Search This Blog

Showing posts with label CSE2022. Show all posts
Showing posts with label CSE2022. Show all posts

08/02/2022

861 காலியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு-2022; யுபிஎஸ்சி அறிவிப்பு: கடைசி நாள் 22/2/2022



861 காலியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு-2022; யுபிஎஸ்சி அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு.


மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 861 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 

Exam Notice: 05/2022-CSP

தேர்வின் பெயர்: UPSC- Civil Services Examination 2022

காலியிடங்கள்: 861 

தகுதி:இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 01.08.2022 தேதியின்படி, 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிஎஸ்சி பிரிவைச் சேர்த விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100 + இதர சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்தேர்வானது இரு கட்டங்களாக நடத்தப்படும். முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

முதல்கட்ட தேர்வு நடைபெறும் நாள்: 05.06.2022.


தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை:  www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2022

மேலும் விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

UPSC Posts – 3 Types of Civil Services

All India Civil Services

Indian Administrative Service (IAS)

Indian Police Service (IPS)

Indian Forest Service (IFoS)

Group ‘A’ Civil Services

Indian Foreign Service (IFS)

Indian Audit and Accounts Service (IAAS)

Indian Civil Accounts Service (ICAS)

Indian Corporate Law Service (ICLS)

Indian Defence Accounts Service (IDAS)

Indian Defence Estates Service (IDES)

Indian Information Service (IIS)

Indian Ordnance Factories Service (IOFS)

Indian Communication Finance Services (ICFS)

Indian Postal Service (IPoS)

Indian Railway Accounts Service (IRAS)

Indian Railway Personnel Service (IRPS)

Indian Railway Traffic Service (IRTS)

Indian Revenue Service (IRS)

Indian Trade Service (ITS)

Railway Protection Force (RPF)

Group ‘B’ Civil Services

Armed Forces Headquarters Civil Service

DANICS

DANIPS

Pondicherry Civil Service

Pondicherry Police Service.



🙏