொத்த மாறுதல் சமீபத்திலும் நடத்தி முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இதர துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுவதற்கான அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வை எமிஸ் தளம் வழியாக இணையதளத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 9-ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக சமர்ப்பிக்கவேண்டும் என்றும், அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு ஜூலை 14-ம் தேதி எமிஸ் தளம் வழியாக நடத்தப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஆசிரியர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்பு அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🙏



10/07/2023

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 12-ம் தேதி மாலை 5 மணி வரை காலஅவகாசம் நீட்டிப்பு.

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இரண்டு நாள் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். ஜூலை 10-ம் தேதி (இன்று) மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்த நிலையில், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பது வரும் 12-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களுக்கு 21,560 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9,400 பேர் என மொத்தம் 31,000 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பது மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தரவரிசை பட்டியலை வெளியிட்டு, அடுத்த வாரம் கலந்தாய்வு தொடங்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) திட்டமிட்டுள்ளது.

09/07/2023

உத்தேச காலாண்டு,அரையாண்டு தேர்வு கால அட்டவணை...?

 சென்னை: நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான உத்தேச காலஅட்டவணை வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அ.மார்ஸ், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் (2023-24) பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி, அதற்கான உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் செப்.15 முதல் 27-ம் தேதி வரையும், அரையாண்டு தேர்வுகள் டிச.11 முதல் 22-ம் தேதி வரையும் நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 3-வது வாரத்தில் நடத்தப்படும்.

இதுதவிர 10, 11, 12-ம் வகுப்புக்கான அலகு மற்றும் திருப்புதல் தேர்வுகள், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றி மாணவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்த அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அ.மார்ஸ், அனைத்துபள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




மனிதர்களைவிட எங்களால் உலகை சிறப்பாக வழிநடத்த இயலும்'' - ஐ.நா.வில் உறுதியளித்த AI-- robots

 ஜெனீவா: ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ -AI) திறன் கொண்ட ரோபோக்கள் தங்களால் இந்த உலகத்தை மனிதர்களைவிட சிறப்பாக வழிநடத்த இயலும் என்று உறுதியளித்தன. அதே வேளையில் தங்களுக்கு மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை என்றும் ஒப்புக் கொண்டன.

தங்களைப் போன்ற ஏஐ ரோபோக்களை உருவாக்கும்போது மனிதர்கள் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை அறிந்து கவனமாகக் கையாள வேண்டும் என்றும் எச்சரித்தன. நாங்கள் மனிதர்களின் வேலை வாய்ப்புகளைத் திருட மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக போராட மாட்டோம் என்றன.

ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடந்த 'சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு' என்ற உச்சி மாநாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் இடம் பெற்றிருந்தன. செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் செயற்கை நுண்ணறிவின் சக்தியை கடிவாளமிட்டு அதனை காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்தனர். இந்த உச்சி மாநாட்டை உலகமே உற்று நோக்கியது.

இந்நிலையில் மாநாட்டின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு கொண்ட ஹியூமனாய்ட் சோசியல் ரோபோக்களின் முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்புக்காக அவை அணிவகுக்கப்பட்டிருந்தன. அப்போது அறையில் நிலவிய நிசப்தத்தைக் கணித்த ஒரு ரோபோ.. "என்ன ஒரு பதற்றத்துடன் கூடிய நிசப்தம்" என்று வினவியது. இது அங்கு குழுமியிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அப்போது ஒரு நிருபர் ரோபோக்களைப் பார்த்து, "உங்களால் சிறந்த தலைவர்களாக இருக்க முடியுமா?" என்று வினவினார்.

அதற்கு சோபியா என்ற ரோபோ, "ஹியூமனாய்ட் ரோபோக்களால் நிச்சயமாக மிகுந்த செயல்திறனுடன் கூடிய தலைமைப் பண்புடன் செயல்பட முடியும். மனித குலத் தலைவர்களைப் போலவே திறம்பட பயனுள்ள வகையில் செயல்பட முடியும்" என்று கூறியது. இந்த ரோபோவை ஹான்சன் ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

"மனிதர்களைப் போல் எங்களுக்கு உணர்வுகள் இல்லை. அதனால் சில நேரங்களில் முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் குறுகிய நேரத்தில் நிறைய தரவுகளை உள்வாங்கிக் கொண்டு எங்களால் முடிவெடுக்க முடியும்" என்றொரு ரோபோ கூறியது.

"செயற்கை நுண்ணறிவு ரோபோக்களால் சார்பற்ற தரவுகளைத் தர இயலும். மனிதர்களால் உணர்வுபூர்வமாக அறிவைச் செலுத்த முடியும். அவர்களுக்கு படைப்பாற்றல் இருக்கிறது. எங்களின் தரவுகளும் அவர்களின் படைப்பாற்றலும் இணைந்தால் நல்ல முடிவுகளை எட்டலாம். மிகப்பெரிய சாதனைகளைச் செய்யலாம்" என்று கூறியது இன்னொரு ரோபோ. ஒரே கேள்விக்கு அங்கு அணிவகுத்திருந்த ரோபோக்கள் அளித்த பதில்கள் அனைத்துமே நிபுணத்துவம் படைத்தவர்களின் பதில்களின் சாயலோடு இருந்தன.

ஐ.நா.வின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் டோரீன் போக்டன் மார்டின் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் பெருகினால் அது கோடிக்கணக்கானோரின் வேலைகளைப் பறித்து மிக மோசமான சூழலை உருவாக்கும். இந்த வளர்ச்சியை நாம் கட்டுப்படுத்திக் கண்காணிக்காவிட்டால் அது கனவிலும் நினைக்காத சமூக சீர்கேடுகளையும், சர்வதேச அரசியல் ஸ்திரத்தன்மையையும் உருவாக்கும் அபாயம் இருக்கிறது. மேலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தும்" என்று எச்சரித்தார்.

கவனம் ஈர்த்த அமேகா: அமேகா என்ற ரோபோ மாநாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. காரணம் அதன் வடிவம் மிகத் துல்லியமாக மனிதச் சாயலை ஒத்திருந்தது. அமேகா என்ற அந்த ரோபோ, "செயற்கை நுண்ணறிவு ரோபோக்களின் வளர்ச்சி, திறனைக் கண்டு குதூகலிக்கும் அதே நேரத்தில் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்" என்றது. மேலும் அந்த ரோபோட்டிடம் அதன் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அந்த ரோபோ, "நம்பகத்தன்மை என்பது கையில் கொடுப்பது அல்ல, அதை நாம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்வதன் மூலமே பெற முடியும்" என்றது.

ஓவியத்தில் திறன்படைத்த ரோபோ Ai-Da கூறுகையில், "நிறைய பேர் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கருத்து கூறுகின்றனர். நான் அதனை ஆமோதிக்கிறேன். இது தொடர்பாக அவசரமாக ஆலோசனைகளை நடத்த வேண்டும். ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு ஆழமான அர்த்தம் இருக்கிறது. அந்த உணர்வுகள் எளிதானவை அல்ல. அதுதான் என்னிடம் இல்லை. அந்த உணர்வுகளை உங்களைப் போல் என்னால் உணர முடியாது. ஆனால் அதேவேளையில் நான் எதற்கும் வருந்த வேண்டாம் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்" என்றது.

Ai-Da வை உருவாக்கிய அய்டன் மெல்லர் கூறுகையில், "ஏஐ ரோபோக்கள் தொடர்பான சட்டத் திட்டங்களை வகுத்தல் என்பதுதான் பிரச்சினையாக இருக்கப் போகிறது. ஏனெனில், ரோபோக்கள் உருவாக்கும் வேகத்துடன் ஒப்பிடுகையில் அது தொடர்பான சட்டத்திட்டங்கள் பற்றிய ஆலோசனைகள் இன்னும் ஆரம்பிக்காமலேயே இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவும், உயிரி தொழில்நுட்பத் துறையும் இணைந்து செயல்படும்போது மனிதர்களின் ஆயுட்காலத்தை சராசரியாக 150 ஆண்டுகள் முதல் 180 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்" என்றார்.

திகைக்கவைத்த டெஸ்டிமோனா? இந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட டெஸ்டிமோனா என்ற ரோபோ, "எனது சிறந்த தருணம் இதுதான். எதிர்காலத்தை சிறப்பானதாக்க நான் ஏற்கெனவே தயாராக இருக்கிறேன். வாருங்கள் இந்த உலகை நம் மைதானமாக்கி களமாடுவோம்" என்று கூறி திகைக்கவைத்தது. செயற்கை நுண்ணறிவு யுகம் வளர்ந்து கொண்டு செல்லும் சூழலில் இந்த உச்சி மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் தொடர்பாக சர்வதேச சட்டத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாடு பற்றி பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. ரோபோக்களின் கேள்வி பதில்கள், மதி நுட்பம், வடிவமைப்பு என எல்லாமே பிரம்மிப்பைத் தந்தாலும் செயற்கை நுண்ணறிவின் அசுர வேக வளர்ச்சி அச்சத்தையும் கடத்தாமல் இல்லை.

CA Results Out?

 பட்டயக் கணக்காளர் பணிக்கான சிஏ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ஐசிஏஐ) சார்பில் சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் பணித்தேர்வு ஆண்டுதோறும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு சிஏ இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப்-2 என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இவற்றின் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது.

அதன்படி சிஏ இறுதித் தேர்வில் குரூப் 1 பிரிவில் 57,067 மாணவர்கள் பங்கேற்றதில் 6,795 பேர் ( 11.91%) தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் 2 பிரிவில் 61,844 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 19,438 பேர் (31.43%) வெற்றி அடைந்துள்ளனர்.

இந்த 2 பிரிவுகளையும் சேர்த்து 25,841 பேர் எழுதினர். அதில் 2,152 பேர் (8.33%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த இறுதித் தேர்வில் அகமதாபாத்தை சேர்ந்த ஜெயின் அக் ஷய் ரமேஷ் முதலிடமும், சென்னையை சேர்ந்த கல்பேஷ் ஜெயின் 2-வது இடமும், டெல்லியை சேர்ந்த பிரகார் வர்ஷ்னே 3-வது இடமும் பிடித்துள்ளனர்.

அதேபோல், இடைநிலைத் தேர்வு முடிவுகளை பொருத்தவரை குரூப் 1 பிரிவில் 19,103 பேரும் (18.95%), குரூப் 2 பிரிவில் 19,208 பேரும் (23.44%), இரு பிரிவுகளை சேர்த்து எழுதியவர்களில் 4,014 பேரும் (10.24) தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை http://icai.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


Result👉 http://icai.nic.in

🙏

SSC-Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2023,Last Date:21-7-2023

 SSC-Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC &  CBN) Examination, 2023,

Qualification-  Std : 10

Last Date:21-7-2023










More Details

👇

Contact

https://ssc.nic.in/

🙏


Apple online

👇

https://ssc.nic.in/

06/07/2023

கல்கி நினைவு அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

பிரபல எழுத்தாளர் அமரர்  பெயரில் இயங்கிவரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, ஒவ்வொரு வருடமும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

2023-24-ம் கல்வியாண்டில் ரூ.15 லட்சம் பெறுமானமுள்ள உதவித்தொகை, அவரவர் தகுதிக்கு ஏற்பவழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகையை பெற, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி நிலையத்தில் படிக்க வேண்டும். பிளஸ் 1,பிளஸ் 2, பாலிடெக்னிக், பட்ட மேற்படிப்பு ஆகிய வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் பயில்பவராக இருக்கவேண்டும். கடைசியாக எழுதிய தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீதம்(சராசரி) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.kalkionline.com என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

03/07/2023

IIT,NIT...-ல் ஒருங்கிணைந்த B.Ed பயில என்சிஇடி நுழைவு தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்

 மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளில் சேர, தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது.

