உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியான இரண்டு நாளில், சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை இன்று (ஜூன் 21) அறிவித்துள்ளது.
மேலும் சில தவிர்க்க முடியாத காரணங்கள் மற்றும் தளவாட சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment