Search This Blog
12/08/2021
11/08/2021
NET தேர்வு ஒரே கட்டமாக நடைபெறும் என UGC-NTA அறிவிப்பு.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் NET தேர்வுக்கு செப்-5 வரை https://ugcnet.nta.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 டிசம்பர் ,2021 ஜூன் மாதங்களில் நடத்தப்பட இருந்த NET தேர்வுகள் ஒரே கட்டமாக அக்டோபர் 6 முதல் 11 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: முதுகலை பட்டம்
உதவித்தொகை பெறுவதற்கும், உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கும் NET தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசிநாள்-5/9/3021
விண்ணப்பிக்க 👇
🙏
06/08/2021
10 மற்றும் 11 வகுப்பு துணைத்தேர்வு செப்-2021 தனிதேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 11/8/2021
10 மற்றும் 11 வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர்-2021 தனிதேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 11/8/2021
..................................................................
SEPT.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின்
SEPT.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின்.
.............
தமிழக முதல்வர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாகப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாகத் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் online வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் (Standard Operating Procedure) பின்பற்றிப் பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.மேலும், கட்டுப்பாடுகளுடன் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
🙏
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
04/08/2021
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு: தமிழக அரசு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (4-8-2021) தலைமைச் செயலகத்தில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, வரும் 13-8-2021 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
அதோடு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென்று ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவாறு, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வு பெற்ற மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. த. முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப்போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🙏
💢💢💢💢💢💢💢
03/08/2021
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் முறையாக பெற்ற பட்டம் பதவி உயர்வுக்கு செல்லும்- பல்கலை. பதிவாளர்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து முறையாக பெற்ற இளங்கலை, முதுகலை பட்டம் அரசுப்பணி மற்றும் பதவி உயர்வுக்கு செல்லுபடியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திறந்தநிலை பல்கலைக்கழகத்திலிருந்து முறையாக அதாவது பத்தாவது மற்றும் பிளஸ் டூவுக்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்தால், அது மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பை போலவே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
1.TNOU-பதிவாளரின் அறிவிப்பு
2.நியமன அங்கீகரம் ஆணை
3.பதவி உயர்வு அங்கீகரம் ஆணை
👇
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
02/08/2021
BASIC DETAILS RELATING TO ADMISSION OF 5 YEARS INTEGRATED LAW DEGREE COURSES, 2021-2022
BASIC DETAILS RELATING TO ADMISSION OF 5 YEARS. INTEGRATED LAW DEGREE COURSES, 2021-2022
(Detailed information relating to Admission Process shall be
provided in the Official Website on 04th August 2021)
SSC-25,271 கான்ஸ்டபிள் காலியிடங்கள். கடைசி தேதி 31/8/2021.
மத்திய துணை ராணுவப் படைப்பிரிவுகளில் காலியாக உள்ள 25,271 கான்ஸ்டபில் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Constables(CAPFS)
காலியிடங்கள்: 25,271
சம்பளம்: மாதம் ரூ.27,700 - 69,100
பெண்கள்: 800 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல்கட்ட எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, சேலம், திருச்சி, வேலூர், திருநெல்வேலி.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2021
மேலும் விவரங்களுக்கு https://ssc.nic.in.
29/07/2021
மாணவர்களுக்கு வருமான மற்றும் சாதி சான்றிதழ் காலதாமதமின்றி வழங்க அமைச்சர் உத்தரவு..!
இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து, வருமானச் சான்றிதழ் ,சாதிச் சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்விதக் கால தாமதமுமின்றி உடனடியாகப் பரிசீலித்து, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து இ-சேவை மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளை கூட்ட நெரிசல் இன்றி பெற்றுச்செல்ல ஏதுவாக குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றி சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.
சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினைத் தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது எனவும் வருவாய்த்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Apply Certificates online
👉 https://www.tnesevai.tn.gov.in
🙏
26/07/2021
25/07/2021
பள்ளி படிப்பில் இடை நின்றவர்கள் 10th & 12th NIOS-ல் படிக்கலாம் வாங்க.
24/07/2021
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்றார் மீராபாய்
ஒலிம்பிக் பளு
தூக்கும் போட்டியில் டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான, பளுதூக்குதல் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2021ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில், மகளிருக்கான பளுதூக்கும் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.டார்.
இதில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே எடைப் பிரிவில் சீன வீராங்கனை ஹூ ஜிஹி தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேசிய வீராங்கனை கேண்டிக் விண்டிங் வெண்கல பதக்கம் வென்றார்.
2016ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பி.வி. சிந்து பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதற்கடுத்து தற்போது பளு தூக்கும் போட்டியில் மீராபாய் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று தந்திருக்கிறார்.
மீராபாய் வென்ற பதக்கத்தின் மூலம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம் பிடித்தது.
21/07/2021
ஓபிசி_ சான்றிதழ் வாங்குறது -ஈசி- ஆச்சி.
