Search This Blog

Showing posts with label Practical exam dates. Show all posts
Showing posts with label Practical exam dates. Show all posts

09/01/2023

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

 



 தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 7 முதல் 10 ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஜன.4 ஆம் தேதி வெளியானது. பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதுபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

✅✅✅✅✅✅✅

🙏