Search This Blog
24/10/2020
23/10/2020
22/10/2020
18/10/2020
பன்னிரெண்டாம் வகுப்பு, கணிதவியல் முதல் தொகுதி புத்தகத்தின் Book Back one mark questions. Quiz format in Google form with certificate.
பன்னிரெண்டாம் வகுப்பு, கணிதவியல் முதல் தொகுதி புத்தகத்தின் Book Back One Mark Questions. Quiz Format in Google Form with Certificate.
CHAPTER 1 ----- https://forms.gle/3hA2xNbuTvSNS1177
CHAPTER 2 ----- https://forms.gle/LUY6iw1Hj2hWGWU9A
CHAPTER 3 ----- https://forms.gle/hrohmgs1WKbWtQGNA
CHAPTER 4 ----- https://forms.gle/xivgreGDyahGD7418
CHAPTER 5 ----- https://forms.gle/dryCcKwy4chyonSP9
CHAPTER 6 ----- https://forms.gle/dQBhzUrBcnfFd5UbA
✅✅✅✅✅✅✅PLEASE SEND YOUR FEEDBACK.✔✔✔✔✔✔✔
எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) முதுநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், பல பெற்றோர்களிடமிருந்து மேற்கண்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கும் நாள் காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரிக்கை வந்ததால் விண்ணப்பம் அளிக்க கடைசித் தேதி அக்.23 ஆம் தேதி வரை நீட்டித்து தொழிலாளர் கல்வி நிலையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:''தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப்படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), டி.எல்.எல். ஏ.எல். (தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் / வார இறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல். ஏ.எல். படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது.பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பி.ஜி.டி.எல்.ஏ மற்றும் டி.எல்.எல். ஏ.எல். ஆகிய பட்ட / பட்ட மேற்படிப்பு / பட்டயப் படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித்தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் மனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர் (தற்போது தொழிலாளர் உதவி ஆணையர்) மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ பட்ட / பட்ட மேற்படிப்பு / பட்டயப் படிப்பு தகுதியாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) முதுநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், பல பெற்றோர்களிடமிருந்து மேற்கண்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கும் நாள் காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் வந்ததாலும், மேற்கண்ட படிப்பிற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 23.10.2020 மாலை 4.00 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பக் கட்டணம் (நேரில்) - ரூ.200/- பட்டியல் இன மாணவர்களுக்கு ரூ.100/- (சாதிச்சான்றிதழ் நகல் தாக்கல் செய்யவேண்டும்)பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 23.10.2020.தபாலில் பெற விரும்புவோர் விண்ணப்பக் கட்டணம் + தபால் கட்டணமாக ரூ.50/- கூடுதலாக அனுப்ப வேண்டும். வங்கி வரைவோலை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chenna- 5" என்ற பெயருக்கு எடுத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு : ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை)முனைவர் ரா. இரமேஷ்குமார்,உதவிப் பேராசிரியர்,தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்,எண்.5 காமராசர் சாலை,சென்னை - 600 005.தொலைபேசி : 9884159410, 044-28440102 / 28445778.Email: tilschennai@tn.gov.in''.இவ்வாறு தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் தெரிவித்துள்ளது
Subscribe to:
Posts (Atom)