Air Force Common Admission Test Exam-2026.
பணி: கமிஷன்டு ஆபீசர்ஸ். மொத்த காலியிடங்கள்: 284.
வயது வரம்பு: 01.07.2026 தேதியின்படி 20 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். DGCA- ஆல் வழங்கப்பட்ட கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்படும். விமானப்படையில் கிரவுண்ட் டியூட்டி பணிக்கு 20 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.56,000- 1,77,000.
தகுதி: பிளஸ் 2 வில் கணித பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: 1.6 கி.மீ., தூரத்தை 10 நிமிடங்களில் ஓடி கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 10 புஷ்அப்கள், 3 சின்அப்கள் எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தேர்வு நடை
பெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
கட்டணம்: ரூ.550/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
என்சிசி- சிறப்பு நுழைவு பிரிவில் சேருபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
மேலும் விமானப்படையால் நடத்தப்படும் நீச்சல் போட்டி, கயிறு ஏறுதல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும். இந்திய விமானப்படையால் ஆன்லைனில் நடத்தப்படும் விமானப்படை பொது நுழைவுத் தேர்வு (Air Force Common Admission Test) மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
விமானப்படை பொது நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜூலை- 2026 முதல் வாரம் பயிற்சி தொடங்கும். விமானப்படையின் பிளையிங் பிரிவில் சேர விரும்புபவர்களுக்கு 62 வாரங்களும், கிரவுண்ட் டியூட்டி பிரிவுக்கு 52 வாரங்களும் இந்திய விமானப் படையால் பயிற்சி வழங்கப்படும்.
https://afcat.cdac.in/AFCAT/என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.07.2025.