புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் நர்சிங் மற்றும் மருத்துவம் சார்ந்த முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) எம்எஸ்சி, அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவில் - 23, எம்எஸ்சி நர்சிங் – 31, எம்பிஎச் (மாஸ்டர் ஆப் பப்ளிக் ஹெல்த்) - 34, பிபிடிஎன் (போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் நர்சிங்) – 19, இதர பட்டமேற்படிப்பு பாடப்பிரிவுகள் – 12 என மொத்தம் 119 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் ஆன்லைன் முறையில் நுழைவுத்தேர்வு நடத்தி நிரப்பப்படுகிறது. அந்த வகையில், 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மேற்கூறிய பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 2-ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறுகிறது. இந்தப் பாடப்பிரிவுகளுக்கு வரும் ஜூன் 14-ம் தேதி மாலை 4.30 மணி வரை மாணவர்கள் 'www.jipmer.edu.in' என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஜூன் 23-ம் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 2-ம் தேதி காலை 8 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான நுழைவுத்தேர்வு அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, நியூடெல்லி, புதுச்சேரி ஆகிய 10 இடங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வு முடிவு ஜூலை 17ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ வெளியிடப்படும்.
இப்பாடப்பிரிவுக்கான கலந் தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஜிப்மர் தகவல் சிற்றேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம்
👇
💢💢💢
🔰🔰🔰
🙏
No comments:
Post a Comment