Search This Blog

11/04/2022

B.Ed, DTEd இறுதி ஆண்டு படிப்பவர்களும் TET எழுதலாம்

 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டு , விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக 14.03.2022 முதல் பெறப்பட்டு வருகிறது.விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 13.04.2022 ஆகும் . ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில் பக்கம் எண் 4 , வரிசை எண் 3 ( b ) யில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 க்கான கல்வித் தகுதிகள் குறித்தான வரையரையில் பட்டப்படிப்பு முடித்து பி.எட் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate- னை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிக்க Online விண்ணப்பத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


மேலும் , அறிவிக்கையின் பக்கம் எண் 2 , வரிசை எண் 3 ( a ) ல் தாள் 1 க்கான கல்வித் தகுதிகள் குறித்தான வரையரையில் மேல்நிலைக் கல்வி முடித்து இறுதியாண்டு ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு ( Diploma in Teacher Education ) படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate- னை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிக்க Online விண்ணப்பத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது . எனவே , பி.எட் இறுதியாண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு ( Diploma in Teacher Education ) இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate- னை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது .







No comments:

Post a Comment