Search This Blog

05/01/2021

மே 9 இல் தேசிய சட்ட நுழைவுத்தேர்வு (CLAT) – last date 31/3/2021

தேசிய சட்டக்கல்லூரிகள் மற்றும் 22 பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பிறகாக சேர கிளாட் (CLAT) எனும் சட்ட நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். தற்போது நடப்பு கல்வியாண்டிற்கான விண்ணப்பம் மற்றும் தேர்வு தேதி குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

சட்ட நுழைவுத்தேர்வு:

முதுகலை சட்டப் படிப்பில் சேர, எஸ்சி & எஸ்டி வகுப்பினர் குறைந்தபட்சம் 45% மற்றும் பிற வகுப்பினர் 50% மதிப்பெண்களை சட்ட இளங்கலை பட்டப்படிப்பில் பெற்றிருக்க வேண்டும். இதற்கு வயது வரம்பு கிடையாது. இளங்கலை சட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி & எஸ்டி மாணவர்கள் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.


 For More information  contact : https://consortiumofnlus.ac.in/

04/01/2021

மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்காலம் 33 ஆண்டுகள் -ஏப்ரலில் அமலாகிறது ம

 மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்காலம் 33 ஆண்டுகள் -ஏப்ரலில் அமலாகிறது






பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்துகேட்பு கூட்டம் 08.01.2021வரை நடத்திட உத்தரவு.

பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்துகேட்பு கூட்டம் 08.01.2021வரை நடத்திட உத்தரவு.

பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் . 34462 / பிடி 1 / இ 1 / 2020 நாள் .4.11.2020 

தற்போது 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்விநலன் கருதி பொதுதேர்வு எதிர்கொள்ள ஏதுவாக மாணவர்களை தயார் செய்யவேண்டும் என்பதால் , பள்ளி திறந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்கள் கற்பிப்பது இன்றியமையாதது ஆகும் . எனவே 08.01.2021 வரை அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் இத்துடன் இணைக்கப்பபட்டுள்ள COVID - 19 க்கான வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறப்பது சார்ந்து கருத்துகேட்பு கூட்டம் பள்ளிகளின் வசதிக்கேற்ப நடத்தப்பட வேண்டும் என அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

👉இயக்குனர் செயல்முறை


👉Covid-19 வழிகாட்டி நெறிமுறை

TNPSC GROUP I PRELIMINARY EXAM 03.01.2021,Answers Key

 



👉 Download Now👈





கருணை அடிப்படையில் வேலை-புதிய அரசாணை.

 கருணை அடிப்படையில் வேலை - புதிய அரசாணை



மருத்துவ  காரணங்களுக்காக 53 வயதுக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், பணியின் போது இறக்கும் அரசு ஊழியரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு புதிய நடைமுறையை வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கருணை அடிப்படையில் பணி பெறுவதற்கு, மறைந்த அரசு ஊழியர்கள் இறப்பு நிகழ்ந்த மூன்று ஆண்டுகளுக்குள், விண்ணப்பம் செய்திட வேண்டும்.

கருணை அடிப்படையிலான பணி கள் c&d பிரிவு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அரசு ஊழியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் இரண்டு லட்ச ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும் என்று உத்தரவும் புதிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வயது வரம்பு 35 என நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:-

அரசுப் பணியின் போது மரணம் அடையும் ஊழியா்களின் மனைவி அல்லது கணவா், மகன் அல்லது மகளுக்கு கருணை அடிப்படையிலான பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டமானது கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள வரன்முறைகள் அவ்வப்போது திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றன.

கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பதை ஒரு உரிமையாகக் கோர முடியாது எனவும், பணியின் போது மரணம் அடையும் ஊழியா்களின் குடும்பத்தினா் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் இந்தத் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது. இதேபோன்ற உத்தரவுகள் கடந்த காலங்களில் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்குகளிலும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன் விவரம்:-

பணியின் போது இறக்கும் அரசு ஊழியா்கள், மருத்துவக் காரணம் தொடா்பாக 53 வயதுக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியா்கள், ராணுவத்தில் பணியாற்றும் போது கொல்லப்பட்டாலோ அல்லது மாற்றுத் திறனாளியாக மாறினாலோ அவா்களது வாரிசுகளுக்கு அரசுப் பணி அளிக்கப்படும். மாயமாகும் அரசு ஊழியா்களை இறந்தவா்கள் என நீதிமன்றம் அறிவித்தாலோ, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அந்தக் காலத்தில் இறந்தாலோ, சமுதாய மோதல்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோந்தவா்கள் கொல்லப்பட்டாலோ அவா்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி அளிக்கப்படும்.

மறைந்த அரசு ஊழியரின் மகன், மணமாகாத மகள், மனைவி, கணவா், சட்டப்பூா்வமாக தத்தெடுக்கப்பட்ட மகன், தத்தெடுக்கப்பட்டு மணமாகாத மகள், கணவனை இழந்த மகள், விவாகரத்து பெற்ற மகள் ஆகியோருக்கு கருணை அடிப்படையில் பணி கிடைக்கும். மேலும், திருமணம் செய்து கொள்ளாத அரசு ஊழியா்கள் மரணம் அடைதால் அவா்களது தந்தை அல்லது தாய் அல்லது திருணமாகாத சகோதரா்கள், சகோதரரிகளுக்கு பணி அளிக்கப்படும்.

கருணை அடிப்படையிலான பணி என்பது அரசுப் பணியில் இருந்து இறந்தவரின் கணவன் அல்லது மனைவிக்கு அளிக்கப்படும். அல்லது அவா்கள் யாரை பரிந்துரை செய்கிறாா்களோ அவா்களுக்கு வழங்கப்படும். அரசு ஊழியா்கள் இறந்த தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயது 50. மகன் அல்லது மகளாக இருந்தால் அவா்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் குரூப் சி மற்றும் டி பிரிவு பணிகளே அளிக்கப்படும்.

கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டவா்களுக்கு ஓராணடுக்குள் அதனை வரன்முறைப்படுத்த வேண்டும்.

யாருக்குக் கிடைக்காது: விருப்ப ஓய்வு பெற்றவா்கள், தாற்காலிக பணி நியமனம் செய்யப்பட்டோா், தினக்கூலி, ஒப்பந்த அடிப்படை ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி அளிக்கப்படாது என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.


வேலை வாய்ப்பைப் பெற இணைக்க வேண்டியவை:

  1. இறந்த அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் சான்றொப்பமிட்ட நகல்.

  2. அந்தப் பகுதி வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வாரிசுரிமைச் சான்று.

  3. பணியில் இருந்தவரின் இறப்புச் சான்று.

  4. மறுப்பின்மைச் சான்று.

  5. குடும்பத்தின் வருமானச் சான்று.

  6. வயதுச் சான்று.

02/01/2021

12 STD, QUIZ,SUB:MATHEMATICS, VOLUME II, E/M,BOOK BACK ONE MARK QUESTIONS

 

MATHEMATICS

BOOK BACK ONE MARK QUESTIONS,
 ENGLISH MEDIUM

⚡ மாணவர்கள் எத்தனை முறையும் விடையளிக்கலாம்


📈 முழு மதிப்பெண் பெறும்  வரை முயற்சிக்கலாம்📈

✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅

👉CHAPTER :7👈

📈📈📈📈📈📈📈📈📈📈📈📈📈📈📈📈📈


👉CHAPTER : 8👈

📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌


👉CHAPTER : 9👈

📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝


👉CHAPTER : 10👈

📔📔📔📔📔📔📔📔📔📔📔📔📔📔📔📔📔📔📔📔


👉CHAPTER : 11👈

⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛


👉CHAPTER : 12👈

📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘

🙏

அமைப்பு
சு.சரவணன் (மு.க.ஆ)
அ.மே.நி.ப
ஆனைக்குளம்
தென்காசி(மா)





27/12/2020

IIT JEE MAIN (2021) தமிழில் எழுதலாம்.






News & Events
IIT JEE MAIN (2021) 👉INFORMATION BOOKLET

For more information contact : Click here




 

இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்கப்படுமா ? ?? ???

 


இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்,’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

   நடப்பு கல்வியாண்hடில், கற்பித்தல் பணி நடக்காததால், கடந்த கல்வியாண்டு முடிவில், எந்த நிலையில் மாணவர் இருந்தாரோ, அதே நிலையில், அடுத்த கல்வியாண்டில் தொடர்வதை, பூஜ்ஜியம் கல்வியாண்டு என்கின்றனர். 



