உங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக ,வாக்குச்சாவடி வாக்களர்கள் பட்டியல் 2022 பதிவிறக்கம் செய்யணுமா?
Search This Blog
02/02/2022
30/01/2022
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாகப் பெறலாம்.
சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் அரசாணையைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது
சட்டசபை கூட்டத்தொடரின் போது, பள்ளிக்கல்வித் துறையின் சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் பெறுவது தொடர்பான அறிவிப்பை அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டிருந்தார்,
இந்நிலையில், இது குறித்த அரசாணையைப் பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில், "2021-2022ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது கல்வித்துறை அமைச்சரால் மின்னணு சேவைகள் என்ற தலைப்பில் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையில் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றுகளான நன்னடத்தைச் சான்று, ஆளறிசான்று, தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளும் அவர்தம் இல்லத்திற்கு அருகில் உள்ள அரசு பொதுச் சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றிப் பெற்றுக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாகப் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள பல்வேறு இயக்ககங்களின் வாயிலாக இரண்டாம்படி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் நகல், புலப்பெயர்வு சான்றிதழ் (Migration Certificate), கல்வி இணைச் சான்றிதழ் (Equivalence Certificate), தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான சான்றிதழ் போன்ற பல்வேறு வகையான சான்றிதழ்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த பல்வேறு அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வாயிலாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெற்று வருகின்றனர்.
இ-சேவை மையத்தில் பெறலாம்
இச்சேவைகள் சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வந்தாலும், மாணவர்கள். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கே நேரில் சென்று பெற்றுவரும் நிலை இருந்து வருகிறது என்றும் இதனால் சம்பந்தப்பட்ட நபருக்கு கால விரயம் மற்றும் பண விரயம் ஏற்படுவதுடன், அரசு அலுவலகங்களுக்கும் பணிச்சுமை கூடி வருகிறது. எனவே பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் மாணவர்கள் பெற்றுக்கொள்ள புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பபட்டுள்ளது.
28/01/2022
திருத்திய ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணை
2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் ஆணை வெளியிடப்பட்டது . அதன் தொடர்ச்சியாக பார்வை 2 ல் காணும் செயல்முறைகளின் வாயிலாக பொதுமாறுதல்கள் / பதவி உயர்வுகளுக்கான காலஅட்டவணைகள் வெளியிடப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்தல் பணிகள் / வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெறவிருப்பதால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பான காலஅட்டவணையினை திருத்தம் செய்து இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது.
மேலும் , பொதுமாறுதல்கள் / பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொண்டு ஆணைகள் பெறும் ஆசிரியர்களை 24.02.2022 அன்று பணியிலிருந்து விடுவிக்க சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
👇
💢💢💢💢💢💢💢💢
27/01/2022
Corona Booster Dose தடுப்பூசி போட வேண்டிய தேதி? ??
Corona Booster Dose போட வேண்டிய தேதி?
நீங்கள் FLW -Front Line Worker list ல் உங்கள் பெயர் இருந்தால் Booster Dose போட வேண்டிய தேதி அறிய https://www.cowin.gov.in/ log in பண்ணுங்க.👇
26/01/2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
வேட்புமனு தாக்கல் 26-01-22
வேட்புமனு நிறைவு
04-02-22
வேட்புமனு பரிசீலனை
05-02-22
வேட்புமனுவை திரும்பப் பெற 07-02-22
*தேர்தல் நாள் 19-02-22*
வாக்கு எண்ணிக்கை நாள் 22-02-22
முதல் கூட்டம் பதவி ஏற்பு 02-03-22
தலைவர் தேர்தல்
04-03-22
துணைத் தலைவர் தேர்தல் 04-03-22
25/01/2022
NMMS. 2021-2022 , கடைசி நாள் 27/1/2022
NMMS 2021-2022
தேர்வு கட்டணம்: ₹30 மட்டுமே.
23/01/2022
16/01/2022
31 ஆம் தேதி வரை 10,11 மற்றும் 12 வகுப்புகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
31 ஆம் தேதி வரை 10,11 மற்றும் 12 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 19 ஆம் தேதி துவங்கப்பட இருந்த திருப்புதல் தேர்வும் ஓத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் .
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
🙏
TNPSC COMPELTE GUIDE
முயற்சி ! பயிற்சி !! வெற்றி!!!
12/01/2022
11/01/2022
1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் ஜன. 31 வரை விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு
1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் ஜன. 31 வரை விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு.
1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜன. 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
10,11,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்
தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை.*
அனைத்து பிஇ, கலை - அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை- உயர்கல்வித்துறை.
தமிழகத்தில்1-9 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை
தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை
ஆன்லைன், கல்வித்தொலைக்காட்சி மூலம் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை