Search This Blog

13/01/2021

வாட்ஸ்அப் விளக்கம்.....! தகவல்களை திருடாதாம்....!!

  
வாட்ஸ்அப் விளக்கம்

வாட்ஸ்அப் வெளியிட்ட விளக்கத்தில் 7 பாயிண்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பாருங்கள்: வாட்ஸ்அப்பால் உங்கள் தனிப்பட்ட செய்திகளைக் காணவோ அல்லது உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது, மேலும் பேஸ்புக்கிற்கும் அது முடியாது. யார் மெசேஜ் அனுப்புகிறார்கள் அல்லது அழைக்கிறார்கள் என்பதற்கான பதிவுகளை வாட்ஸ்அப் வைத்திருக்கிறது.

லொகேஷன் பார்க்க முடியாது

உங்களால் பகிரப்பட்ட லொகேஷன் போன்ற விஷயங்களை வாட்ஸ்அப்பால் பார்க்க முடியாது, மேலும் பேஸ்புக்காலும் பார்க்க முடியாது. வாட்ஸ்அப் உங்கள் காண்டாக்ட்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளாது. வாட்ஸ்அப் குழுக்கள் தனிப்பட்டதாகவே உள்ளன. உங்கள் மெசேஜ்கள் மறைந்து போகும்படி செட்டிங்சில் நீங்கள் அமைக்கலாம். உங்கள் டேட்டாவை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.

அதேநேரம், "விளம்பரங்களுக்காக இந்த தரவை நாங்கள் பேஸ்புக்கோடு பகிரவில்லை. தனிப்பட்ட சாட்களுக்கு என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது. எனவே அவற்றின் உள்ளடக்கத்தை எங்களால் பார்க்க முடியாது." என்றும் கூறியுள்ளது வாட்ஸ்அப். ஆனால் நாம் வாட்ஸ்அப்பில் பேசக் கூடிய விஷயங்கள் வேறு ஒரு தளத்தில் அதுபோன்ற விளம்பரத்தை நமது கண்ணில் படும்படி காட்டுகிறதே அது ஏன்? அதாவது குறிப்பிட்ட ஒரு போன் மாடல் பற்றி சாட் செய்யும்போது, பேஸ்புக்கில் அந்த போன் விளம்பரம் உங்கள் கண்களில் படுவது எப்படி? என்பதே வாடிக்கையாளர்கள் சந்தேகமாக இருக்கிறது.....? ?? ??....

No comments:

Post a Comment