   குறிப்பாக, 2019 - 20 கல்வியாண்டில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர், 2021 - 22 கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பு படிக்க நேரிடும். இம்முடிவை, பள்ளி கல்வித்துறை மட்டும் தன்னிச்சையாக செய்ய முடியாது. உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறைகள் இணைந்து, தொடக்க கல்வி முதல், முதுகலை படிப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்படி, பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்க வேண்டும். அதேபோல், மாநிலம் வாரியாக, இம்முடிவு எடுத்தாலும், முறையானதாக இருக்காது. நாடு முழுதும், ஒரே மாதிரி, பூஜ்ஜியம் கல்வியாண்டு அமல்படுத்தினால், யாருக்கும் பாரபட்சம் இருக்காது. இவ்வாறு கூறினார்.





22/12/2020

IIT - JEE தேர்வுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி...!

 




More details : Click here

இன்று கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள்.

 
கணித மேதை ராமானுஜம்.

ஜீரோவின் ஹீரோ! : இன்று கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள்.

ஈரோட்டில் பிறந்து இங்கிலாந்தில் கணிதத் துறையில் உச்சம்தொட்டவர் ராமானுஜன். கணிதம் சம்பந்தப்பட்ட நுாலினை 13 வயதில் இரவல் வாங்கி படித்தது முதல் அவரது மனம் கணிதத்தில் லயித்தது. இளைஞர் பருவத்தில் சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை பார்த்தார். லண்டனில் பிரபல கணித அறிஞர் ஹார்டிக்கு, தன்னுடைய கணித ஆர்வம் பற்றியும், மாணவராக சேர்ந்து பயில்வதற்கான விருப்பத்தையும் கடிதம் மூலம்எழுதினார். 

சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.

1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது.  அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார்.  பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே.  உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன்! அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்!

ராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார்! அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம்! “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.

பன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney’s Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.

பதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார்.  இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது.  அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.

1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.

கணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.

மேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக [Madras Port Trust Clerk] அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள்.  அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார்!  அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.

ராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம்!  அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள்! முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. டின்னருக்குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood],  புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும், [Formulae] கணித மெய்ப்பாடுகளையும் [Theorems] மெதுவாகப் புரட்டிப் பார்த்துப் பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள்.  சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள்.  ஒரு பைத்தியகாரனின் முறை கெட்ட கிறுக்கல் அல்ல அவை என்று வியப்படைந்தார்கள்!

ஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் [University of Madras], இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், டிரினிடிக் கல்லூரியும் அவருக்கு உதவிநிதி கொடுக்க முன்வந்தன. 1914 ம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜன் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை ஆங்கில, ஈரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions],  ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை “பிரதம வகுப்பினம்” [Prime Divisors] கொள்ளலாம் ? எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய “நேரியல் முழு இலக்கங்கள்” [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் ?
தெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார்! சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை! ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது!
ராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை! அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.

பின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே! அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80! ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை! “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி! ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்!

1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின்  ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே!  ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது! வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது!  முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது!  அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை! அடிக்கடி சானடோரியத்துக்கு [Sanatorium] ராமானுஜன் போக வேண்டிய தாயிற்று.  அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன!

1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி இங்கிலாந்தில் வாழ முடியாது, ராமானுஜன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை! நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை! தனது 32 ம் வயதில், இந்தியக் “கணிதச் சுடர்விழி” [Maths Icon] ராமானுஜன், 1920 ஏப்ரல் 26 ம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார்.  உயிர் நழுவிச் செல்லும் கடைசி வேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்றும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.

ஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம்! ராமானுஜன் கற்றது கடுகளவு! கணித்தது கால் பந்தளவு! என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது!

கட்டுரை திரு.பத்ரி அவர்கள் வலைபதிவிலிருந்து மீள்பதிவு)

32 வயதில் காச நோயால் பாதிக்கப்பட்டார். ஏப்.,26 1920ல் கும்பகோணத்தில் உயிர் துறந்தார். லிட்டில்வுட் என்ற அறிஞர், ''18ம்நுாற்றாண்டை சேர்ந்த ஸ்விட்சர்லாந்தின் எய்லர் மற்றும் 19ம் நுாற்றாண்டின் ஜகோபின் ஒன்று சேர்ந்த உருவம் ராமானுஜம்,'' என போற்றியுள்ளார். 1962ம் ஆண்டு மத்திய அரசு, ராமானுஜத்தின் 75 வது பிறந்த நாளில் அஞ்சல் தலையை வெளியிட ஒரே நாளில் விற்றுத் தீர்ந்ததும், 'ஜீரோ'விற்கு மதிப்பு அறித்தவரின் பெருமையை சொல்லியது.

இன்று கணிதமேதை இரமானுஜம் பிறந்த நாள்

21/12/2020

டிசம்பர் 23/24 இரு தேதிகளில் சென்னையிலுள்ள institute of mathematical sciences நிறுவனம் (தமிழில்) 8 முதல் 10ஆம் வகுப்புகற்பிக்கும் கணித அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி.

வணக்கம். டிசம்பர்  23/24 இரு தேதிகளில்
சென்னையிலுள்ள institute of mathematical sciences
நிறுவனம் தமிழில் கணித அறிவியல் ஆசிரியர்களுக்கான
ஒரு பயிற்சி நிகழ்த்தவுள்ளது. 8 முதல் 10ஆம் வகுப்பு
கற்பிக்கும் ஆசிரியர்கள் பங்குபெறலாம்.

பதிவு செய்தல் அவசியம், விவரம் கீழே காண்க.

அனைவருக்கும் வணக்கம்,

வகுப்புகள் VIII-X ஆசிரியர்களுக்கு கணித மற்றும் அறிவியல் தலைப்புகளில் இரண்டு நாள் விக்யான் பிரதீபா பயிற்சி வகுப்பை ஐ.எம்.எஸ்.சி ஒருங்கிணைக்கயுள்ளது.

இடம்: இணையவழி
தேதி: 23 மற்றும் 24 டிசம்பர் 2020, 11:00--13:00 IST.
மேலும் தெரிந்துகொள்ள மற்றும் பதிவுசெய்ய:


விக்யான் பிரதீபா, வகுப்புகள் VIII முதல் X வரையிலான மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித திறனை தொடர்ச்சியாக பேணி வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்திய அரசின் ஒரு திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின்  மையப்பகுதியாக கற்றல் பிரிவுகள் விளங்குகிறது. இவை ஆர்வமுள்ள மாணவர்களின் அறிவியல் வட்டங்களின் ஒருபகுதியாக இருக்கலாம். பாடத்திட்டத்துடன் நெருங்கிய தொடர்பை இப்பிரிவுகள் கொண்டிருந்தாலும், பாடப்புத்தங்களைக் கடந்த அறிவியல் மற்றும் கணித பரிமாணங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும்.

இக்கற்றல் பிரிவுகளில் சில சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றை உங்களுடன் பகிர்ந்து கலந்துரையாட ஆர்வமாக உள்ளோம். மூன்றாவது முறையாக முன்னெடுக்கப்படும் இப்பயிற்சி வகுப்பு, முதன்முறையாக தமிழில் நடத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கல்விசார் தலைமையாக ஹோமிபாபா அறிவியல் கல்வி மையம் (ஹ்.பி.சி.எஸ்.இ) நியமிக்கப்பட்டுள்ளது. கணித அறிவியல் நிறுவனம் (ஐ.எம்.எஸ்.சி) இத்திட்டத்தின் பிராந்திய மையமாக பணிபுரியும்.

நன்றி
விக்யான் பிரதீபா குழு
கணித அறிவியல் நிறுவனம்



------------------------------------
English version:

Subject: Vigyan Pratibha Regional Workshop (Tamil) 2020
 
Dear Sir/Madam,
 
IMSc is organizing a 2 day Vigyan Pratibha Teachers workshop (in Tamil) on Mathematics and Science-material for class VIII-X.
 
 
Venue: Online
Date: 23 & 24 Dec, 11:00--13:00 IST.
For more details and registration: https://www.imsc.res.in/outreach/VPTam2020/
 
Vigyan Pratibha (https://vigyanpratibha.in/) is a Government of India for extended nurture of talent in Science and Mathematics among school students of Class VIII to X in the country. The core of the project would be in the form of Learning Units that can be part of science circles for interested students. These units will be closely related to the school curricula, but would expose students to dimensions of science and mathematics beyond the textbooks.
 
Some of these Learning Units, have been recently translated into Tamil and we are excited to introduce and discuss some of them with you. This is the third such workshop we are conducting for the teachers and the first in Tamil.
 
Homi Bhabha Center for Science Education (HBCSE) has been assigned the academic leadership of the program. The Institute of Mathematical Sciences (IMSc) will serve as a regional center for the program.
 
 
Thank you
Vigyan Pratibha Team
The Institute of Mathematical Sciences