வெற்றியாளராக வலம்வர... உயர் கல்வியில் கவனமும், விருப்பப் பாடமும்.
கல்வி என்பது மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் தன்னம் பிக்கையுடன் வாழக் கற்றுக் கொள்ள வழிவகுப்பதே! தங்களது குழந்தைகளைச் சாதனையாளர்களாக மாற்ற பெற்றோர் எடுக்க வேண்டிய முதல் முயற்சி, சிறந்த கல்வியைக் கொடுப்பதே. கல்வி இல்லாமல் குழந்தைகள் ஒருபோதும் சவால்களை எதிர்கொள்ள இயலாது. கல்வியின் முக்கியத்துவத்தைத் தங்கள் பிள்ளைகளிடம் தொடர்ந்து கவனப்படுத்திக்கொண்டே இருப்பதுதான் பெற்றோர் செய்யும் மிகப் பெரிய நன்மை.
உயர் கல்வியில் கவனம்: கல்வி ஒன்றுதான் மனிதர்களைப் புகழின் உச்சிக்கே கொண்டு போகும். ஓர் ஏழை மாணவரை உலகம் வியக்கும் பணக்காரராக மாற்றும் வல்லமை கல்விக்கே உண்டு. இப்படிப்பட்ட கல்வியோடு, ஒழுக்கமான, அமைதியான, துணிச்சலான, புத்திசாலியான, செயல் வேகம் கொண்ட மாணவர்களை உருவாக்குவதில் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. இவ்வாறு சிறந்த மாணவர்களை உருவாக்கினாலும், அவர்களை வெற்றி யாளர்களாக மாற்றுவது நம் அனைவரின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.
ஏனென்றால் மாணவர் களுக்குப் பள்ளிப்படிப்பின் போதும், முடித்த பின்பும் எத்தகைய உயர் கல்வியைக் கற்கலாம் என்பதில் போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. இதனால் பல நல்ல வாய்ப்புகளை இழக்கும் மாணவர்கள் தங்களுக்கான வெற்றிப் பாதையை அடைய முடிவதில்லை.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டு மெனில், பெரும்பான்மையான மாணவர்கள் பிளஸ் 2 முடித்து ரிசல்ட் வந்த பிறகுதான் அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்குகின்றனர். ஆனால், இந்தியாவின் பிரசித்தி பெற்ற பெரும்பாலான கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களும் நுழைவுத் தேர்வுகளும் அதற்கு முன்னரே முடிந்து விடுகின்றன.
.
இதன் காரணமாக ஒரு சாதாரணமான கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு பயில வேண்டிய சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். இதனால் சிறந்த கல்வியையும் வேலை வாய்ப்புக்குத் தேவையான திறமையையும் பெற முடியாத சூழல் உருவாகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், வேலை வாய்ப்பு என்பது நிறைய மாண வர்கள் ஒரே துறையைத் தேர்ந்தெடுக் கும்போது குறைகிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், மாணவர்க ளிடத்தில் மருத்துவம், பொறியியல், வணிகவியல் மட்டுமல்லாது பிற துறைகளிலும் இருக்கும் எண்ணற்ற வாய்ப்புகளையும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.
இந்த விழிப்புணர்வைப் பள்ளிகள், ஒரு மாணவர் 10ஆம் வகுப்பு படிக்கும் போதே ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் இதைச் செய்யத் தவறும்பட்சத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளிடத்தில் எப்படியாவது கொண்டு சேர்க்க வேண்டும்.
அப்படிச்சேர்க்கும்போது, அனைத்துத் துறை களிலும் இருக்கும் வாய்ப்புகளைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து அவர்களுக்குப் பிடித்தமான துறை யைத்தேர்ந்தெடுத்துப் படித்து, வெற்றியாளர்களாக வலம்வரு வார்கள். பிடித்ததைப் படிக்கும்போது, படிப்பதிலும் மாணவர்களுக்கு நாட்டம் அதிகரிக்கும்.
விருப்பப் பாடம்: தங்களது பிள்ளைகளுக்கு ஈடுபாடும் விருப்பமும் உள்ள துறையில் மேற்படிப்பைப் பயில பெற்றோர் அனுமதிக்க வேண்டும். தவிர உங்கள் விருப்பங்களைச் சமூகத்திற்காக அவர்களிடம் திணிக்கக் கூாது. உங்கள் குழந்தைகளின் திறமையைக் கண்டறிந்து, ஊக்குவித்து, அன்பை மட்டுமே அவர்களிடத்தில் காட்ட வேண்டுமே தவிர, உங்கள் எண்ணங் களையும் விருப்பங்களையும் அல்ல. ஏனென்றால் குறிப்பிட்ட துறையில் மட்டும்தான் வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கக் கூடாது.
