இந்த ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்கலாம். பதிவு செய்ய
கடைசி நாள் – 5 டிசம்பர் 2025
பதிவு இணைப்பு: shaastra.org/open-house
வாட்ஸ்அப் சேனல்: “IITM Open House 2026”
Institute Open House?
The IIT Madras Institute Open House is your exclusive pass to see what happens inside one of India’s premier institutions. As part of Shaastra 2026, our 'Anaivarukkum IITM' (IITM for All) initiative invites you—students, families, and tech enthusiasts alike—to explore our campus and witness the future being built today.
This is your chance to interact with top researchers, get hands-on with exciting demos, and tour state-of-the-art facilities. Come get inspired, see what's possible, and discover the innovations that will shape our future.
ஐஐடி மெட்ராசின் ‘இன்ஸ்டிட்யூட் ஓபன் ஹவுஸ் 2026’ -இல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் ஆராய்ச்சி ஆய்வகங்கள், புத்தாக்க மையங்கள், மாணவர்களின் தொழில்நுட்ப திட்டங்கள் போன்றவற்றை நேரில் சென்று காணலாம்.
ஐஐடிமெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி. காமகோடி கூறுகையில்,
“அனைவருக்கும் IITM என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வருகை தந்ததை முன்னிட்டு, இந்த ஆண்டும் நாடு முழுவதும் உள்ள நகரங்கள், கிராமங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் பெருமளவில் வரவேண்டும். இதன் மூலம் அவர்கள் ஊக்கம்பெற்று, எதிர்காலத்தில் நமது மாணவர்களாக திரும்ப வருவார்கள்,” என்றார்.
பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் கூறுகையில், “ஐஐடி மெட்ராஸ் தன்னுடைய நவீன ஆய்வகங்களை பொதுமக்கள் முன் திறந்து காட்டும் இந்த ஆண்டு விழா, IIT-இல் சேர விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகப் பெரிய ஊக்கம்,” என்றார்.
மாணவர் டீன் பேராசிரியர் என். கும்மடி கூறுகையில்,
“இது அனைத்து மக்களும் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தை நேரில் வந்துபார்க்கவும், இங்கு நடைபெறும் முன்னோடியான ஆராய்ச்சிகளை அனுபவிக்கவும் ஒரு அரிய வாய்ப்பு,” என்றார்.
இந்த ஆண்டு நிகழ்ச்சி, ஐஐடி மெட்ராஸ் ஆண்டு தொழில்நுட்ப விழா Shaastra 2026 உடன் இணைந்து நடைபெறுகிறது. இதன் மூலம் வளாகத்தின் புதுமை கலாச்சாரத்தையும், ஆராய்ச்சி எவ்வாறு நிஜ உலகத் தீர்வுகளாக மாறுகிறது என்பதையும் மக்கள் நேரடியாக காணலாம்.
🙏


No comments:
Post a Comment