பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சென்னையில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் அமைந்துள்ளது.
இப்படிப்புகளில் வரும் கல்வி ஆண்டில் (2026-27) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேட்டை
👇
👆
என்ற இணையதளத்தில் மே 12 (இன்று) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்கண்ட பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ்-2 முடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment