Search This Blog

26/01/2021

பத்ம விருதுகள் அறிவிப்பு

 



தமிழகத்தை சேர்ந்த 11 பேருக்கு விருதுகள் அறிவிப்பு.



மேலும் தெரிந்துகொள்ள
👇





25/01/2021

வாக்காளர் அடையாள அட்டையை தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யலாம்



வாக்காளர் அடையாள அட்டையை கைபேசியில் பதிவிறக்கம் செய்யுங்க....!
இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission) இன்று முதல் மின்னணு வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டை (e-EPIC) செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலியின் உதவியுடன், இப்போது வாக்காளர் அடையாள அட்டைகளையும் (Online Voter Id Card) ஆதார் அட்டைகளைப் (Aadhar Card) போல ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக தொடங்கப்படும். முதல் கட்டம் இன்று முதல் ஜனவரி 31 வரை இயங்கும். இதில், 19 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு இந்த வசதி வழங்கப்படும். இரண்டாவது கட்டம் பிப்ரவரி 1 முதல் தொடங்கும், இதில் அனைத்து வாக்காளர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது, இப்போது வாக்காளர் அடையாள அட்டையின் கடினமான நகலை எப்போதும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இனி உங்கள் தொலைபேசியில் அதை உங்களுடன் எடுத்துச் செல்ல முடியும்.

மொபைல் எண்ணுடன் பதிவு செய்ய முடியும்

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை பதிவு செய்யும் போது மொபைல் எண்ணை வழங்குவது கட்டாயமாகும். வாக்காளர் பட்டியலில் மொபைல் எண் மற்றும் பெயரை உள்ளிட்ட பிறகு, உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும். இதற்குப் பிறகு, OTP (One Time Password) மூலம் e-EPIC பயன்பாட்டைப் பதிவிறக்குவதன் மூலம், நீங்கள் ஒரு புதிய வாக்காளர் அடையாள அட்டையை பதிவு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

பழைய வாக்காளர்கள் KYC-யை பெற வேண்டும்

ஏற்கனவே வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டவர்கள், டிஜிட்டல் அட்டைக்காக தங்கள் முழு விவரங்களையும் மீண்டும் எழுத வேண்டும். இந்த செயல்முறை வங்கியில் உள்ள KYC-க்கு ஒத்ததாகும். இங்கே நீங்கள் உங்கள் மொபைல் எண்ணையும் மின்னஞ்சலையும் கொடுக்க வேண்டும், இதனால் தொலைபேசி மற்றும் அஞ்சலில் தகவல்களை உங்களுக்கு வழங்க முடியும்.

டிஜிட்டல் வசதியுடன் வாக்காளர்களுக்கு இந்த நன்மையும் கிடைக்கும்

இந்த அட்டையின் மிகப்பெரிய நன்மை நேர சேமிப்பு. இப்போது ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில், புதிய வாக்காளர் அட்டைகளை உருவாக்க அல்லது பழைய அட்டைகளில் மாற்றங்களைச் செய்ய எங்காவது அலைய வேண்டிய அவசியமில்லை. உங்கள் தொலைபேசியில் மின்னணு வாக்காளர்கள் புகைப்பட அடையாள பயன்பாட்டை (e-EPIC) பதிவிறக்குவதன் மூலம் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை உருவாக்கலாம்

உங்கள் பெயர் வாக்காளர்  பட்டியலில் சரி பார்க்க👉 Click Here

For e-EPIC.(VoterIDcard)👉 Click here

Web Radio ,HELLO VOTERS Click Here


Today's 11th National Voters’ Day (NVD)

   


Election Commission of India is celebrating 11th National Voters Day on 25th January 2021. 

Honourable President of India, Sri Ram Nath Kovind will be the Chief Guest at the national function being organized in New Delhi by the Election Commission of India. The event will be held at the Ashok Hotel, New Delhi and the Honourable President shall grace the occasion virtually from Rashtrapati Bhawan.

Sri Ravi Shankar Prasad, Honourable Union Minister for Law and Justice, Communications and Electronics and Information Technology will grace the function as the Guest of Honour.

The theme for this year’s NVD, ‘Making Our Voters Empowered, Vigilant, Safe and Informed’, envisages active and participative voters during elections. It also focuses on ECI’s commitment towards conducting elections safely during the COVID-19 pandemic.

The National Voters’ Day has been celebrated on January 25 every year since 2011, all across the country to mark the foundation day of Election Commission of India, i.e. 25th January 1950. The main purpose of the NVD celebration is to encourage, facilitate and maximize enrolment, especially for the new voters. Dedicated to the voters of the country, the day is utilized to spread awareness among voters and for promoting informed participation in the electoral process. New voters are felicitated and handed over their Elector Photo Identity Card (EPIC) in the NVD functions.

During the event, the Honourable President of India will confer the National Awards for the year 2020-21 and launch ECI’s Web Radio:‘Hello Voters’. The National Awards for the Best Electoral Practices will be conferred on State and District level officers for their outstanding performance in the conduct of elections in different spheres such as IT initiatives, Security Management, Election Management during COVID-19, Accessible Election and contribution in the field of voter awareness and outreach. National Awards will also be given to important stakeholders like national icons, CSOs and media groups for their valuable contribution towards voters’ awareness. 

ECI’s Web Radio:‘Hello Voters’: This online digital radio service will stream voter awareness programmes. It will be accessible through a link on the Election Commission of India website. The programming style of Radio Hello Voters has been envisaged to match that of popular FM radio services. It will provide information and education on electoral processes through songs, drama, discussions, spots, stories of elections etc. in Hindi, English and regional languages from all over the country. 

Sri Ravi Shankar Prasad, Honourable Union Minister for Law and Justice, Communications and Electronics and Information Technology will launch the e-EPIC programme and distribute e-EPICs and Elector Photo Identity Cards to five new voters.  e-EPIC, a digital version of the Elector Photo Identity Card can be accessed through the Voter Helpline App and websites https://voterportal.eci.gov.in/ and https://www.nvsp.in/.  

Honourable Minister, Mr. Prasad will also release three publications of the Election Commission during the event. Copies of these documents will be presented to the Honourable President of India. 

Details of the publications are given below:

Conducting Election During Pandemic- A Photo Journey: This photo book encapsulates the challenging journey of conducting elections amidst a pandemic.  The Commission successfully conducted several elections in the country, beginning with the Biennial Election to the Rajya Sabha.  This was followed by Legislative Assembly Elections in Bihar, one of the biggest such exercises throughout the world during the pandemic. Bye-Elections were also conducted for 60 constituencies in various states of the country.  

SVEEP Endeavours: Awareness initiatives during Lok Sabha Election, 2019: This book provides a detailed insight into voter awareness interventions, innovations and initiatives during the 17th General Election, conducted in 2019.  It documents the spirit of ‘Desh Ka Mahatyohar’, the biggest festival of democracy celebrated across the nation cutting through the barriers of gender, caste, creed and religion.

Chalo Karen Matdaan: It is a comic book which aims at voter education in a fun and thought-provoking way. Targeting young, new and future voters, this comic contains interesting and relatable characters to educate voters at large on electoral processes.

24/01/2021

Today (24/1/2021) is last day .School safety and security course conducted by TNTP



 Dear teachers today (24/1/2021)is the last date for school safety and security course conducted by TNTP.


👆 screenshot fom TNDIKSHA WEBSITE

For joining the course:👉Click here

23/01/2021

9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு குறைவு...!

             தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம், முக கவசம், சமூக இடைவெளி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அரசு பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். 10 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. 

வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 1000 பேர் உள்ள பள்ளிகளில் 40 வகுப்புகளாக பிரிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. 10-ம் வகுப்புக்கு 20 வகுப்பறைகளும், 12-ம் வகுப்பிற்கு 20 வகுப்பறைகளும் தனித்தனியாக பிரித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 

மாணவர்கள் நெருக்கடி இல்லாமல் காற்றோட்ட கல்வி கற்க ஏதுவாக வகுப்பறைகள் பல கட்டிடங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் 9,11ஆம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை. இதனால், கொரோனா முழுமையாக குறையும் வரை 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளார்.

20/01/2021

NO CHANGE IN IIT-JEE & NEET syllabus.


 

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா?

 

 


சென்னையில் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்கள். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

14/01/2021

Polio National Immunisation Day rescheduled to January 31

 

Polio National Immunisation Day rescheduled to January 31




The National Polio Immunisation Programme, has rescheduled to January 31. The National Immunisation Day (NID), commonly known as the Pulse Polio Immunisation programme, was scheduled for January 17 across India.

children in the age group of 0-5 years are administered polio drops, has rescheduled to January 31.

