Search This Blog

28/04/2021

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவை இல்லை பள்ளி கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

 மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவை இல்லை பள்ளி கல்வித்துறை  இயக்குநர் உத்தரவு





🙏




SBI, 5237 ஜூனியர் அஸோசியட்ஸ் பணியிடங்கள் அறிவிப்பு..

 

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஜூனியர் அஸோசியட்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 5,237 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 473 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், வட்டார மொழியில் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

இந்த பதவிகளுக்கான ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ. 19,900 ஆக உள்ளது.


இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://bank.sbi/careers OR https://www.sbi.co.in/careers என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதிகள்:

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர் 01.04.2021 அன்று 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் 16.08.2021க்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி 27.04.2021 எனவும் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 17.05.2021 எனவும் எஸ்பிஐ ஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு முறை:

இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வட்டார மொழி தகுதித் தேர்வு மூன்று படிநிலைகள் உண்டு. இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு:

முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 190 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம் 40 நிமிடங்கள். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே வேலை கிடைக்கும். இந்த முதன்மைத் தேர்வுகள் 31.07.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் வட்டார மொழி தகுதித் தேர்வு நடைபெறும். பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.


நன்றி: Indian Express

27/04/2021

சென்னை,மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CLRI) வேலைவாய்ப்பு அறிவிப்பு, கடைசி நாள் 29/4/2021

 


மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CLRI) பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: MVSc/ B.Tech/ MSc/ BE/ Graduate Degree/ BCom/ BSc/ BCA/ Diploma

காலி பணியிடங்கள்: 47

வயது : 35-50

சம்பளம்: ரூ. 28,000 - ரூ.42,000

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 29

இன்று 1-16 வரையிலான பணிக்கு நேர்காணல் முடிந்து விட்டது.

கூடுதல் விவரங்களுக்கு அணுகவும் 👉PDF

இணையதளம் https://clri.org/Careers.aspx


முயற்சி மெய்வருத்த

 கூலி தரும்

🙏


தமிழக அரசின் அங்கன்வாடியில் 4200 காலி பணியிடங்கள் அறிவிப்பு..!

 


தமிழக அரசின் அங்கன்வாடி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: MINI WORKER, MAIN WORKER, HELPER.

காலிப்பணியிடங்கள்: 4200.

வயது: 20- 40

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

தேர்வு: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு.

மேலும் இது குறித்த கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு https://icds.tn.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

25/04/2021

551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க மோடி உத்தரவு.

 


கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில், நாடு முழுவதும் 551 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனைகளுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் விநியோகம் செய்ய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் 551 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ஆக்சிஜன் மையங்களை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க வேண்டுமென கூறியுள்ள மத்திய அரசு,

அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் அமைக்கப்படும் உற்பத்தி மையங்களால், அனைத்து மருத்துவமனைகளுக்கும் தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிதாக அமைக்கப்படும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை விரைவில் செயல்பட வைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நன்றி:மாலை முரசு

24/04/2021

26.4.2021 அதிகாலை 4.00 முதல் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள்.



 26.4.2021 அதிகாலை 4.00 முதல் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள்.

26.4.2021 அதிகாலை 4.00 மணி முதல் கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன :


அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.


பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 


வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை. 


தனியாக செயல்படுகின்ற மளிகை உட்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. 


ஒரே சமயத்தில் 50 வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.


சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.


அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். 


உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. 


விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். 


உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.


அனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.


அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. 


தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை.


கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, 50 நபர்கள் பங்கேற்புடன் நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 


இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. 


புதிதாக குடமுழுக்கு / திருவிழா நடத்த அனுமதி இல்லை.


திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.


இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.


தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.


கோல்ஃப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. 


எனினும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.


புதுச்சேரி தவிர்த்து, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org  என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.


வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் / கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.


ஏற்கனவே ஆணையிடப்பட்டவாறு, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில், இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். 


பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.


வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில், ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.


பொது தொழில் நிறுவனங்களுக்கான கரோனா பொது முடக்ககால செயல்பாடுகள் தொடர்பாக, தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணைகள் எண் 346, நாள் 18.4.2021 மற்றும் எண் 348, நாள் 20.4.2021 ஆகியவற்றின்படி வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் எவ்வித மாறுதலும் இன்றி தொடர்கின்றன.


