Search This Blog

04/10/2023

கேட் தேர்வு விண்ணப்பிக்க அக்.5 வரை வரை கால அவகாசம் நீட்டிப்பு.

 முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுதேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்.3 முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) நடத்துகிறது.

இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த ஆக.30-ல் தொடங்கி செப்.29-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இதுவரை சுமார் 1.38 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://gate2024.iisc.ac.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தாமதக் கட்டணத்துடன் அக்.13 வரை விண்ணப்பிக்கலாம். நவ.7 முதல் 11-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். ஹால் டிக்கெட் ஜன.3-ல் வெளியிடப்படும். தேர்வு முடிவு மார்ச் 16-ல் வெளியாகும்.

🔰🔰🔰🔰🔰

🙏

No comments:

Post a Comment