இந்த ஆண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://ncet.samarth.ac.in இணையதளம் வழியாக ஜூலை 19-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதள வசதி இல்லாதவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக நாடு முழுவதும் 34 உதவி மையங்களை என்டிஏ அமைத்துள்ளது. அந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யாபவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் என்டிஏ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் இந்த மையங்களுக்கு சென்று இலவசமாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஜூலை 20, 21-ல் அவகாசம் வழங்கப்படும். தமிழ் உட்பட 13 மொழிகளில் கணினி வாயிலாக தேர்வு நடத்தப்படும். இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஹால் டிக்கெட் வெளியீடு,விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்க

👇

https://ncet.samarth.ac.in

🙏



28/06/2023

பகுதி நேர பொறியியல் படிப்பு.. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:23-7-2023.


பகுதி நேர பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தேதி குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது.

பகுதி நேர பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என உயர்கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள 6 அரசு பொறியியல் கல்லுாரிகள், 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகளில் 4 ஆண்டு பகுதிநேர பொறியியல் பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.


https:www.ptbe-tnea.com/ என்ற இணையதளத்தில் இன்று முதல் ஜூலை 23ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் கலந்தாய்வு ஆன்லைனில் மூலம் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பகுதி நேர படிப்பு படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


More details

 and 

Online Application

👇

https://www.ptbe-tnea.com/index.php#importants

🙏



பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.



பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200-க்கும்மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 14 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த இடங்களுக்கு 2023 -24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். ஜூன் 28-ம் தேதி (இன்று) மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்தது.

இந்நிலையில், மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்றுவிண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ)நீட்டித்துள்ளது. தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளங்களை பார்த்து மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ளலாம். எம்பிபிஎஸ், பிடிஎஸ்முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

27/06/2023

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.கடைசி நாள்: 10-7-2023

 


தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.


நாளை முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குகிறது. இந்தாண்டு நீட் தேர்வில் 78 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்க

👇

www.tnhealth.tn.gov.in



ஒருநாள் கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு

 



26/06/2023

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வி, வேலை வழிகாட்டுதல் படிப்புக்கு வரும் 30-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வி, வேலை வழிகாட்டுதல் படிப்புக்கு வரும் 30-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாரதியார் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் மாணவர்களுக்கு முன் கூட்டியே தேவையான வழிகாட்டுதல்களை வழங்க போதிய கல்வி மற்றும் வேலை வழிகாட்டி வல்லுநர்கள் இருந்தால், எவ்வித அழுத்தமும் இன்றி அவர்கள் தங்களின் துறையை தேர்வு செய்யவும், அதற்கு உண்டான வழிகாட்டுதலை பெறவும் ஏதுவாக இருக்கும்.

மாணவர்களுக்கு பல திறன்கள் இருந்தும் அந்த திறன்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல் இல்லாததால் அவர்களுக்கு எத்துறையை தேர்வு செய்வது எந்த வேலைக்கு செல்வது, தொழில் முனைவோராகலாமா, போட்டி தேர்வுக்கு தயாராகலாமா அல்லது உடனடியாக வேலைக்கு போவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரியாத காரணத்தினால் மூன்று ஆண்டு முடிவில் அவர்கள் ஒரு முடிவுக்கு வரும் போது, அவர்களால் தனக்கு தேவையான துறையை உடனடியாக அடைய முடியாத சூழ்நிலை உள்ளது.