எடுத்துக்காட்டாக, விளையாட்டில் விருப்பமுள்ள ஒரு மாணவர், மத்திய அரசின் தேசிய விளையாட்டுக் கழகத்தில் சேர்ந்து படிக்கும்போது, படித்து முடித்தபின் மிகச் சிறந்த வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் பெற முடியும். இந்தக் கல்லூரியில் சேர நல்ல உடலமைப்பும் ஏதோ ஒரு விளையாட்டில் திறமையுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போது மானது.
இதேபோல் சமையல் கலையில் விருப்பமுள்ள மாணவர், மத்திய அரசின் இந்திய சமையல் கலைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும்போது மத்திய அரசின்கீழ் இயங்கும் ரயில்வே, ராணுவம், விமானப்படை போன்ற வற்றில் சமையல் பிரிவில் வேலை வாய்ப்பு பெறமுடியும். இந்தக் கல்லூரியில் உலகளவில் விரும்பி உண்ணக்கூடிய பிற நாட்டுச் சமையல் கலையையும் கற்றுத் தருவதால் வெளிநாடுகளிலும் பன்னாட்டுக் கப்பல் களிலும் மிக உயர்ந்த சம்பளத்துக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இதன்மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், துறை யைத் தேர்ந்தெடுப்பது மட்டும் முக்கிய மல்ல, அந்தத் துறையில் மிகச்சிறந்த கல்லூரிகள் எவை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
உதாரணமாக, கூகுள் நிறுவனத் தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை படிக்கும் போது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பைப்படிக்கவில்லை. கூகுள் சி.இ.ஓ. ஆக வேண்டும் என்று படிக்கவில்லை. ஆனால், நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்று உழைத்து, ஐஐடி கரக்பூரில் கிடைத்த துறையைப் படித்தார் (மெட்டலர்ஜிகல் இன்ஜினீயரிங்).
ஐஐடி-இல் படித்ததனால் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு எளிமையாகக் கிடைத்தது. அங்கும் சென்று கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவில்லை. மெட்டீரியல் சயின்ஸ் துறையில் எம்.எஸ். பட்டம் பெற்று மேலாண்மைப் படிப்பை மெக்கென்ஸி பல்கலைக்கழகத்தில் முடித்து, கூகுள் நிறுவனத்தில் 2004இல் சேர்ந்து, 2015இல் சி.இ.ஓ. ஆகப் பதவியேற்றார். எனவே மாணவர்கள் சிறந்த கல்லூரிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
* வேளாண்மை (Agriculture) * கட்டடக் கலை (Architecture) * ராணுவம் - பாதுகாப்பு (Army & Defence) * உயிரித் தொழில்நுட்பம் (Bio-Technology) * வர்த்தகம் (Commerce) * சமையல்கலை (Culinary Arts) * பால்வளத்துறை (Dairy Technology) * வடிவமைப்பு (Design) * பொருளாதாரம் (Economics), பொறியியல் (Engineering) * உடை அமைப்பு (Fashion) * மீன்வளத்துறை (Fishery Science) * உணவுத் தொழில்நுட்பம் (Food Technology) * அயல் மொழிகள் (Foreign Languages) * செவித்திறன் குறைபாடு (Hearing Impaired) * உணவு விடுதி மேலாண்மை (Hotel Management) * மானுடவியல் புலம் (Humanities)
* இந்திய மருத்துவம் (Indian Medicine) * சட்டம் (Law) * மேலாண்மை (Management) * ஊடகம் (Media) * கடற்படை (Marine) * Medicine (மருத்துவம்) * கப்பல் துறை (Nautical Science) * செவிலியர் (Nursing) * துணை மருத்துவம் (Para Medical) * உடற்கல்வி (Physical Education) * விமானி (Pilot) * ஆராய்ச்சி (Research) * அறிவியல் (Science) * சமூக அறிவியல் (Social Science) * ஆசிரியர் பயிற்சி (Teacher Training) * கால்நடை அறிவியல் (Veterinary Science) போன்ற துறைகளில் இருக்கும் வாய்ப்புகளையும் அதைப் படிப்பதற்கான சிறந்த கல்லூரிகள் நடத்தும் 70க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகளையும் தெரிந்துகொண்டு, தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் தலைசிறந்த கல்லூரியில் கல்வியைப் பெற்று, வெற்றியாளர்களாகத் திகழ வாழ்த்துகள்!
நன்றி.
இந்து தமிழ் திசை.
🙏
