Search This Blog

29/08/2024

Tnpsc-Technical Vacancies interview posts to be announced (30-8-2024).

 நேர்முகத் தேர்வுடன் கூடிய தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த வாரம் வெளியிட்ட 2024-ம்ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் புதியதேர்வுக்கான அறிவிப்பு ஒன்று இடம்பெற்றது. அதில், நேர்முகத்தேர்வு கொண்ட தொழில்நுட்ப பணியிடங்களில் 50 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்புஆகஸ்ட் 30-ம் தேதி வெளியிடப்பட்டு அதற்கான தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வருகிற வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது. இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் நவம்பர் 18-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும். தேர்வு அட்டவணையில் எந்தெந்தபதவிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்பட இருக்கிறது என்ற விவரம் கொடுக்கப்படவில்லை. எனினும், மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலுவலர், தொல்லியல்துறை உதவி இயக்குநர், தொழிலாளர்நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட குருப்-ஏ தரத்திலான பதவிகள் இந்த தேர்வில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பொது அறிவு தாள் தேர்வு, கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வு இரண்டும் பொதுவாக ஒருநாளிலும் குறிப்பிட்ட தொழில்நுட்ப பாடங்களுக்கான தேர்வு தனித்தனியாகவும் நடத்தப்படும்.


🙏


10, 11 மற்றும் 12 துணைத்தேர்வு: மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் நாளை வெளியீடு.

சென்னை: 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.


இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) / பத்தாம் வகுப்பு (SSLC) துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள (Revaluation) தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification பகுதியில்) 30.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) / தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.



27/08/2024

அரசு ITI நேரடி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: “தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) மற்றும் 311 தனியார் ஐடிஐ-க்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மாணவர்களுக்காக நாகர்கோவில், உளூந்தூர்பேட்டை, கிண்டி ஆகிய அரசு ஐடிஐ-க்களில் காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோருக்காக பிரத்யேக ஃபிட்டர் தொழிற்பிரிவு இயங்கி வருகிறது. மேலும் அனைத்து அரசு ஐடிஐ-க்களிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


அனைத்து ஐடிஐ-க்களிலும் நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 16 வரை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு ஐடிஐ-யில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். மேலும், தமிழக அரசு வழங்கும் இலவச சைக்கிள், சீருடை, ஷூ, வரைபடக் கருவிகள் உண்டு. அதோடு கட்டணமில்லா பேருந்து வசதியும் வழங்கப்படும்.

எனவே, காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாகர்கோவில், உளுந்தூர்பேட்டை கிண்டி தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று சேர்க்கை பெறலாம். சேர்க்கை நீட்டிப்பை மாற்றுத்திறனாளிகளும், அனைத்து மாணவர்களும் பயன்படுத்தி தாங்கள் சேர விரும்பும் அரசு ஐடிஐ-க்கு கல்விச்சான்றிதழ்களுடன் நேரில் சென்று விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்து சேரலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் எழுந்தால் 9499055689 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔰🔰🔰


🙏


19/08/2024

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; ஆக.21 கலந்தாய்வு தொடக்கம்


 மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார். ஆகஸ்ட் 21 ஆம் தேதி மருத்துவ தேர்வு குழு மூலமாக கலந்தாய்வு தொடங்க உள்ளது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்தாண்டை விட இந்த ஆண்டு 150 மாணவர்கள் கூடுதலாக சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் அன்னை மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களும், கன்னியாகுமரியில் உள்ள மெடிக்கல் மிஷன் அண்ட் ரிசர்ச் செண்டர் கல்லூரியில் 100 மாணவர்களும் என மொத்தம் 150 இடங்கள் கூடுதலாக கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரை 9,800 எம்பிபிஎஸ், 2150 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்குகிறது. இந்த இடங்களுக்கு 43 ஆயிரத்து 63 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் ஆகும். அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில், 6,630 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. தொடர்ந்து, நாமக்கலைச் சேர்ந்த ரஜினிஷ் என்ற மாணவன் 720 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.

அதேபோல அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் 3683 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்த இட ஒதுக்கீட்டில், 669 மதிப்பெண்களைப் பெற்று சென்னையைச் சேர்ந்த ரூபிகா முதலிடம் பெற்றுள்ளார். காயத்ரி இரண்டாவது இடமும், அனுஷ்யா மூன்றாவது இடமும், ரத்தீஸ் நான்காவது இடமும் பெற்றுள்ளனர்.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் என 4 வகை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது” என்றார்.


17/08/2024

HCL நிறுவனத்தில் SC/ST மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு படிக்க வாய்ப்பு

 பிளஸ் 2 முடித்த எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிர்வாக இயக்குநர் கே.எஸ். கந்தசாமி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: "எச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு (பிஎஸ்சி கம்ப்யூட்டிங் டிசைனிங்,. பிகாம், பிசிஏ, பிபிஏ) படிக்க ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி்ன்றன.

அவர்கள் 2022 - 2023 அல்லது 2023 - 2024-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2022 - 2023ம் ஆண்டு படித்து முடித்திருந்தால் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணும் , 2023 - 2024ம் ஆண்டு படித்திருந்தால் 75 சதவீத மதிப்பெண்ணும் அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி அளித்து நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

அதோடு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பிட்ஸ் பிலானி கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டிங் டிசைனிங் பட்டப்படிப்பு, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பிசிஏ படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பிசிஏ, பிபிஏ, பிகாம் படிப்பு, நாக்பூர் ஐஐஎம்-ல் ஒருங்கிணைந்த மேலாண்மை பட்டப்படிப்பு படிக்கவும் வாய்ப்பு பெற்றுத்தரப்படும். தகுதியான மாணவர்கள் எச்சிஎல் நடத்தும் நுழைவுத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

இந்நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். ஓராண்டு கால பயிற்சிக்கான செலவினத்தை தாட்கோ நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். பணியமர்த்தப்படுவோருக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.17 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். பின்னர் திறமைக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை பதவி உயர்வு அடிப்படையில் பெறலாம். இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் மாணவர்கள் தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க

👇

www.tahdco.com



 🙏




07/08/2024

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு.



கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 17,497 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ள நிலையில் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறஉள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. மீதம் தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கின்றன.

இதில், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் அகிய இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024 - 25-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 3-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 28-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 14,497 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 3,000 பேரும் என மொத்தம் 17,497 பேர் விண்ணப்பித்துஉள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழகத்தின் https://adm.tanuvas.ac.inhttps://tanuvas.ac.in என்ற இணையதளங்களில் வெளியிடப்படுகிறது.

7.5 சதவீத உள்இடஒதுக்கீடு: இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்பில் 45 இடங்கள், பி.டெக் படிப்புகளில் 8 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையதள முகவரி 


https://adm.tanuvas.ac.in



03/08/2024

CLAT-2025(Common Law Admission Test)Online Application Opened.Closes on : 15-10-2024.





 The Common Law Admission Test (CLAT) is a national level entrance exam for admissions to undergraduate (UG) and postgraduate (PG) law programmes offered by 24 National Law Universities in India.

✴️✴️✴️

CLAT is organized by the Consortium of National Law Universities, comprising representative universities.

✳️✳️✳️

Several affiliate universities and organisations also use the CLAT exam for admissions and recruitment respectively.

🔰🔰🔰

All admissions to the 5-year integrated LL.B. and LL.M. programmes that commence in the Academic Year 2024-2025 shall be through the CLAT 2025.



⚡⚡⚡

🙏