பணிக்கு செல்லும் பணியாளர்கள், பணிக்குச் சென்று வருகையில் தங்கள் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையை தவறாமல் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


அரசு செய்தி வெளியீடு படிக்க👉Click Here


🙏

20/04/2021

12 ஆம் வகுப்பு ,கணிதவியல் , திருப்புதல் தேர்வு வினாக்கள்-2021- தொகுப்பு, T/M



 12 ஆம் வகுப்பு கணிதவியல் , திருப்புதல் தேர்வு வினாக்கள்-2021 தொகுப்பு


        SALEM      DISTRICT REVISION QUESTION PAPER T/M👉CLICK HERE

   NAMMAKAL DISTRICT REVISION QUESTION PAPER T/M👉CLICK HERE

KALAKURICHI DISTRICT REVISION QUESTION PAPER T/M with key👉CLICK HERE

        ARTHI    CENTRE       REVISION QUESTION PAPER T/M👉CLICK HERE

REVISION QUESTION PAPER  BY MR. PALANIAYAPPN T/M👉CLICK HERE

    VILLUPURAM DISTRICT   REVISION QUESTION PAPER T/M👉CLICK HERE /Key

தூத்துகுடி      DISTRICT   REVISION  QUESTION PAPER VOL 1 T/M👉CLICK HERE/Key

RANIPET DISTRICT REVISION QUESTION PAPER T/M👉 CLICK HERE

TIRUNELVELI DISTRICT REVISION QUESTION PAPER T/M👉 CLICK HERE

TIRCHY DISTRICT REVISION QUESTION PAPER T/M👉Question / Key

CHENGALPET DISTRICT REVISION QUESTION PAPER T/M👉Click Here



UNIT TEST 1, 2 👉CLICK HERE

UNIT TEST 7,8,9👉CLICK HERE



                                       

நன்றி


                                   


15/04/2021

கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் -- தமிழக அரசு

 



கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும் உயர்நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் எனவும் அந்த தேர்வை எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படமாட்டார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இதை ஏற்ற நீதிமன்றம் 8 வாரத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் இதுகுறித்த அறிக்கையை ஜூலை 2வது வாரத்திற்கு பிறகு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

12/04/2021

UPSC ANNOUNCED ISS,IES,ENGG EXAMINATIONS, Last Date--27/4/2021.


UPSC announced the following Examinations


Indian Statistical Service Examination-2021--Degree in Maths/Statistics/Equivalent

Indian Economic Service Examination-2021---PG degree  Economics /Equivalent 

Engineering Services (Preliminary / Stage I) Examination-2021---- Any Engg Degree


More details  Contact---https://www.upsc.gov.in

Last date : 27/4/2021 , 6.00 pm

Apply online 👉Click Here


12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத்தேர்வு தேதி மாற்றி அறிவிப்பு.

 




12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத்தேர்வு தேதி மாற்றி அறிவிப்பு.


ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு  அட்டவணை




தற்போது அறிவிக்கப்பட்ட திருந்திய தேர்வு அட்டவணை

🙏

08/04/2021

கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை...!

             


     

 சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். அதே வேளையில், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வர இ-பதிவு அவசியம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது உள்ளிட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

🙏




02/04/2021

அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும்: தேர்தல் ஆணையம்

காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு கூறினார்.  80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் ஏப்.5-ம் தேதி வரை தபால் வாக்குகள் பெறப்படும் எனவும் கூறினார். 4.66 லட்சம் தபால் வாக்குகளில் இதுவரை 1.31 லட்சம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன எனவும் தகவல் தெரிவித்தார்.


01/04/2021

ஆதார் (Aadhaar Card) உடன் பான் கார்டை ( PAN) இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

Aadhar PAN Link: ஆதார் (Aadhar Pan Link) உடன் பான் கார்டை இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. CBDT அதாவது மத்திய நேரடி வரி வாரியம் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் ஆதார் (Aadhar) ஆகியவற்றை இணைப்பதற்கான கடைசி தேதியாக 31 மார்ச் 2021 ஐ நிர்ணயித்தது. ஆனால் இப்போது மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்து இந்த கடைசி தேதியை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.

கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு இந்த மிகப்பெரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையின் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் (Aadhaar Card) உடன் பான் கார்டை ( PAN) இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் 'Link Aadhaar' பிரிவில் ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்கி எளிதாக இணைத்துவிடலாம். ஏற்கெனவே உங்கள் ஆதாருடன் பான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை 'Aadhaar Status' பிரிவில் தெரிந்துகொள்ளலாம்.

எஸ்எம்எஸ் மூலமாகவும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க முடியும். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN SPACE 12 digit Aadhaar SPACE 10 digit PAN என்ற முறையில் எஸ்எம்எஸ் அனுப்பி ஆதாருடன் பான் கார்டை இணைத்துவிடலாம். இந்த இணைப்புக்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

முன்னதாக நேற்று மார்ச் 31-ஆம் தேதி கடைசி நாள். இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது எனக் தெரிவித்திருந்தது. இதனால் கடைசி நாளான நேற்று இணைய தளத்தில் ஏராளமானோர் ஒரே நேரத்தில் நுழைந்தனர். இதனால் இணைய தளம் முடங்கியது. பெரும்பாலானோரால் இணைக்க முடியவில்லை. மேலும், காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.