Search This Blog

Showing posts with label Labour's studies.. Show all posts
Showing posts with label Labour's studies.. Show all posts

24/05/2024

தொழிலாளர் மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்: 30/5/2024 வரை நீட்டிப்பு




மிழக அரசு கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சென்னை அம்பத்தூர் மங்களபுரத்தில் (அரசு ஐடிஐ பின்புறம்) இயங்கி வருகிறது. இங்கு பிஏ (தொழிலாளர் மேலாண்மை), எம்ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுகலை டிப்ளமோ (பிஜிடிஎல்ஏ), படிப்பும் தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாகவியல் டிப்ளமோ படிப்பும் (டிஎல்எல்) வழங்கப்படுகின்றன.

முதுகலை டிப்ளமோ படிப்பு மாலை நேர படிப்பாகும். டிப்ளமோ படிப்பு வார இறுதி படிப்பாக நடத்தப்படுகிறது. 2024-2025-ம் கல்வி ஆண்டில் பிஏ (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.100. விண்ணப்பத்துடன் சாதி சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை தபால் வழியாக பெற, விண்ணப்ப கட்டணத்துக்கான டிமான்ட் டிராப்டை ‘The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai’ கோரிக்கை கடிதத்துடன் பதிவு தபால், விரைவு அஞ்சல் அல்லது கூரியர் வாயிலாக அனுப்ப வேண்டும். பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். கூடுதல் விவரங்கள் அறிய தொழிலாளர் கல்வி நிலைய ஒருங்கிணைப்பாளரான இணை பேராசிரியர் ஆர்.ரமேஷ்குமாரை 98841-59410 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🙏


22/06/2022

தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்டமேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப் படிப்பு-.எங்க படிக்கலாம்?

 தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்டமேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டபடிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலைநேர பட்டயப் படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்படுகின்றன.பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல். படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெறுகின்றன. விருப்பமுள்ள 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்டப் படிப்புக்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடந்த திங்கள்கிழமை (ஜூன்20) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விண்ணப்பக் கட்டணத்துக்கான ரூ.200/- (SC/ST ரூ.100/-) வங்கி வரைவோலையை 'The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai' என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் விரைவு அஞ்சல்/கூரியர் மூலம் அனுப்பி வைக்கலாம்.

மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 4-ம் தேதி ஆகும்.

மேலும் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) இரா.ரமேஷ்குமார், உதவிப் பேராசிரியர், 9884159410 என்ற செல்பேசி எண்ணுக்கும், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ. பின்புறம்), அம்பத்தூர், சென்னை 600098 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் 044-29567885/29567886 என்ற தொலைபேசி எண்கள், tilschennai@tn.gov.in என்ற மின் அஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.