Search This Blog

Showing posts with label Civil service. Show all posts
Showing posts with label Civil service. Show all posts

21/09/2023

UPSC- Civil Services Examination | இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு -ஓரு பார்வை.

 


இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு (Civil Services Examination (CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும்.இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.


தகுதிகள்தொகு

  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • குறைந்த பட்ச கல்வித் தகுதி, இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு

இப்போட்டித்தேர்வில் கலந்து கொள்ள குறைந்த பட்ச வயது 21 ஆகும். அதிக பட்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினர்க்கு 32 வயது, இதர பிற்படுத்த பிரிவினருக்கு 35 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களுக்கு 37 வயதாகும்.

எத்தனை முறை தேர்வு எழுதலாம்தொகு

இப்போட்டித் தேர்வுகள் வகுப்பு வாரியாக குறிப்பிட்ட தடவைகள் மட்டும் எழுதலாம்.

  • பொதுப் பிரிவினர் மற்றும் கிரீமிலேயர் (Creamy Layer in OBC) அதிக பட்சமாக ஆறு (6) முறை எழுதலாம்.
  • இதர பிற்படுத்த வகுப்பினர் அதிக பட்சமாக ஏழு முறை எழுதலாம்.
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.


தேர்வில் இடஒதுக்கீடுதொகு

இப்போட்டித் தேர்வில் மதிப்பெண்கள் மற்றும் இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கைகளின்படி போட்டியாளர்களைத் தெரிவு செய்வர்.


வகுப்பினர்இட ஒதுக்கீடு
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் (SC)15.0%
பழங்குடியின வகுப்பினர்கள் (ST)7.5%
இதர பிற்படுத்த வகுப்பினர் (OBC)27%
மொத்த இட ஒதுக்கீடு49.5%
பொது ( SC/ST மற்றும் OBC பிரிவினர் உட்பட )50.5%



தேர்வு முறைகள்தொகு

  • இத்தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
  • முதனிலை தேர்வு (Preliminary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
  • முதனிலையில் தேறியவர்கள்  முதன்மைத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுகின்றனர்.
  • முதன்மைத் தேர்வானது இரு கட்டங்களை உடையது. விளக்க எழுத்துத் தேர்வு (Descriptive written) & நேர்முகத் தேர்வு (Interview Test). 
  • முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வில் தேர்வு பெற்றோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
  • முறையே முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைகளை மத்திய பணியாளர் அமைச்சகத்துக்கு அனுப்பும்.
  • பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சகம் தேர்வானோருக்கான பணி ஆணைகளை வழங்கும்.  


    List of Civil Services:





    Mains Exam Subjects(9-Papers)
    Paper /Subject/Marks
    Paper A Compulsory Indian language -300 marks
    Paper B English 300 marks
    Paper I Essay 250 marks
    Paper II General Studies I 250 marks
    Paper III General Studies II 250 marks
    Paper IV General Studies III 250 marks
    Paper V General Studies IV 250 marks
    Paper VI Optional I 250 marks
    Paper VII Optional II 250 marks

    List of optional subject are given below:
    Civil Engineering
    Agriculture
    Psychology
    Geology
    Mechanical Engineering
    Animal Husbandry and Veterinary Science
    History
    Commerce and Accountacy
    Medical science
    Public Administration
    Botany
    Chemistry
    Geography
    Mathematics
    Electrical Engineering
    Physics
    Statistics
    Zoology
    Political Science and International Relations
    The literature of any one of the following languages: Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Hindi, Kashmiri, Konkani, Maithili, Malayalam, Marathi, Manipuri, Nepali, Odia, Punjabi, Sanskrit, Santhali, Sindhi, Tamil, Kannada, Telugu, Urdu and English.


    More Info
    👇


    👆

    ✴️✴️✴️✴️✴️✴️
    ✳️✳️✳️✳️✳️
    💢💢💢💢
    🔰🔰🔰
    ✅✅
    🇮🇳

    🙏