Search This Blog

07/12/2021

TNPSC-TENTATIVE ANNUAL RECRUITMENT PLANNER – 2022

TNPSC-TENTATIVE ANNUAL RECRUITMENT PLANNER – 2022
 

   
 முயற்சி மெய் வருத்தக்கூலி தரும்
Hard Work Never Fails.
🙏

💥💥💥💥💥💥💥💥









03/12/2021

தமிழக அரசு வேலைக்கு தமிழ் கட்டாயம்__அரசாணை வெளியீடு.


தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப TNPSC, TRB, MRB, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை போட்டித்தேர்வுகளை நடத்தி வருகின்றன. இதில் போட்டித்தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 100% இடங்களை உறுதி செய்யும் வகையில், தமிழ் மொழித்தாளை கட்டாயமாக்கி தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 3 & 4 தேர்வுகளில் பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் தாள்களில் ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழித்தாளுக்கான பாடத்திட்டம் 10-ம் வகுப்பு தரத்தில் அமையும் என்றும் குறைந்தபட்சம் அதில் 40% மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்றும், தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெறாவிட்டால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது TNPSC, TRB, MRB, சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஆகிய முகமைகள் நடத்தும் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழித்தாளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களாக நடைபெறாமல் உள்ள TNPSC தேர்வுகளுக்கான அறிவிப்பாணை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கான அறிவிப்பாணை ஆகியவை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

01/12/2021

30/11/2021

12 STD கணிதம் MLM Reduced Syllabus(2021-2022)விழுப்புரம் மாவட்டம்


 கணிதம் 

 MLM 

Reduced Syllabus(2021-2022)

விழுபுரம் கல்வி மாவட்டம்

💢💢💢💢💢💢💢


Click Here ----> தமிழ் மீடியம்

Click Here---->English Medium


இன்று (30/11/2021)விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.



பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  1. தூத்துக்குடி    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. திருவள்ளூர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. மதுரை     பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. சிவகங்கை   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  1. காஞ்சிபுரம்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. செங்கல்பட்டு   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3.  திருநெல்வேலி   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. திண்டுக்கல்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  5. தேனி   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  6. கடலூர்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  7. ராமநாதபுரம்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
(உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள்)

28/11/2021

நாளை(29/11/2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

 



பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  1. சென்னை   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. திருவள்ளூர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. காஞ்சிபுரம்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. செங்கல்பட்டு   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. தஞ்சாவூர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. தூத்துக்குடி   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. திருநெல்வேலி   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. விழுப்புரம்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. கன்னியாகுமரி   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  1. கடலூர்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. திருவாரூர்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3. திருவண்ணாமலை   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. நாகபட்டினம்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  5. மயிலாடுதுறை   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  6. பெரம்பலூர்   (1-8ம் வகுப்புகளுக்கு)  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

(உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள்)

27/11/2021

இன்று (27/11/2021)விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

      


22 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று  விடுமுறை.

தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 22 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.


25/11/2021

இன்று (26/11/2021)விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

இன்று (26/11/2021)விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.


வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக பலத்த மழை பெய்யும் என்று 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில்  எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று  பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்ற  தகவல் வெளியாகி உள்ளது.

நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

அதேவேளை, சிவகங்கை, மதுரை, திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு
 மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
🙏

(உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள்)




B.E,M.B.A பட்டம் வாங்க GST வரி கட்டணும்.

 


பி.இ., எம்.பி.ஏ. உள்ளிட்ட பட்டப் படிப்புகளை முடிக்கும் மாணவா்கள் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தினால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து அனைத்து இணைப்புக் கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தின் தோவுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரி மாணவா்கள், தங்கள் கட்டணத்துடன் ஒவ்வொரு சேவைக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். இந்த வரித்தொகை அரசுக்குச் செலுத்தப்படும். ஒவ்வொரு மாணவரும், பட்டப்படிப்பு முடித்து பட்டமளிப்பு சான்றிதழ் பெறுவதற்கு18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை கட்டணத்துடன் கட்டாயம் செலுத்த வேண்டும்.