ஓபிசி வகுப்பினருக்கு சான்றிதழ் வழங்கும்போது பெற்றோரின் ஆண்டு வருமானத்தில் ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் தாமதமின்றி சான்று வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது,
இதுதொடர்பாக தமிழக அரசின்பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை முதன்மை செயலர் ஆ.கார்த்திக், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மத்திய அரசு பணிகளிலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வளமான பிரிவினரை நீக்கி 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், வளமான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை (ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம்) ஊதியம் மற்றும்விவசாய வருமானத்தை சேர்க்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் விளக்கப்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஓபிசி வகுப்பினருக்கு சான்றிதழ் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சான்றிதழ் வழங்கும்போது பெற்றோரின் ஆண்டு வருமானத்தில்ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில்கொள்ளாமல் எவ்வித தாமதமின்றி ஓபிசி சான்று வழங்குமாறு சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் அளிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
19/07/2021
ஜூலை 22-ம் தேதி முதல் +2 மதிப்பெண் சான்றிதழ்: இணையதளத்தில் டவுண்லோடு செய்யலாம்
"கொரோனா வரும் 22-ம் தேதி பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இன்று காலை 11 மணி அளவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிளஸ் 2 மதிப்பெண்களை வெளியிட்டார். அப்போது, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுகள் துறை இயக்குநர் உஷா ராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் ஏற்கெனவே இணையதளத்தில் உள்ளன. அதனால் மதிப்பெண்களைக் கணக்கிடுவது சிரமமான வேலை அல்ல. வரும் 22-ம் தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். மாணவர்கள் அதனை டவுன்லோட் செய்துகொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை ஜூலை 22-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஏற்கெனவே தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் கொரோனா பரவலைப் பொறுத்து தேர்வு நடைபெறும்.
நன்றி.
18/07/2021
12 STD, MATHS, VOLUME I & II, T/M, Complete EXERCISES ANSWERS KEY BY G.KARTHIKEYAN SIR.
12 STD
MATHS
VOLUME I & II
TAMIL MEDIUM
KEY FOR EXERCISE PROBLEMS
By G.KARTHIKEYAN SIR.
CHAPTER 1--CLICK HERE
CHAPTER 2--CLICK HERE
CHAPTER 3--CLICK HERE
CHAPTER 4--CLICK HERE
CHAPTER 5--CLICK HERE
CHAPTER 6--CLICK HERE
CHAPTER 7--CLICK HERE
CHAPTER 8--CLICK HERE
CHAPTER 9--CLICK HERE
CHAPTER10--CLICK HERE
CHAPTER11--CLICK HERE
CHAPTER12--CLICK HERE
நன்றி
🙏
G.KARTHIKEYAN SIR
16/07/2021
13/07/2021
08/07/2021
கேரளாவில் புதிதாக ஜிகா வைரஸ் தொற்று
கேரளாவில் புதிதாக பத்து பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் புதிதாக 10 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. கொரோனாவின் அலைகளுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த வைரஸ் தொற்று அறிகுறிகளற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து 13 பேரின் மாதிரிகள் புனேவில் இருக்கும் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 10 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பட்ட 13 மாதிரிகளின் மீதும் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த தொற்று வழக்குகள் அனைத்தும் திருவனந்தபுரத்தை சேர்ந்தது என்று கூறியுள்ளார். இந்த ஜிகா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளபடி, ஜிகா வைரஸ் என்பது கொசுவால் பரவக்கூடிய ஃபிளவி வைரஸ். இது முதன் முதலில் உகாண்டாவில் உள்ள குரங்குகளுக்கு 1947 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், 1952 ஆம் ஆண்டு உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களுக்கு தோன்றியது.
இதனை அடுத்து இந்த வைரஸ் தொற்று ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் ஜிகா வைரஸ் தாக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டது பதிவாகியுள்ளது. மேலும், இந்த ஜிகா வைரஸ் அறிகுறிகள் அற்று இருந்தாலும், இது சிலருக்கு காய்ச்சல், தலைவலி, அரிப்பு, வெண்படலம், தசை மற்றும் மூட்டுவலிகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் நீடிக்கும். இந்த வைரஸ் கொசு கடித்தால் வேகமாக பரவக்கூடியவை, ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் கடிப்பதால் சிக்குன் குனியா, மஞ்சள் காய்ச்சல், டெங்கு போன்றவை ஏற்படும்.
இது பெரியளவில் உடல்பிரச்னைகளை ஏற்படுத்தாவிடிலும், குறிப்பாக கர்ப்பிணி பெண்களை இது கடித்தால் மைக்ரோசெபாலி என்ற பிறப்பு குறைபாடு, மற்றும் சில அசாதாரண பிற பிறவிகளின் குறைபாடுகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது கடுமையாக உள்ளது. கடந்த 10 தினங்களில் 12,000 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு ஜூன் 28-லிருந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
எனவே தமிக மக்கள் கொசுவால் பரவும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பாய் இருங்கள்.
🙏
05/07/2021
CBSE 2021-2022 தேர்வு முறை அறிவிப்பு.
சிபிஎஸ்இ திங்களன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. 2021-22 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது, இதில் இந்த கல்வியாண்டு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகள் தேர்வுகள் 2 கட்டங்களாக நடைபெறும். ஒவ்வொரு கடத்திலும் சுமார் 50% பாடத்திட்டங்கள் இருக்கும். முதல் கால தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெறும். இரண்டாம் பருவ தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல் பருவத் தேர்வு 90 நிமிடங்கள் நடைபெறும் என்றும், 2 ஆம் பருவத் தேர்வு 2 மணி நேரம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.