அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட இடங்கள் 'லேட்ரல் என்ட்ரி' முறையில் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு ஒதுக்கப்படுகின்றன.
இந்த இடங்களில் பொறியியல் டிப்ளமோ படித்தவர்கள், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்த பிஎஸ்சி பட்டதாரிகள் சேரலாம். அந்த வகையில், இந்த இடங்களில் 2024-2025-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக மட்டும் வரவேற்கப்படுகின்றன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 8-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி, ஜூலை 7-ம் தேதி முடிவடைகிறது.
இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள்
👇
🖕
என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்து இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.300. இக்கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் வாயிலாக ஆன்லைனில் செலுத்தலாம்.
எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய 04565-224528, 04565-230801 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம், என்று மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔰🔰🔰🔰🔰
✳️✳️✳️
🙏
No comments:
Post a Comment