அசல் சான்றிதழ் இல்லாமல், பட்ட சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதியான 'டூப்ளிகேட்' சான்றிதழ் பெறவும், 'மைக்ரேஷன்' என்ற இடமாற்று சான்றிதழ், பருவத் தோவுக்கான விடைத்தாள் நகல் பெறுவது, சான்றிதழின் உண்மைத் தன்மை சரிபாா்ப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

கல்விக் கட்டணம், பருவத் தோவு கட்டணம், மறுமதிப்பீடு சான்றிதழ் பெறுவது, தரவரிசை, பயிற்று மொழி, சதவீத மாற்று மதிப்பெண் சான்றிதழ், புரொவிஷனல் சான்றிதழ் ஆகியவற்றுக்கு மட்டும் வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


நாட்டில என்னதான் நடக்குது.👎

24/11/2021

DGE-ஊரகதிறனாய்வு தேர்வு .| கடைசிநாள்:14/12/2021 | தேர்வு நாள் : 30/01/2022



DGE-ஊரகதிறனாய்வு தேர்வு

 கடைசிநாள்:14/12/2021  

தேர்வு நாள் : 30/01/2022

கல்வி தகுதி: 9ஆம் வகுப்பு படிக்கும் ஊரக பகுதி மாணவர்கள்.
........................

TAMIL NADU RURAL STUDENTS TALENT SEARCH EXAMINATION (TRUST)

Aim

   To identify the students of high scholastic achievement in middle school and give scholarship to them for higher studies.

Eligibility

  •    The Scholarship scheme for the Talented Rural Students shall be conducted for the students studying in the schools located in Rural Areas only. Schools in Rural Areas would mean all the Government Recognised schools other than the schools located in Municipal Corporation and Municipalities (Except Chennai and Pondicherry).
  •    The Students who are currently studying in IX std in recognized schools and Secured 50% of marks in VIII std. annual examination
  •    Parental annual Income does not exceed Rs. 1,00,000/- are eligible to apply for the above examination



  • Last date : 14/12/2021
  • Examination Date. : 30/1/2022

  • 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰




23/11/2021

வழக்கம் போல 10,12 பொதுத்தேர்வு நடைபெறும் அமைச்சர் அறிவிப்பு.


சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் வழக்கம் போல மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதிய ஆன்லைன் நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 2.65 லட்சம் ஓலைச் சுவடிகள் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதனையடுத்து பேசிய அவர், இந்த ஆண்டு 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 8.75 லட்சத்துக்கு மேல் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு உள்ளதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதய நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். அதனைதொடர்ந்து கூறிய அமைச்சர், தொற்று குறைந்தவுடன் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் கைவிடப்படும். மாணவர்கள் புகார் தெரிவிக்க 1098 மற்றும் 14417 ஆகிய உதவி எண்கள் குறித்து அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


22/11/2021

கல்லூரி, பல்கலைகளில் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்பு நடத்த உத்தரவு ! !!


பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த போது கல்லூரிகள் மூடப்பட்டு முழுமையாக ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் நடைபெற்ற தேர்வுகளில் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொண்டதால் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்வுகளானது எழுத்துத்தேர்வாகவே நடத்த உத்தரவிடப்பட்டது. அதேவேளையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட மற்ற படிப்புகளில் தேர்வுகளானது ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என்று கல்லூரிகள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வு நடத்த வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்தது. ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தாலும் பண்டிகைகள், பருவமழை என அடிக்கடி விடுமுறை விடப்படுவதால், கல்லூரிகளில் நடப்புத் தேர்வுக்கான பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் ஆன்லைனில் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்புகளை எங்களால் சரிவர கவனிக்க முடியவில்லை என மாணவர்களே தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை முழுமையாக உள்வாங்க முடியாத நிலையில், நேரடித் தேர்வுகள் நடத்தப்பட்டால், தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையே கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 20 முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதையடுத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இனிவரும் நாட்களில் அனைத்து வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி முறையில் உயர்கல்வி நிறுவனங்கள் எந்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 20 ஆம் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


🙏


20/11/2021

இன்று(20/11/2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

 




பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  1. வேலூர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. இராணிபேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. திருப்பத்தூர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. விழுப்புரம்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. கள்ளகுறிச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை




பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  1. செங்கல்பட்டு  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. கடலூர்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3. திருவண்ணாமலை  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. திருவள்ளூர் (நிவாரண மைய பள்ளிகள் மட்டும்)


19/11/2021

இன்று(19/11/2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 



பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  1. விழுப்புரம்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. தர்மபுரி  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. திருவள்ளூர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. திருப்பத்தூர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. வேலூர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. சென்னை  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. இராணிபேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. நீலகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  10. கள்ளக்குறிச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  11. சேலம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  12. பெரம்பலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை




பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  1. செங்கல்பட்டு  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. கடலூர்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3. கிருஷ்ணகிரி  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. அரியலூர்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் கனமழை காரணமாக 19.11.2021 விடுமுறை 

18/11/2021

12 Std , Chapter 12, Notes by Anuradha Madam Tamil Medium

 

12 Std , Chapter 12,

 Notes

 by 

Anuradha Madam 

Tamil Medium

👇

Click Here

💢💢💢💢💢💢💢💢💢


இன்று(18/11/2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  1. சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. ராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. புதுக்கோட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. வேலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. தேனி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. திண்டுக்கல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  10. அரியலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  11. தர்மபுரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  12. நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  13. திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  14. கள்ள குறிச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  15. பெரம்பலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


பள்ளிகள் மட்டும் விடுமுறை

  1. காஞ்சிபுரம் பள்ளிகள் மட்டும் விடுமுறை
  2. நெல்லை பள்ளிகள் மட்டும் விடுமுறை
  3. செங்கல்பட்டு பள்ளிகள் மட்டும் விடுமுறை
  4. தஞ்சாவூர் பள்ளிகள் மட்டும் விடுமுறை
  5. தூத்துக்குடி பள்ளிகள் மட்டும் விடுமுறை
  6. திருச்சி பள்ளிகள் மட்டும் விடுமுறை
  7. திருவண்ணாமலை பள்ளிகள் மட்டும் விடுமுறை
  8. கடலூர் பள்ளிகள் மட்டும் விடுமுறை
  9. சேலம் பள்ளிகள் மட்டும் விடுமுறை
  10. கிருஷ்ணகிரி பள்ளிகள் மட்டும் விடுமுறை
  11. திருப்பத்தூர் (1-5 வகுப்புகள் மட்டும்)

16/11/2021

"ஆன்லைன் தேர்வுக்கு குட்பை "! சொன்ன தமிழ்நாடு உயர்கல்வித்துறை.

 


இனி ஆஃப்லைன் எனப்படும் நேரில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்று தமிழ்நாடு உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் இ.ஆ.ப. அறிவித்துள்ளார்.

 இது தொடர்பாக, உயர் கல்வித்துறைச் செயலாளர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், அனைத்து வகை கல்லூரி கல்வியியல் இயக்குநரகம், அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கரோனா காலகட்டம் முடிந்துவிட்டது. அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும். பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் என அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனிடையே, இணையவழியில்  தேர்வுகளை நடத்த வலியுறுத்தி அரியலூர், பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தியிருந்த நிலையில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


🙏


15/11/2021

2022 ஆண்டு 22 பொதுவிடுமுறை நாட்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

   


  வருகிற 2022 ஆம் ஆண்டில், தமிழகத்தில் 22 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜனவரி மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 6 விடுமுறை நாட்கள் உள்ளன.

🙏


ஜைகோவ்-டி’ கோரானா தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்



    12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுவர்களுக்கு பயன்படுத்துவதற்காக, ‘ஜைகோவ்-டி’ தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தநிலையில், இப்போதைக்கு 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மட்டுமே இம்மருந்து செலுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்களுக்கு செலுத்தப்பட்ட பிறகு, நிபுணர்கள் கருத்தை பெற்று, சிறுவர்களுக்கு செலுத்த முடிவு செய்யப்படும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மருந்தை தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்ப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், ஒரு கோடி தடுப்பு மருந்துகள் வாங்க ‘ஆர்டர்’ கொடுத்துள்ளது. இது, ஊசியின்றி செலுத்தும் மருந்தாகும். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த ‘ஜைடஸ் கடிலா’ நிறுவனம் இதை தயாரித்துள்ளது.