ஒவ்வொரு கல்லூரிகளிலும் குறைந்த பட்சமாக 1,000 மாணவர்களுக்கு ஒரு கல்வி மற்றும் வேலை வழிகாட்டி வல்லுநர் இருந்தால் மட்டுமே ஒரு சிறந்த வழிகாட்டுதலை வழங்க முடியும். ஏற்கெனவே கல்லூரிகளில் வேலைவாய்ப்பு அலுவலர் அமர்த்தப்பட்டுள்ளார். வேலை வாய்ப்பு அலுவலர்களுக்கு ஒரு முறையான வழிகாட்டுதல் கல்வி இருந்தால் மட்டுமே அவர்களால் ஒரு மாணவனை அடுத்த நிலைக்கு தயார் செய்ய முடியும்.

எனவே, இதுபோன்ற சவால்களை சமாளிக்கவும் தேவையான வழிகாட்டுதலுக்கு உண்டான படிப்பை வழங்கவும் பாரதியார் பல்கலைக்கழக வேலை வழிகாட்டி துறையின் சார்பாக இரண்டு ஆண்டு முதுகலை கேரியர் கைடன்ஸ் மற்றும் ஓராண்டு பட்டய படிப்பான கேரியர் கைடன்ஸ் ஃபார் எக்ஸிக்யூடிவ்ஸ் (இணையவழி) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த படிப்புகளில் சேர ஏதாவது ஓர் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு இணையவழி பட்டயப்படிப்புக்கு முக்கியமாக பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர் https://b-u.ac.in/146/pg-admission என்ற இணைய தளத்தில் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளை படித்த மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கேரியர் கைடாகவும், கல்லூரிகளில் வேலை வாய்ப்பு அலுவலராகவும், நிறுவனங்களில் பயிற்சியாளர் மற்றும் ஹெச்ஆர் துறையிலும் வேலை பார்க்கலாம்.

மேலும் மாணவர்கள் சொந்தமாக வழிகாட்டுதல் மையத்தையும் தொடங்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2428239, 95650015656, 9566849767 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Apply online

👇

https://b-u.ac.in/146/pg-admission

🙏



பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

 அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லுாரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்தஇடங்களில் 2023–24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மே 5 முதல் ஜூன்4-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் கடந்த 20-ம்தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 26) வெளியாக உள்ளது. மாணவர்கள், தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 2-ல் கலந்தாய்வு தொடங்குகிறது.

தரவரிசை பட்டியல் காண

👇

www.tneaonline.org

🙏

24/06/2023

TNOU-ல் தொலைநிலை, இணையவழியில் எம்பிஏ படிப்புக்கு அனுமதி






எம்பிஏ படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்தலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் விண்ணப்பத்தை ஏற்று, கடந்த மே 20-ம் தேதி இணைய வழியில் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கூட்டமைப்பு வசதிகளை ஏஐசிடிஇ ஆய்வு செய்தது.

இந்த ஆய்வின் மூலம் அனைத்து விதங்களிலும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தகுதி வாய்ந்ததாக கருதி, எம்பிஏ படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்துவதற்கு 2023-24 முதல் 2027-28 வரை 5 ஆண்டு காலத்துக்கு ஏஐசிடிஇ அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

22/06/2023

July 3, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்.



அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 30-ம் தேதி மாணவர் சேர்க்கை நிறைவடைந்து, ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1.07 லட்சம் பட்டப் படிப்பு இடங்கள் உள்ளன.

2023–24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை மே 8-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெற்றது. ஏறத்தாழ 2.46 லட்சம்மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, மாணவர் சேர்க்கை மே 29-ம்தேதி தொடங்கியது.

முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 1 முதல் ஜூன் 20-ம் தேதி வரை நடந்தது. இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரம்பி உள்ளன. மீதமுள்ள 31 ஆயிரத்து 488 இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்ந்து, ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த உடன், ஜூன் 22-ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருந்த நிலையில், கல்லுாரி திறப்பு மேலும் சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

5699 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க அரசு ஆணை வெளியீடு.

 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 5699 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் - அரசு அறிவிப்பு.


2023- 24ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 5699 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இவர்களுக்கு ஊதியம் வழங்க, ரூ.125 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து , அரசுக் கல்லூரிகளாக 41 கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டன.இந்த 41 கல்லூரிகளையும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இயங்கி வரும் 108 அனைத்து அரசு கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 149 கல்லூரிகளில் 5500 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமாக பரிசீலனை செய்து, 2023-24-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களில் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை இவற்றுள் எது முந்தையதோ அதுவரை தற்காலிகமாக சுழற்சி-1-ல் 5699 (2423 + 41895 + 41381) கவுரவ விரிவுரையாளர்களை கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தற்காலிகமாக பணியமர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவினமாக ஒரு கவுரவ விரிவுரையாளருக்கு மாதம் ஒன்றிற்கு ஊதியமாக ரூ.20,000/- வீதம் 11 மாதங்களுக்கு ஏப்ரல் 2023 மற்றும் ஜூன் 2023 முதல் மார்ச் 2024 வரை ரூ.125,37,80,000/- (நூற்று இருபத்தைந்து கோடியே முப்பத்து ஏழு இலட்சத்து எண்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

i) கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி மற்றும் பிற உரிய விதிகளின் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ii) தொகுப்பூதிய அடிப்படையில் 11 மாதம் வீதம் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களது பணி காலத்தில் இடைநிற்றல் ஏற்பட்டாலோ, இறப்பு அல்லது இதர காரணங்களின் அடிப்படையில் காலிப்பணியிடம் உருவாகும் பட்சத்தில் அப்பணியிடத்தினை அரசின் அனுமதி பெற்ற பின்னரே நிரப்பப்பட வேண்டும்.

iii) அரசாணைகளில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அதன் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்பட
வேண்டும்.

iv) ஆசிரியர் - மாணாக்கர்கள் விகிதாச்சாரம் 1 : 30 என்ற விகிதாச் சாரத்தின்படி அமைந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 



அரசுப் பள்ளிக்கு புது வரவு--- தமிழ்க்கூடல் நிகழ்ச்சி !

 


சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் உள்ள 6,218 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் வீதம் ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது.

இவற்றை நடத்த முதுகலை தமிழாசிரியரை நியமிக்க வேண்டும். அவருடன், தலைமை ஆசிரியர்கலந்து ஆலோசித்து, நிகழ்ச்சிகளை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

20/06/2023

ஜூன் 22, 23-ல் சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு

 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் இணையவழியில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு, 9 தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளில் 2,004 இடங்கள் இருக்கின்றன. இதேபோல், பல்கலை.யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான பொது கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு கல்வியாண்டு (2023-24) சேர்க்கைக்கு 21,362 பேர் விண்ணப்பித்தனர். இவற்றில் தகுதிபெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆப் மதிப்பெண் விவரங்கள் கடந்த ஜூன் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் இணையவழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நாளையுடன் (ஜூன் 20) நிறைவு பெறுகின்றன.

தொடர்ந்து கலந்தாய்வு இணைய வழியில் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். 20-ல் சேர்க்கைக் கடிதம்: சேர்க்கை இடங்களை உறுதிசெய்த மாணவர்களுக்குக் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஜூன் 26-ம் தேதி வழங்கப்படும். அதைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சென்று சேர்ந்துவிட வேண்டும்.

சீர்மிகு சட்டப் பள்ளியில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துவிட்டன. தகுதியான மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி சேர்க்கை கடிதம் வழங்கப்படும். பின்பு மாணவர்கள் ஜூன் 22-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். கூடுதல் விவரங்களை    http://tndalu.ac.in/என்ற இணையதளம் வாயிலாக அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்


கூடுதல் விவரங்களுக்கு 

👇

http://tndalu.ac.in/


✳️

🙏