Search This Blog

Showing posts with label LLB admission-2022. Show all posts
Showing posts with label LLB admission-2022. Show all posts

08/08/2022

3 ஆண்டுகால எல்எல்பி சட்டப் படிப்பில் சேர 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 பட்டப்படிப்பு முடித்தவர்கள் 3 ஆண்டுகால எல்எல்பி சட்டப் படிப்பில் சேர 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

3 ஆண்டுகால எல்எல்பி சட்டப் படிப்பில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ ரஞ்சித் ஓமன் ஆபிரஹாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


''தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. Ambedkar Law University) மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு சட்டக் கல்லூரிகளில், ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பில் (L.L.B) 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ இணைவுபெற்ற அனைத்து   

அரசு சட்டக் கல்லூரிகளிலும்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ சீர்மிகு சட்டப் பள்ளியிலும்‌ பயிற்றுவிக்கப்படும்‌ 3 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு 05.08.2022 முதல்‌ 30.08.2022 வரை பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரப்பூர்வ இணையதளமான tndalu.ac.in என்ற இணைய முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்,

பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்

பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ்

பி.காம். எல்எல்பி ஹானர்ஸ்

பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய 4 படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இதற்கு மாணவர்கள் ஜூலை 29ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். இந்த நிலையில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.


குறிப்பாக, 3 ஆண்டு எல்எல்பி ஹானர்ஸ் படிப்பு மற்றும் 3 ஆண்டு எல்எல்பி பட்டப் படிப்பு ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கு மாணவர்கள் ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


இவ்வாறு தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ ரஞ்சித் ஓமன் ஆபிரஹாம் தெரிவித்துள்ளார்.

கூடுதல் விவரங்களுக்கு: 

https://www.tndalu.ac.in/

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல்கலைக்கழக வளாகத்துக்கு மாணவர்கள் வர வேண்டிய தேவை இருக்காது. இதனால் மாணவர்கள் 044-24641919, 044-24957414 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Registration👉 https://www.emsecure.in/tnlaw223/Application/Registration?courseId=HLL