The National Immunisation Day (NID), commonly known as the Pulse Polio Immunisation programme, was scheduled for January 17 across India.

The Union Health Ministry had communicated the decision to defer the polio immunisation programme to all states through a letter on January 9.

"This is to inform that due to unforeseen activities, it is decided to postpone the scheduled Polio NID (National Immunisation Day) round from January 17, 2021 till further notice," according to the letter sent to the Principal Secretary in the Health department of all states.

Union Minister for Health and Family Welfare Harsh Vardhan had said on January 8 that polio immunisation will be carried out on January 17.

"We have decided that on January 17, we are going to have our national immunisation days for polio which will run for two to three days," he had said adding the drive covered aspects like identifying and immunising children left out from vaccination.

The vaccination is very essential to ensure that the nation maintained overall immunity levels against polio virus, he had said.


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஹேப்பி பொங்கல்....!

தித்திக்கும் 
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களுடன்
என்றும் அன்புடன்
சு.ச
thiruvaimaths.blogspot.com

13/01/2021

வாட்ஸ்அப் விளக்கம்.....! தகவல்களை திருடாதாம்....!!

  
வாட்ஸ்அப் விளக்கம்

வாட்ஸ்அப் வெளியிட்ட விளக்கத்தில் 7 பாயிண்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பாருங்கள்: வாட்ஸ்அப்பால் உங்கள் தனிப்பட்ட செய்திகளைக் காணவோ அல்லது உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது, மேலும் பேஸ்புக்கிற்கும் அது முடியாது. யார் மெசேஜ் அனுப்புகிறார்கள் அல்லது அழைக்கிறார்கள் என்பதற்கான பதிவுகளை வாட்ஸ்அப் வைத்திருக்கிறது.

லொகேஷன் பார்க்க முடியாது

உங்களால் பகிரப்பட்ட லொகேஷன் போன்ற விஷயங்களை வாட்ஸ்அப்பால் பார்க்க முடியாது, மேலும் பேஸ்புக்காலும் பார்க்க முடியாது. வாட்ஸ்அப் உங்கள் காண்டாக்ட்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளாது. வாட்ஸ்அப் குழுக்கள் தனிப்பட்டதாகவே உள்ளன. உங்கள் மெசேஜ்கள் மறைந்து போகும்படி செட்டிங்சில் நீங்கள் அமைக்கலாம். உங்கள் டேட்டாவை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.

அதேநேரம், "விளம்பரங்களுக்காக இந்த தரவை நாங்கள் பேஸ்புக்கோடு பகிரவில்லை. தனிப்பட்ட சாட்களுக்கு என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது. எனவே அவற்றின் உள்ளடக்கத்தை எங்களால் பார்க்க முடியாது." என்றும் கூறியுள்ளது வாட்ஸ்அப். ஆனால் நாம் வாட்ஸ்அப்பில் பேசக் கூடிய விஷயங்கள் வேறு ஒரு தளத்தில் அதுபோன்ற விளம்பரத்தை நமது கண்ணில் படும்படி காட்டுகிறதே அது ஏன்? அதாவது குறிப்பிட்ட ஒரு போன் மாடல் பற்றி சாட் செய்யும்போது, பேஸ்புக்கில் அந்த போன் விளம்பரம் உங்கள் கண்களில் படுவது எப்படி? என்பதே வாடிக்கையாளர்கள் சந்தேகமாக இருக்கிறது.....? ?? ??....

12/01/2021

19 ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது...! தமிழக அரசு அறிவிப்பு...!!


சென்னை: ஜனவரி 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோர், பள்ளிகளைத் திறக்க இசைவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் பள்ளிகளை இயக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் 2021 ஜனவரி 6 முதல் 8 வரை கருத்து கோரப்பட்டது.

இக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டும், வரும் 19.1.2021ம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணாக்கர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10/01/2021

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு. ! !! !!

               
 வரும் 17ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் முகாமை மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 16ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்க உள்ளதால் ஒரே நேரத்தில் மூன்று தடுப்பு மருந்துகள் அளிப்பதில் சிரமம் இருப்பது காரணமாக போலியோ சொட்டு மருந்து கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.