நேர்முகத் தேர்வுடன் கூடிய தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த வாரம் வெளியிட்ட 2024-ம்ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் புதியதேர்வுக்கான அறிவிப்பு ஒன்று இடம்பெற்றது. அதில், நேர்முகத்தேர்வு கொண்ட தொழில்நுட்ப பணியிடங்களில் 50 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்புஆகஸ்ட் 30-ம் தேதி வெளியிடப்பட்டு அதற்கான தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வருகிற வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது. இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் நவம்பர் 18-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும். தேர்வு அட்டவணையில் எந்தெந்தபதவிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்பட இருக்கிறது என்ற விவரம் கொடுக்கப்படவில்லை. எனினும், மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலுவலர், தொல்லியல்துறை உதவி இயக்குநர், தொழிலாளர்நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட குருப்-ஏ தரத்திலான பதவிகள் இந்த தேர்வில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பொது அறிவு தாள் தேர்வு, கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வு இரண்டும் பொதுவாக ஒருநாளிலும் குறிப்பிட்ட தொழில்நுட்ப பாடங்களுக்கான தேர்வு தனித்தனியாகவும் நடத்தப்படும்.
🙏
No comments:
Post a Comment