NEET, JEE பாடத்திட்டம் 20% குறைப்பு – மத்திய அமைச்சர் தகவல்
இந்தியாவில் நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வுகளான NEET, JEEபோன்றவற்றின் பாடத்திட்டம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்து உள்ளார்.
NEET, JEE தேர்வுகள் :
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி காலியிடங்களுக்கு மாணவர்கள் சேர நீட் என்ற தேசிய பொது நுழைவுத் தேர்வானது கடந்த 2017ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர்ந்து பயில முடியும்.
அதேபோல் தேசிய தொழில்நுட்ப கழகங்களில் சேர்ந்தது பொறியியல் பாடங்களில் பயில ஜே.இ.இ.தேர்வுகளும் கட்டாயமாக்கட்டுள்ளது. இவற்றிற்கான பாடத்திட்டங்கள் மாணவர்களின் பள்ளி பாடங்களை ஒத்ததாகவே இருக்கும். இவ்விரு தேர்வுகளையும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. சமீபத்தில் தான் இந்த கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.
பாடத்திட்டம் குறைப்பு !!
தற்போது மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஒரு தகவலினை வெளியிட்டுள்ளார். அதாவது, NEET, JEE தேர்வுகளுக்கான பாடத்திட்டம் 20% வரை குறைக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சூழலைப் பொறுத்து NEET, JEE தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment