Search This Blog

29/07/2021

மாணவர்களுக்கு வருமான மற்றும் சாதி சான்றிதழ் காலதாமதமின்றி வழங்க அமைச்சர் உத்தரவு..!



பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறுவதால் மாணவ-மாணவியர்களுக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து, வருமானச் சான்றிதழ் ,சாதிச் சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்விதக் கால தாமதமுமின்றி உடனடியாகப் பரிசீலித்து, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து இ-சேவை மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளை கூட்ட நெரிசல் இன்றி பெற்றுச்செல்ல ஏதுவாக குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றி சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினைத் தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது எனவும் வருவாய்த்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Apply Certificates online

👉 https://www.tnesevai.tn.gov.in

🙏

24/07/2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்றார் மீராபாய்

 ஒலிம்பிக் பளு


தூக்கும் போட்டியில் 
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான, பளுதூக்குதல் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2021ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில், மகளிருக்கான பளுதூக்கும் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.டார்.

இதில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே எடைப் பிரிவில் சீன வீராங்கனை ஹூ ஜிஹி தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேசிய வீராங்கனை கேண்டிக் விண்டிங் வெண்கல பதக்கம் வென்றார்.

2016ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பி.வி. சிந்து பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதற்கடுத்து தற்போது பளு தூக்கும் போட்டியில் மீராபாய் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று தந்திருக்கிறார்.

மீராபாய் வென்ற பதக்கத்தின் மூலம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம் பிடித்தது.

21/07/2021

ஓபிசி_ சான்றிதழ் வாங்குறது -ஈசி- ஆச்சி.

 


ஓபிசி வகுப்பினருக்கு சான்றிதழ் வழங்கும்போது பெற்றோரின் ஆண்டு வருமானத்தில் ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் தாமதமின்றி சான்று வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது,

இதுதொடர்பாக தமிழக அரசின்பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை முதன்மை செயலர் ஆ.கார்த்திக், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மத்திய அரசு பணிகளிலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வளமான பிரிவினரை நீக்கி 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், வளமான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை (ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம்) ஊதியம் மற்றும்விவசாய வருமானத்தை சேர்க்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் விளக்கப்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஓபிசி வகுப்பினருக்கு சான்றிதழ் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சான்றிதழ் வழங்கும்போது பெற்றோரின் ஆண்டு வருமானத்தில்ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில்கொள்ளாமல் எவ்வித தாமதமின்றி ஓபிசி சான்று வழங்குமாறு சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் அளிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

19/07/2021

ஜூலை 22-ம் தேதி முதல் +2 மதிப்பெண் சான்றிதழ்: இணையதளத்தில் டவுண்லோடு செய்யலாம்

 



 "கொரோனா வரும் 22-ம் தேதி பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  

இன்று காலை 11 மணி அளவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிளஸ் 2 மதிப்பெண்களை வெளியிட்டார். அப்போது, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுகள் துறை இயக்குநர் உஷா ராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் ஏற்கெனவே இணையதளத்தில் உள்ளன. அதனால் மதிப்பெண்களைக் கணக்கிடுவது சிரமமான வேலை அல்ல. வரும் 22-ம் தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். மாணவர்கள் அதனை டவுன்லோட் செய்துகொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை ஜூலை 22-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஏற்கெனவே தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் கொரோனா பரவலைப் பொறுத்து தேர்வு நடைபெறும்.

நன்றி.

18/07/2021

12 STD, MATHS, VOLUME I & II, T/M, Complete EXERCISES ANSWERS KEY BY G.KARTHIKEYAN SIR.



 12 STD

MATHS

 VOLUME I & II

TAMIL MEDIUM  

KEY FOR EXERCISE PROBLEMS

By G.KARTHIKEYAN SIR.





CHAPTER 1--CLICK HERE

CHAPTER 2--CLICK HERE

CHAPTER 3--CLICK HERE

CHAPTER 4--CLICK HERE

CHAPTER 5--CLICK HERE

CHAPTER 6--CLICK HERE

CHAPTER 7--CLICK HERE

CHAPTER 8--CLICK HERE

CHAPTER 9--CLICK HERE

CHAPTER10--CLICK HERE

CHAPTER11--CLICK HERE

CHAPTER12--CLICK HERE


நன்றி

🙏

G.KARTHIKEYAN SIR




13/07/2021

செப்டம்பர் 12 ஆம் தேதி UG-NEET நுழைவுத் தேர்வு



 செப்டம்பர் 12 ஆம் தேதி UG-NEET 

நுழைவுத் தேர்வு













SYLLABUS👉Click Here

INFORMATION BULLETIN👉Click Here

APPLY ONLINE👉https://neet.nta.nic.in









08/07/2021

கேரளாவில் புதிதாக ஜிகா வைரஸ் தொற்று

           


கேரளாவில் புதிதாக பத்து பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் புதிதாக 10 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. கொரோனாவின் அலைகளுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த வைரஸ் தொற்று அறிகுறிகளற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து 13 பேரின் மாதிரிகள் புனேவில் இருக்கும் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 10 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பட்ட 13 மாதிரிகளின் மீதும் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த தொற்று வழக்குகள் அனைத்தும் திருவனந்தபுரத்தை சேர்ந்தது என்று கூறியுள்ளார். இந்த ஜிகா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளபடி, ஜிகா வைரஸ் என்பது கொசுவால் பரவக்கூடிய ஃபிளவி வைரஸ். இது முதன் முதலில் உகாண்டாவில் உள்ள குரங்குகளுக்கு 1947 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், 1952 ஆம் ஆண்டு உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களுக்கு தோன்றியது.

இதனை அடுத்து இந்த வைரஸ் தொற்று ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் ஜிகா வைரஸ் தாக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டது பதிவாகியுள்ளது. மேலும், இந்த ஜிகா வைரஸ் அறிகுறிகள் அற்று இருந்தாலும், இது சிலருக்கு காய்ச்சல், தலைவலி, அரிப்பு, வெண்படலம், தசை மற்றும் மூட்டுவலிகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் நீடிக்கும். இந்த வைரஸ் கொசு கடித்தால் வேகமாக பரவக்கூடியவை, ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் கடிப்பதால் சிக்குன் குனியா, மஞ்சள் காய்ச்சல், டெங்கு போன்றவை ஏற்படும்.

இது பெரியளவில் உடல்பிரச்னைகளை ஏற்படுத்தாவிடிலும், குறிப்பாக கர்ப்பிணி பெண்களை இது கடித்தால் மைக்ரோசெபாலி என்ற பிறப்பு குறைபாடு, மற்றும் சில அசாதாரண பிற பிறவிகளின் குறைபாடுகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது கடுமையாக உள்ளது. கடந்த 10 தினங்களில் 12,000 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு ஜூன் 28-லிருந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

எனவே தமிக மக்கள் கொசுவால் பரவும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பாய் இருங்கள். 

🙏



05/07/2021

CBSE 2021-2022 தேர்வு முறை அறிவிப்பு.

 சிபிஎஸ்இ திங்களன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. 2021-22 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது, இதில் இந்த கல்வியாண்டு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகள் தேர்வுகள் 2 கட்டங்களாக நடைபெறும். ஒவ்வொரு கடத்திலும் சுமார் 50% பாடத்திட்டங்கள் இருக்கும். முதல் கால தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெறும். இரண்டாம் பருவ தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதல் பருவத் தேர்வு 90 நிமிடங்கள் நடைபெறும் என்றும், 2 ஆம் பருவத் தேர்வு 2 மணி நேரம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.