19/04/2026

சாஸ்த்ரா சீமாபால் துணை ராணுவப்படையில் 233 தலைமை காவலர் பணியிடங்கள்- நாளை கடைசி நாள் 20/4/2026

 











பணியிடங்கள் விவரம்:

1. தலைமைக் காவலர் (கண்காணிப்பாளர்): 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கேட்டரிங் மற்றும் கிச்சன் மேனேஜ்மென்ட் படிப்பில் 2 வருட டிப்ளமோ படிப்பை முடித்து ஒரு வருட ‘கண்காணிப்பு’ பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்,

2. தலைமைக் காவலர் (கம்யூனிகேஷன்): 197 இடங்கள் (பொது-87, பொருளாதார பிற்பட்டோர்-18, ஒபிசி-55, எஸ்சி-20, எஸ்டி-17). வயது: 18 முதல் 27க்குள். சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. தகுதி: கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடி/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

3. தலைமைக் காவலர் (எலக்ட்ரீசியன்): 29 இடங்கள் (பொது-13, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-7, எஸ்சி-5, எஸ்டி-2). வயது: 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் டிரேடில் ஐடிஐ படித்து அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. தலைமைக் காவலர் (கால்நடை பிரிவு): 5 இடங்கள் (பொது-3, எஸ்சி-2). சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. வயது: 20 முதல் 27க்குள். தகுதி: உயிரியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கால்நடை மற்றும் கால்நடை தீவன மேம்பாடு அல்லது விலங்கியல் பாதுகாப்பு பாடத்தில் 2 வருட டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

உடற்தகுதி: ‘ஸ்டெவர்டு’ (கண்காணிப்பாளர்) பணிக்கு ஆண்கள் 165 செ.மீ., உயரமும், பெண்கள் 155 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். ஆண்களின் மார்பளவு சாதாரண நிலையில் 75 செ.மீ., அகலமும், விரிவடைந்த நிலையில் 60 செ.மீ., அகலமும் இருக்க வேண்டும்.

இதர பணிகளுக்கு: ஆண்கள் 170 செ.மீ., உயரமும், பெண்கள் 157 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். ஆண்களின் மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ., அகலமும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., அகலமும் இருக்க வேண்டும்.

உடற்திறன்: ஆண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 6½ நிமிடங்களிலும், பெண்கள் 800 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்களிலும் ஓடிக் கடக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரரின் உடற்தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவத் தகுதி மற்றும் எஸ்எஸ்பியால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.ssb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.04.2026.

II. அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்எஸ்பி)

i) ரேடியோகிராபர்: 3 இடங்கள்.

ii) பார்மசிஸ்ட்: 2 இடங்கள்.

iii) ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியன்: 1 இடம்.

iv) டென்டல் டெக்னீசியன்: 1.

மேற்குறிப்பிட்ட பணிக்கான வயது: 20.04.2026

தேதியின்படி 18 லிருந்து 27க்குள்.

சம்பளம்: ரூ.29,200- ரூ.92,300.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் மெடிக்கல் இமேஜிங் டெக்னாலஜி/ரேடியோகிராபி/பார்மசி/ ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி/ டென்டல் ஹைஜினிஸ்ட் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் பெட்/பிஎஸ்டி/சிபிடி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

https://ssb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.04.2026.



🙏

No comments:

Post a Comment