கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில், நாடு முழுவதும் 551 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனைகளுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் விநியோகம் செய்ய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் 551 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ஆக்சிஜன் மையங்களை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க வேண்டுமென கூறியுள்ள மத்திய அரசு,
அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் அமைக்கப்படும் உற்பத்தி மையங்களால், அனைத்து மருத்துவமனைகளுக்கும் தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புதிதாக அமைக்கப்படும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை விரைவில் செயல்பட வைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி:மாலை முரசு
No comments:
Post a Comment